Advertisement

துணி ஒவியம் இது தனி காவியம்

quilt art என்பது துணிகளை சிறிதும் பெரிதுமாக வெட்டி ஒட்டி தைத்து ஒவியம் போல உருவாக்கப்படும் ஒரு கலையாகும்.
nsimg2300504nsimgஇந்த துணி ஒவிய கலைக் கண்காட்சி சென்னை தட்ஷின் சி்த்ரா கலைக்கூடத்தில் நடைபெற்றது.
nsmimg698367nsmimgசாதாரணமாக பார்த்தால் போர்வை போல தோன்றும் இந்த துணிவிரிப்பில் பலவிதமான ஒவியங்களை தத்ரூபமாக துணியாலேயே உருவாக்கியுள்ளனர்.

nsmimg698371nsmimgஇது குறித்து தீபா வாசுதேவன்,டினா காத்வால்,வர்ஷா சுந்தர்ராஜன் ஆகியோர் கூறியதாவதுnsmimg698372nsmimg
இந்த துணி ஒவிய கலை மொகஞ்சோதரா காலத்தில் இருந்த தொடந்து வரும் பழமையான கலையாகும் ஆனால் தற்போதுதான் பிரபலமாகிவருகிறது இந்தக் கலைக்கு புத்துணர்வு ஊட்டும் விதமாக கடந்த 2019 ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் செ்ன்னையில் ஒரு போட்டி நடத்தப்பட்டது.இந்தப் போட்டியில் 11 நாடுகளைச் சேர்ந்த 161 பேர் பங்கேற்று 290 படைப்புகளை வழங்கினர் அதில் 28 படைப்புகள் பரிசினைப் பெற்றது அதில் 18 துணி ஒவியங்கள் இங்கு கண்காட்சியாக வைக்கப்பட்டு உள்ளது.
இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்த துணி ஒவியங்கள் குறி்த்து வர்ஷா சுந்தர்ராஜன் மிக அருமையாக விளக்கம் தந்தார் இந்த துணி ஒவியத்தை எப்படி எல்லாம் ரசிக்கலாம் என்பதையும் விளக்கினார்.இவரது விளக்கத்துடன் ஒவியங்களை பார்த்தால் இதன் தன்மை பல மடங்கு சிறப்பாக தெரியும்.
இப்போதுதான் இந்தக் கலை கொஞ்சம் கொஞ்சமாக பரவலாகிவருகிறது அடுத்த கண்காட்சி நடக்கும் போது இன்னும் நிறயை பேர் கலந்து கொள்வர் என்றார்.
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    அருமை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement