Advertisement

இவர் போல யாரென்று...

இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்…
nsimg2290079nsimg

சைக்கிளில்தான் பயணம்

குடிசை வீட்டில்தான் சயனம்
பொது குழாயில் குளியல்
மெல்லிய தேகம்
வெளுத்த தாடி தலைமுடி
எளிமையான பைஜாமா குர்தா

nsmimg694938nsmimg

இதுதான் நமது நாட்டின் சிறு மற்றும் குறு தொழிலுக்கான மத்திய அமைச்சராக பிரதமர் மோடி தலைமையில் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கியின் அசல் தோற்றம்.

nsmimg694939nsmimg

சாரங்கி என்றால் நல்லதொரு இசைக்கருவி இந்த கருவியில் இருந்து வரும் இசை எப்படி நாடு, இனம் மொழி தாண்டி எல்லோரையும் மயக்குமோ? அது போல புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களில் பிரதாப் சந்திர சாரங்கி ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டார் ,எளிமையின் இலக்கணம் இவரோன்றோ என்று விரும்பி ஏற்கவும் வைத்துவிட்டார்.
nsmimg694940nsmimg
இதற்கு காரணம் இவர் ஜெயித்து வந்த விதம் அப்படி.

ஒடிசாவின் சக்தி வாய்ந்த டி.வி.,மற்றும் செய்தித்தாளை கையில் வைத்திருக்கும் நவஜோதி பட்நாயக் என்ற காங்.வேட்பாளர் ஒரு பக்கம் (இவர் முன்னாள் முதல்வர் பிஜூ பட்நாயக்கின் மருமகன் வேறு) சிட்டிங் எம்பியும் பிஜூ ஜனதா தளத்தின் சக்தி வாய்ந்த தலைவருமான ரபிந்திரகுமார் இன்னோரு பக்கம் இப்படிப்பட்ட இரு பெரும் அசுர பணபலமி்க்க சக்திகளை வென்றுவந்துள்ளார் சாரங்கி.

சைக்கிளிலும் தொண்டர்கள் வற்புறுத்தும் போது ஆட்டோவில் மட்டுமே பயணித்து பிரச்சாரம் செய்த சாராங்கி வெற்றி வேட்பாளராக தனது குடிசை வீட்டில் இருந்து டில்லி கிளம்பும் போது ஒரு தபால் பையில் மாற்று உடையை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பியவர்.

அவரைத்தான் அடையாளம் கண்டு கொண்டு பிரதமர் மோடி சிறு மற்றும் குறு தொழிலுக்கான இணை அமைச்சராக்கி அழகு பார்த்திருக்கிறார்.இவர் பதவி ஏற்கும் போது கூடியிருந்த ஆறாயிரம் பேர்களும் எழுந்து நின்கு கைதட்டி வரவேற்றது எளிய வாழ்க்கை வாழ்பவர்களுக்கு கிடைத்திட்ட பெரிய அங்கீாரமாகவே பார்க்கப்பட்டது.

இத்தனைக்கும் இவர் ஒரு காலத்திலும் அமைச்சராக ஆசைப்பட்டது கிடையாது ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து துறவியாகவே விரும்பினார்.

ஆனால் அங்கு அவர்கள் தந்த ஆலோசனையின் அடிப்படையில் கிராமத்து மக்களின் முன்னேற்றத்திற்கான களம்காண ஆரம்பித்தவர் அதற்கான வெகுமதியாக இன்று தனது 64 வயதில் அமைச்சராகியுள்ளார்.

ஒடிசாவின் பாலாசோர் தொகுதியில் உள்ள கோபிநாத்பூர் கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர் அங்குள்ள பல்கலையில் இளநிலை படிப்பை முடித்தவர்.

ஆன்மீகத்தில் மிகவும் நாட்டம் கொண்டவர் சிறந்த சொற்பொழிவாளர்

மக்கள் பிரச்னை எதுவென்றாலும் தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு அதிகாரிகளை பார்க்க கிளம்பிவிடுவார் பிரச்னையை முடித்துக்கொண்டுதான் வீடுதிரும்புவார்.

மடியில் கனமில்லாதவர் திருமணமாகாதவர் ஆகவே யாரையும் நேருக்கு நேர் சந்திப்பார் எவரோடும் விவாதிப்பார் சுயேட்சையாக நின்று ஒரு முறை வெற்றி பெற்றார் இவரது செயல்பாடுகளை பார்த்து மறுமுறை பாஜக தனது வேட்பாளராக நிறுத்தியது அதற்கான கடிதத்துடன் பஸ்சில் பயணித்தவர் அந்தக் கடிதத்தை தவறவிட்டதால் கடைசி நேரத்தி்ல் தன்னை சுயேட்சை வேட்பாளராக அறிவித்துக் கொண்டு மீண்டும் வென்றார்.

இப்படி இரண்டு முறை எம்எல்ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர் தனது சம்பளப்பணத்தை வைத்து அங்குள்ள மலைவாழ் மக்களுக்கு பள்ளிக்கூடங்களை கட்டித்தந்து படிக்கவைத்தார்.எம்எல்ஏ.,நிதியில் ஒரு பைசாகூட வீணாக்காமல் தொகுதிக்கு நன்கு செலவழித்தார்.

ஏழை இந்தியனாக ஒரு பழைய சைக்கிளுடன் எப்போதும் மக்களுடன் கலந்து களத்தில் காணப்படும் சாரங்கி முதல் முறையாக பாஜக வேட்பாளராக பாலசோர் தொகுதியில் லோக்சபா வேட்பாளராக களம் நிறுத்தப்பட்டார்.

எதிர்த்து நின்ற வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பாக 104 கோடியையும் 72 கோடியையும் கணக்கில் காட்ட இவரே எம்எல்ஏ பென்சனில்தான் வாழ்வதாக சொல்லியிருக்கிறார்.

12 ஆயிரத்து 956 ஒட்டுக்கள் வித்தியாசத்தில் ஜாம்பாவன்களை குப்புறத்தள்ளி வெற்றி வாகை சூடியுள்ளார்.இவர் வெற்றி பெற்றார் என்று சொல்வதை விட எதற்கும் விலை போகாமல் ஒரு எளிய உண்மையான மனிதரை வெற்றி பெறச் செய்து தொகுதி மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (27)

 • மு.நா.பூங்கொடி செந்தில்குமார்,மதுரை. - madurai,இந்தியா

  ஆன்மீக ,அரசியல் வழிகாட்டியாக திகழ்கிறீர்கள் பாராட்டுக்கள்.......

 • abhinandan jain - chennai,இந்தியா

  LovelyMarees இவற மாதிரி ஆட்களை தேர்வுசெய்த அந்த தொகுதி வாக்காளர்களை பாராட்ட வேண்டும்.

  • Anandan - chennai,இந்தியா

   இவர் ஒரு கிரிமினல் இதில் இவரை தேர்ந்தெடுத்த முட்டாள்களுக்கு பாராட்டு ஒரு கேடா?

 • madhavan rajan - trichy,இந்தியா

  இவர் தமிழ் நாட்டில் எந்த தேர்தலில் நின்றிருந்தாலும் நோட்டாவை விட குறைந்த வாக்குகளே பெற்றிருப்பார். அவ்வளவு நேர்மையான அறிவாளிகள் நமது மாநிலத்து வாக்காளர்கள். சுடலையைப் போல, ராகுலைப் போல பொய் சொல்லாத தெரியாதவர்களெல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறார்கள்?

  • Gopi - Chennai,இந்தியா

   இன்னொண்ணையும் விட்டுடீங்களே . நம்ம கனி மாதிரி ராசா மாதிரி கார்த்தி மாதிரி தயாநிதி மாதிரி அப்பழுக்கற்ற தங்கங்களை தேர்ந்தெடுத்தவர்கள் வாழ்க வாழ்க

  • Anandan - chennai,இந்தியா

   கண்டிப்பாக தமிழகத்தில் இவர் ஓட்டுவாங்க வாய்ப்பேயில்லை ஏனென்றால் இந்தா ஆள் கிரிமினல்.

 • JSS - Nassau,பெர்முடா

  தமிழகத்தில் இவரை போன்ற வேட்பாளர்கள் இல்லையா என்ன. இருக்கிறார்கள். ஆனால் தேர்வு செய்ய எந்த கட்சிக்கும் மனம் கிடையாது. இவர் போன்றவற்றுக்கு ஓட்டளிக்க இலவசத்தை விரும்பம் தமிழ் மக்களுக்கு விருப்பமோ அல்லது விவேகமோ கிடையாது. கழகங்களுக்கு அடிமையாக இருப்பதைத்தான் தமிழ் மக்கள் விரும்புவர். இவர் போன்று அந்த காலத்தில் காங்கிரஸில் ஒருவர் இருந்தார். அவர் பெயர் திரு கக்கன். திமுக அதிமுகவில் இருப்பவர்கள் மக்கள் வரியை கொள்ளை அடித்தவர்கள்

 • LovelyMarees - Kutty Japan, Cracker City.,இந்தியா

  இவற மாதிரி ஆட்களை தேர்வுசெய்த அந்த தொகுதி வாக்காளர்களை பாராட்ட வேண்டும்.

 • Nisha Rathi - madurai,இந்தியா

  வாழ்த்துக்கள் இவர் ஒரு வழிகாட்டி மற்ற உறுப்பினர்கள் பின்பற்றவேண்டும்

 • ARUL - chennai,இந்தியா

  ""இவர் வெற்றி பெற்றார் என்று சொல்வதை விட எதற்கும் விலை போகாமல் ஒரு எளிய உண்மையான மனிதரை வெற்றி பெறச் செய்து தொகுதி மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்"".-முருகராஜ் அவர்களின் இந்த ஒரு வரிக்காக அவருக்குப் பல கோடி பாராட்டுகள்

 • Christopher - Chennai,இந்தியா

  அவர் ஒரு நல்ல மனிதராக இருக்கலாம். ஆனால் நல்ல தலைமை நிர்வாகி அல்ல,

  • TechT - Bangalore,இந்தியா

   நிர்வாக திறமை உள்ள அதிகாரிகளை சேர்த்து கொள்ள வேண்டும்

  • madhavan rajan - trichy,இந்தியா

   காமராஜரைவிட நல்ல தலைமை நிர்வாகியாக அண்ணா, மு க வை ஏற்றுக்கொண்ட தமிழக மக்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

  • Gopi - Chennai,இந்தியா

   கிறிஸ்டோபர் அண்ணே, கண்டிப்பாக நீங்க அரபி வம்சம் அல்ல (not an arab race ), எப்படியும் இரண்டு மூன்று தலைமுறை முன்னர் பாலுக்கும் பிஸ்கெட்டுக்கும் மதமாறியிருக்கவேண்டும். உங்கள் வழியிலேயே ஒன்றை சொல்லவிரும்புகிறேன். எங்கோ படித்தது, விவிலியத்தில் கூட அது வரலாம். "என் தகுதிக்கு மீறிய ஆசை படாதே என்று மற்றவர் கூறுவதில் அர்த்தம் இருந்தாலும், என் தகுதியை நான் தான் நிர்ணயிக்கவேண்டும், நீ அல்ல" இவரின் ஆளுமை திறமை மக்கள் நலனில் வெளிப்பட்டு கொண்டிருக்கிறது. நீங்கள் கவலை படாமல் புத்தகத்தை எடுத்துக்கொண்டு கோயமுத்தூர் தியான மன்றம், பற்றும் பிற மத கோயில்களை நாடி உங்கள் வேலையை பார்க்கலாம்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இந்தியாவின் மிகவும் துரதிர்ஷ்டம் பிடித்த மாநிலம் தமிழ்நாடு இங்கே இவரைப் போல் யார்வந்தாலும் வெல்ல முடியாது சாராயமும் ஆயிரமும்தான் வெற்றியை இங்கே தீர்மானிக்கிறதே

 • V Moorthy - Chennai,இந்தியா

  உங்களை வாழ்த்த வயதில்லை. இரு கரம் கூப்பி வணங்குகிறேன். உங்கள் தொண்டு சிறக்க இறைவனை வேண்டுகிறேன். உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement