Advertisement

இனிமேலா நடக்கப் போகுது?

இனிமேலா நடக்கப் போகுது?

நீலகிரி மாவட்டம், ஊட்டியில், நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கத்தின், 62வது ஆண்டு விழா, பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'நீலகிரி மாவட்டத்தில் வாழும், ஆறு வகை பழங்குடி மக்களின் குடியிருப்புகளில், கல்வி, சுகாதார திட்டங்கள், நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பழங்குடியின கிராமங்களில், சுகாதார திட்டங்களுக்கு, அதிகளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என்றார்.விழாவில் பங்கேற்ற, பத்திரிகையாளர் ஒருவர், 'சுதந்திரம் வாங்கி, ௭௨ ஆண்டு ஆச்சு... இனிமேலா, முக்கியத்துவம் அளிக்கப் போறாங்க...' என்றதும், அருகிலிருந்தோர், அதை ஆமோதித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement