Advertisement

சேலத்தில் ஒரு ‛நம்பிக்கை இல்லம்'.

கவிஞர் ஏகலைவன்nsmimg692751nsmimg
சேலத்தை சேர்ந்தவர் எவ்வித ஊனமும் இல்லாமல் வளர்ந்தவர் ஒரு விபத்தின் மூலம் மாற்றுத்திறனாளியானவர்.

nsmimg692752nsmimg

அதன்பிறகு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் உள்ள வலிகளை உணர்ந்து அறிந்தார், அழுதார்.கண்ணீர் விடுவதால் கவலை குறையாது என்பதை உணர்ந்தார்.

nsmimg692753nsmimg

கண்ணீரை துடைத்து புது மனிதனாக எழுந்தார் மற்ற மாற்றுத்திறனாளிகளின் கண்ணீரை துடைப்பதையே தனது வாழ்க்கை லட்சியமாகக் கொண்டார்.

எழுத்தாளரும்,கவிஞருமான இவரின் நம்பிக்கை தரும் எழுத்துக்கள் பெரும் வரவேற்பை பெற்றது.நிறைய மாற்றுத்திறனாளிகளை சந்தித்து அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.

இன்னும் இன்னும் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை மலரச்செய்ய தனக்கு நிறைய வேலைகள் இருப்பதை உணர்ந்தார், அதற்கு இவர் பார்த்துவந்த அரசு வேலை இடையூறாக இருப்பதாக நினைத்தார் வேலையை விட்டுவிட்டு முழுநேரமும் மாற்றுத்திறனாளிகள் நலனிற்காக தனது வாழ்க்கை அர்ப்பணிக்க முடிவு செய்தார்.

வேலையைவிடும் முடிவை தனது முடிவை மனைவி வஹிதாபானுவிடம் சொன்னார்., காலம் முழுவதும் கஷ்டப்படாமல் சாப்பிடுவதற்கு காரணமான அரசு வேலையை விடாதீர்கள் என்றுதான் எந்த மனைவியாக இருந்தாலும் இது போன்ற சந்தர்ப்பத்தில் சொல்லியிருப்பர்.ஆனால் ஏகலைவன் மனதிற்கு ஏற்றவரான வஹிதா பானுவோ ‛நாம கஷ்டப்பட்டாலும் பராவயில்லை உங்க இஷ்டப்படி செய்யுங்கள்' என்று சொல்லி கணவருக்கு உற்சாகம் கொடுத்து துணைநின்றார்.

மாற்றுத்திறனாளிகளின் படைப்புகளை மட்டுமே புத்தகமாக வெளியிடுவதற்கு வாசகன் பதிப்பகத்தை துவக்கினார் இதற்கு முதல் தேவையாக ஒரு கம்ப்யூட்டர் தேவைப்பட்டது.

ஏகலைவனை அவரது எழுத்தால் அறிந்த, உணர்ந்த சொற்பொழிவாளர் சுகி.சிவம் நான் தருகிறேன் என்று சொல்லி கம்ப்யூட்டர் வாங்கிக்கொடுத்தார்.

இப்போது வாசகன் பதிப்பகத்தால் பல புத்தகங்கள் வந்துவிட்டன அதில் பல புத்தகங்கள் பரிசுகள் பெற்றுள்ளது சமீபத்தில் கவிதை உறவு அமைப்பினர் நடத்திய விழாவிலும் வாசகன் பதிப்பக நுாலுக்கு அமைச்சர் பாண்டியராஜ் பரிசு வழங்கிபாராட்டினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை அவர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது,அவர்களது கல்வியறிவை மேம்படுத்துவது,அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கிக்கொடுப்பது என்று எந்நேரமும் சுற்றி சழன்று கொண்டே இருக்கும் இவர் இதையெல்லாம் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலமாக செய்துவந்தார்.

மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒரு இடத்திற்கு உரிமையோடு வந்து தங்களை உடலளவிலும் உள்ளத்தளவிலும் மேம்படுத்துவதற்கு ஒரு இடம் தேவைப்பட்டது அதற்காக குறைந்த வாடகையில் இடம் தேடி சேலத்தில் நிறைய அலைந்தார்.

கடைசியில் சேலம் கன்னங்குறிச்சியில் ஒரு நல்ல உள்ளம் குறைந்த வாடகையில் தனது இல்லத்தைக் கொடுக்க கடந்த 17 ந்தேதி நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் சார்பி்லான ‛நம்பிக்கை இல்லம்' திறக்கப்பட்டது.

திறந்து வைத்தவர் நம்பிக்கை வாசல் டிரஸ்டின் ஆலோசகரான லேனா தமிழ்வாணன் .பிரபலமானவர்கள் தாங்கள் போகக்கூடிய இடமும் பிரபலமான இடமாக இருக்கவேண்டும் அங்கே போவதன் மூலம் தாங்கள் பிரபலமாக வேண்டும் என்றெல்லாம் நினைப்பர் ஆனால் லேனா தமிழ்வாணன் வித்தியாசமானவர் எளியவர்கள் நடத்தும் எளிமையான விழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பவர்.ஏகலைவனுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் நிறைய உதவிகள் செய்துவருபவர்.

மாற்றுத்திறனானிகளுக்கான மறுவாழ்வு இ்ல்லமாக மட்டுமின்றி ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக கல்விகற்றுத்தரும் மாலை நேரக்கல்விக்கூடமாகவும் இந்த நம்பிக்கை இல்லம் இப்போது செயல்பட துவங்கிவிட்டது.

கவிஞர் கோபிநாத், வஹிதா பானு, ஷாஜஹான், கார்த்திக் ஆகியோர் ஏகலைவனின் சமூகப்பணிக்கு தோள்கொடுத்து வருகி்ன்றனர்.

மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 50 லட்சத்திற்கு மேல் உள்ளனர், இவர்களில் பெரும்பாலானவர்களை 18 வயது வரை பெற்றோர்களோ உற்றோர்களோ பார்த்துக்கொள்வர் அதன்பிறகு அவர்கள் தங்களை தாங்களே பார்த்துக் கொள்ளும் நிலமைக்கு தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

அவர்களை உயர்த்தும் உன்னத பணியினை நம்பிக்கை வாசல் அமைப்பு மேற்கொண்டு உள்ளது மக்கள் அன்பானவர்கள் அதிலும் சேலத்து மக்கள் மிக மிக அன்பானவர்கள் நான் பொருளாதார ரீதியாக துவண்டு போகாமல் நன்கொடை கொடுத்து துாக்கிப்பிடிப்பவர்கள், அவர்கள்தான் நான் உயர்ந்தால் அது மாற்றுத்திறனாளிகளுக்கான உயர்வு என்று கருதுபவர்கள், அவர்களுக்கும் இனி வரும் நாட்களில் ‛நம்பிக்கை இல்லத்திற்கு' உதவ நினைக்கும் நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றி என்று சொல்லும் ஏகலைவனுடன் பேசுவதற்கான எண்:98429 74697.

-எல்.முருகராஜ்.

murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement