Advertisement

'ஹே ராம்...' என அனுதாபப்படுகிறேன்; வேறு வழியில்லை!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலின் சமீபத்திய 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஹிந்து தான். அவர் பெயர் கோட்சே' என்ற பேச்சு ஹிந்துக்களின் இதயத்தில் மிகுந்த வலியையும், அவர் மீது வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கமலின் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள ஹிந்து விரோத காட்சிகளையும் வசனங்களையும் மேற்கோள் காட்டி சாடியுள்ளனர்.'ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் நுாலகங்களை அழித்தால் போதும்' என்பது உலகம் அறிந்த உண்மை. உலகின் பல இன அழிப்புகளில் இந்த உத்தியே கடைபிடிக்கப்பட்டுள்ளது; கடைபிடிக்கப்படுகிறது. ஹிந்து மதத்தின் அடித்தளமே வேதங்களும், உபநிஷத்துகளும், இதிகாச புராணங்களும் தான். அவை பல்லாயிரம் ஆண்டுகளாக, தலைமுறை தலைமுறையாகப் பேணிக்காத்து வரப்படுகின்றன.இவற்றை பேணிக் காப்பவர்களை கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தி, மதிப்பிழக்கச் செய்து அவர்களை அழிப்பதன் மூலம் ஹிந்து மதத்தின் ஆணி வேரையே அசைத்து பலவீனப்படுத்த பல சக்திகள் இயங்குகின்றன. அவற்றின் முகங்களாக சிலர் செயல்படுகின்றனர். அவர்களில் ஒருவரே கமல்.எனவே அவரிடம் சில கேள்விகளுக்கு விளக்கம் பெற விரும்புகிறேன்.


முதலில் அவர் பெயரிலிருந்தே துவங்குவோம். 'கமலஹாசன்' என்று ஆரம்பத்தில் அறியப்பட்ட நீங்கள் 'கமல் ஹாசன்' என பெயரை மாற்றிக் கொண்டதற்கு காரணம் உண்டு. உங்களின் எதிரணி ரசிகர்கள் உங்கள் பழைய பெயரின் முதல் எழுத்தை அழித்து கேவலப்படுத்தியது தான் என்பது பலர் அறியாத ரகசியம். யாரோ எழுதிய வசனத்தைப் பேசி யாரோ பாடிய பாடலுக்கு உதடு அசைத்து, யாரோ சொல்லிக் கொடுத்த நடன அசைவுகளையும், சண்டைக் காட்சிகளையும், அப்படியே செய்து விட்டுச் செல்லும் உங்களுக்கு 'நான் ஒரு நடிகன்' என்ற கர்வம் தேவையா? உங்களைத் துணை நடன இயக்குனர் நிலையிலிருந்து கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்த்திய இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், அனந்து, என்.ஆர்.கிட்டு, ஹரி ஹரசுப்ரமணியன் போன்ற அனைவரும் ஹிந்துக்கள் தான் என்பதை எவ்வாறு மறந்தீர்கள்.


ஆகஸ்ட் 15, 1998 சுதந்திர தினத்தன்று பாடலாசிரியர் வைரமுத்துவால் நீங்கள் பேட்டி காணப்பட்ட போது அவர் கேட்ட ஒரு கேள்வி கேட்டார்.
'நீங்கள் ஏன் பூணுால் அணிவதில்லை?'
அதற்கு உங்கள் பதில்: 'முதுகு சொறிந்து கொள்ளப் பல வழிகள் இருப்பதால் பூணுால் தேவைப்படவில்லை!

'எவ்வளவு கேலி இறுமாப்பு!பிராமணர்கள் தங்கள் உயிர் மூச்சாகக் கருதுவதும், ஒருவனை பிரம்மச்சாரி என்ற உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதும், அதன் பின் இறக்கும் வரை ஒவ்வொரு ஆவணி அவிட்டத்தன்றும் வேத மந்திரங்களை, ஓதி அக்னி வளர்த்து புதுப்பித்து, எந்நேரமும் அணிந்திருப்பதுமாகிய பூணுால் உங்களுக்கு முதுகு சொறியும் பொருளா உங்களைப் பார்த்து பரிதாபப்பட தான் தோன்றுகிறது. உங்கள் வாழ்க்கையில் எல்லாமே 'அரிப்பெடுத்தால் சொறிந்து கொள்ளும்' விஷயமாகவே அமைந்து விட்டது.கடந்த ஆண்டு 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நடிகை ஒருவர் 'உங்களுக்கு சுலோகங்கள் ஏதாவது தெரியுமா...' என்று வினவ உடனே நீங்களும் பெருமையாக 'நான் சிறுவனாக இருந்த போது வீட்டில் தினமும் சுலோகங்கள் படிக்க சொல்வர்; மாட்டேன் என்றால் அடி விழும் ' என ஆரம்பித்து, 'கவுசல்யா சுப்ரஜா...' என ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதத்தின் துவக்க வரிகளை ஷூ அணிந்த காலோடும் திலகமிடாத நெற்றியோடும் ஒப்புவித்தீர்களே நினைவிருக்கிறதா வெங்கடேச சுப்ரபாதம் ஒன்றும் மனப்பாடச் செய்யுள் பகுதியல்ல... நினைத்தவர் நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் ஒப்புவிப்பதற்கு! அந்த சுலோகம் பல கோடி ஹிந்துக்கள் அதிகாலையில் காதாற கேட்டு மன அமைதியுடன் அன்றைய நாளைத் துவக்கும் மந்திரம் ஆகும்.இதன் மூலம் நீங்கள் சாதிக்கத் துடிப்பது என்ன?


நீங்கள் தடம் மாறியதால் வாலறுந்த நரி போல அனைத்து பிராமணர்களையும் உங்களைப் போல மாற்ற நினைப்பதும், அதன் பொருட்டு அவர்களைக் கேலியும், கிண்டலுமாக பேசி வருவதும் உங்களின் வக்கிர சிந்தனையையே பறைசாற்றுகிறது.சமீப காலமாக உங்களை நீங்கள் 'மஹாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன்' என அறிமுகப் படுத்தி வருகிறீர்கள்.நம் நாட்டில் 'ராம ராஜ்யம்' மலர வேண்டுமென உளமாற விரும்பியவர் காந்தியடிகள். தன் உயிர் பிரியும் வேளையிலும் கூட 'ஹே ராம்' என முனகியபடியே ராமபிரானின் திருவடியைச் சென்றடைந்தவர்.நீங்கள் அவரிடமிருந்து கடன் வாங்கிய வார்த்தையை உங்கள் படத்தலைப்பாக வைத்துக் கொண்டீர்கள். அவர் தன் வாழ் நாள் முழுவதும் மது, மாது, சூது, புலால் தவிர்த்து ஒழுக்கத்துடன் தவவாழ்க்கை வாழ்ந்தவர். ஒற்றைக் கதராடையுடன் எளிமையான ஆசிரம வாழ்க்கை வாழ்ந்தவர்.தன் தந்தையின் பேனாவைத் திருடியதற்காக வருந்தியவர். சுதந்திரப் போராட்டத்தின் போது மக்கள் நன்கொடையாக அளித்த நகைகளில் ஒரு சங்கிலியை அணிந்து கொள்ள காந்தியடிகளின் மனைவி கஸ்துாரி பாய் விரும்பியபோது உடனடியாக மறுத்தவர்.


இப்போது சொல்லுங்கள்! மேலே கூறப்பட்டுள்ள காந்தியடிகளின் வாழ்க்கை நெறிகளில் எவற்றை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடைபிடித்து வருகிறீர்கள். அவரின் கொள்ளுப்பேரன் என உரிமை கோருகிறீர்களே வெட்கமாக இல்லை தமிழகத்தில் உள்ள இரு பெரும் திராவிடக் கட்சிகளையும், மத்தியில் உள்ள இரு பெரும் தேசியக் கட்சிகளையும் பகைத்துக்கொண்டதால் உங்களின் திரையுலக வாழ்வு அஸ்தமித்து விட்டது. ஹிந்துக்களைப் புண்படுத்தி பகைத்துக் கொண்டதால் உங்களின் அரசியல் வாழ்வும் அஸ்தமித்து விட்டது.இனி உங்கள் வாழ்க்கை எப்படி அமையும் என்பதை உங்கள் வாயாலயே சொல்ல வைப்பதென்றால் 'கொட்டும் மழைக்காலம் உப்பு விக்கப் போனேன். காற்றடிக்கும் நேரம் மாவு விக்கப் போனேன்' என்பதாகத் தான் இருக்கும்.உங்களைப் பார்த்து 'ஹே ராம்...' என அனுதாபப்படுவதைத் தவிர வேறு வழியே இல்லை!


- ஹ.ரவிச்சந்திரன்

சமூக ஆர்வலர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

 • BALAMURUGAN.E - CHENNAI,இந்தியா

  நான் கடந்த 25 வருடங்களாக கமல் நடிப்புக்கு ரசிகன். இப்பொழுது அதை நினைத்து வருந்துகிறேன். இனிமேல் கமல் செய்யும் அனைத்தையும் எதிர்ப்பேன்.

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  புலம்பல் ஓவரா இருக்கே.

 • G.Krishnan - chennai,இந்தியா

  சமூக ஆர்வலர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் கமலஹாசனை அக்கு வேறு ஆணி வேறாக அலசியிருக்கிறார் . . . நூறு சதவிகிதம் உண்மையை ஏழுதியிருக்கிறார். . . . .கமல் அவர்கள் மூன்று மனைவிகளுக்கு மேல் முறையற்ற வாழ்க்கை நடத்தி அதுவும் நிலைக்காமல் போனதால், அவர் பிறந்த மதத்தை அவருடைய கெட்ட பழக்க வழகிகங்களால் அவரால் பின்பற்ற முடியவில்லை, அதனால் மற்றவர்களும் அவ்வாறு இருக்கவேண்டும் என்று நினைக்கிறார் போலும். . . . காந்திஅடிகள் பேரனாக நீதி கேட்பதாக பேசியிருக்கிறார், ""இந்து தீவிரவாதம்"", "கோட்ஸே" என்று அவருக்கு வாய்க்கு வந்த படி பேசியிருக்கிறார்,. . . அவர் காந்தியடிகள் வழி நடந்திருந்தால் நீதி கேட்க உரிமை உண்டு. . . . .நமது கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் மதிக்காத இவர் எந்த அடிப்படையில் நீதி கேட்கிறார், சட்டப்படி அவரை கொன்றவருக்கு அதிகப்பச்சை தண்டனையான தூக்கு தண்டனை விதித்து அதுவும் நிறைவேற்ற பட்டுவிட்டது, அதற்க்கு மேலும் இவருக்கு என்ன நீதி வேண்டும் என்று இவர் நினைக்கிறார்கள். . . . . கிருத்துவ மதத்துக்கு வெளிப்படையாக மாறியதாக காட்டிக்கொள்ளாமல் . . . . .ஏதோ மத சார்பற்றவர்போல நடித்துக்கொண்டு , இந்து மதத்தை மட்டும் நையாண்டி செய்து அவரது அரிப்பை தீர்த்துக்கொள்கிறார். . . .சினிமா தொழில் இனிமேல் வயதான காரணத்தினால் / மதிப்பு குறைந்து விட்டதால் செய்யமுடியாமல் போகவே. . . .வேறு மதத்தின் கைக்கூலிகளாக செயல் படுவதினால் முதலில் ஏதோ பணம் கொடுப்பார்கள் . . . நாய்க்கு ரொட்டி துண்டு போடுவது போல . . . ..அதற்க்கு பின்னல் இவருக்கு இருக்கும் கொஞ்ச மரியாதையும் கப்பல் ஏறிவிடும் . . . . அதனால் கமல் அவர்கள் ""நாவடக்க வேண்டும்"" . . . . .அரசியல் பண்ணி, பணம் சம்பாதித்து குஜாலாக என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள்ளுங்கள், அது உங்களது சொந்த உரிமை . . . . .உங்களுக்கு இந்து மதத்தை பிடிக்கவில்லை என்றல் தாராளமாக நீங்கள் வெளியே போய்க்கொள்ளுங்கள், நாங்கள் புனிதமாக மதிக்கும் இந்து மதத்தை இனிமேல் அவமதித்தல் நாங்களும் உங்களை விமரிசனம் செய்வோம் . . . . .. . அதை விமரிசிக்க உங்களுக்கு தகுதி இல்லை,

 • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

  ரெம்ப லேட்டா சொல்றானே , இவரு நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட பிரிட்டிஷ் ராணியை உருவி உருவி அழைக்கும்போதே கொஞ்ச நஞ்ச அபிமானமும் போய்விட்டது , இவனின் மகள்களுக்கு தமிழக இளைஞர்கள் யாரும் கிடைக்கவில்லையா

 • madhavan rajan - trichy,இந்தியா

  மனிதன் கொஞ்சம்(10%), மிருகம் அதிகம்(90%) கலந்து செய்த கலவை இவன்.

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

 • King of kindness - muscat,ஓமன்

  பூமிக்கு இவன் பாரம்.நடமாடும் ஜந்து. இவன் நம் பகுதியை கடந்து போனால் அந்த பகுதியையே சுத்தம் பண்ணனும்

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  இந்த ஆள் ஒரு மனுஷ மிருகம் ,

 • Jayvee - chennai,இந்தியா

  கமலுக்கும் சீமானுக்கும் ஒரு பெரிய போட்டி நடந்துகொண்டிருக்கிறது.. யாரு கேவலமான பிறவி என்று.. ஸ்டாலினை இதில் சேர்க்கவில்லை ஏனென்றால் அவர் பிறப்பே அப்படிதான்

 • ramesh - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Kamal is a third rates politician. Please dont give him any importance to publish his news. He is a crook of the first order More he will suffer for what he has said about Hindus. God will make him repent and like him veeramani and vairamuthu all their life will be ruined

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement