Advertisement

இப்போ பேசி என்ன பயன்?

இப்போ பேசி என்ன பயன்?

புதுச்சேரி, காங்., கட்சி அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த, முன்னாள் பிரதமர், ராஜிவ் நினைவு நாள் நிகழ்ச்சியில், அகில இந்திய காங்., செயலர்,சஞ்சய் தத் பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'இளைஞர்கள், பெண்கள் மீது நம்பிக்கை கொண்ட ராஜிவ், ஓட்டு போடும் வயதை, 21லிருந்து, 18 ஆக குறைத்தார். காங்., மூத்த தலைவர்களே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும்,பொருட்படுத்தாமல் வயதைக் குறைத்தார்.'பெண்கள், அதிகாரத்திற்கு வர வேண்டும் என, அவர் விரும்பினார். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தர, காரணமாக இருந்தார். காங்., நிர்வாகிகளின் தேர்தல் உழைப்பிற்கு, நிச்சயம் பலன் உண்டு. கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலி' என்றார்.இதைக் கேட்ட, காங்., நிர்வாகிகள் சிலர், 'இதையெல்லாம், தேர்தல் பிரசாரத்தில் பேசியிருந்தால், ஏதாவது பலன் கிடைத்திருக்குமே...' என,சலிப்படைந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement