Advertisement

சுமித்ரா தேவி என்றொரு தெய்வத்தாய்


கடந்த வாரத்தில் ஒரு நாள் nsimg2300640nsimg ஜார்கண்ட் மாநிலம் ராஜ்புரா நகராட்சியில் அலுவலகம் முடிந்த ஒரு மாலைப்பொழுது
சின்னதாய் ஒரு பெஞ்ச் போடுகின்றனர் எதிரே சில நாற்காலிகள் போடப்படுகின்றன

அந்த நகராட்சியில் கடந்த 30 ஆண்டுகளாக துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய சுமித்ரா தேவி என்பவர் அன்றுடன் பணிஒய்வு பெறுகிறார். அவரைப்பாராட்டி பேசி வழியனுப்ப நகராட்சி நிர்வாகமும் சக ஊழியர்களும் ஏற்பாடு செய்த எளிய விழாவே அது.
எவ்வளவு மழை பெய்தாலும் புயல் அடித்தாலும் வேலைக்கு வராமல் இருந்தது இல்லை, கூட்டிப்பெறுக்கும் வேலை என்றாலும் அதிலும் நேர்த்தியாக உழைத்தவர் இவர் இருக்கும் இடத்தில் ஒரு குப்பை கூளத்தை பார்க்க முடியாது அதிகம் பேசாதவர் ஆனால் அசராத உழைப்பாளி கடமையில் அர்ப்பணிப்போடு இருந்திருக்கிறார்; எந்த ஒரு புகாரும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். அவரைப் போல ஒரு தொழிலாளி கிடைப்பது அபூர்வம்'' என்று நகராட்சி நிர்வாகிகள் மனம் திறந்து பாராட்டி பேசிக்கொண்டு இருந்தனர்.
அந்த நேரம் சைரன் ஒலி ஒலிக்க ஒரு கார் உள்ளே நுழைகிறது அது அந்த மாவட்ட கலெக்டர் மகேந்திரகுமாின் கார்.இந்த வழியாக ஏதோ ஒரு வேலையாக கலெக்டர் போகிறார் போலும் என்று எண்ணினர்.
ஆனால் கார் நேராக விழா நடக்கும் இடத்திற்கே வந்தது காரைவிட்டு இறங்கிய கலெக்டர் சுமித்ரா தேவியை நெருங்கி அவரது பாதம் தொட்டு தனது கண்ணில் ஒற்றிக் கொண்டார் பின்னர் ஆரத்தழுவி கண்ணீர்விட்டார்.
என்ன நடக்கிறது என்பது அங்கு இருப்பவர்களுக்கு புரியவில்லை
அடுத்த சில வினாடிகளில் இன்னோரு கார் வந்தது அதில் இருந்து ரயில்வேயின் உயர்பொறுப்பில் இருக்கும் என்ஜீனியர் ஒருவர் இறங்குகிறார் அவரும் சுமித்ராதேவியின் பாதம் தொட்டு வணங்கிவிட்டு அமர்கிறார்.
இவரைத் தொடர்ந்து வந்த இன்னோரு காரில் இருந்து இறங்கிய உள்ளூர் பிரபல டாக்டர் ஒருவர் அவரும் சுமித்ரா தேவியின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு அமர்கிறார்.
மொத்த பார்வையாளர் கூட்டமும் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறது.
அப்போது கண்களைத் துடைத்தவாறு கலெக்டர் பேச ஆரம்பித்தார்.
கலெக்டராகிய நானும் இந்த என்ஜீனியரும் இந்த டாக்டரும் மூவரும் ஒரே வயிற்றில் பிறந்து வளர்ந்த அண்ணன் தம்பிகள் எங்களைப் பெற்றெடுத்த தாய் யாரோ அல்ல இதோ உங்கள் முன் நேர்மையான துப்புரவு தொழிலாளியாக பெயர் எடுத்து நிற்கிறாரே சுமித்ரா தேவி அவர்தான் எங்கள் தாய்.
nsmimg698430nsmimg
சாதாரண தாய் அல்ல தெய்வத்தாய் தனது சகல சந்தோஷங்களையும் குறைத்துக்கொண்டு எங்களை வளர்த்து ஆளாக்கியவர் , நாங்கள் எல்லாம் நன்றாக படித்து ஆளாளுக்கு ஒரு பொறுப்பில் இருந்த போதும் ஒரு காலத்திலும் எங்கள் பெயரை அவர் சொன்னதே இல்லை.
நாங்கள்தான் நல்ல நிலையி்ல் இருக்கிறோமே இந்த வேலையை விட்டுவிடுங்கள் என்று சொன்ன போது, இந்த வேலைதான் உங்களை இந்த நிலகை்கு கொண்டு வந்தது ஆகவே அரசாங்கம் அனுமதிக்கும் வரை நான் இந்த வேலையை விடமாட்டேன் என்று விடாப்பிடியாக சொன்னவர்.
நாங்கள் அவரது மகன்கள் என்று சொல்வதை விட அவரை எங்கள் தாய் என்று சொல்வதே எங்களுக்கு பெருமை என்று கண்களில் கண்ணீர் வரச்சொல்லிவிட்டு மீண்டும் தாயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.
நீங்கள் சொன்னபடி ஒய்வு பெறும் வரை வேலை பார்த்தாகிவிட்டீர்கள் இனி எங்களுடன் வரவேண்டும் என்று மூன்று பேரும் கார் கதவுகளைத் திறந்து வைத்து சுமித்ரா தேவியை அழைத்தார்கள்.
அவரோ,‛ நீங்க போங்க கண்ணுகளா! நான் பழகின இந்த இடத்தை இன்னும் ஒரு முறை கூட்டி பெறுக்கிவிட்டு அதிகாரிகளிடம் எல்லாம் சொல்லிவிட்டு நடந்தே வீட்டுக்கு வந்துர்ரேன் அதுதான் எனக்கு பிடிக்கும்' என்று சொல்லிவிட்டு விழா நடந்த இடத்தை சுத்தம் செய்ய கையில் விளக்குமாறுடன் இறங்கிவிட்டார்.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Gopi - Chennai,இந்தியா

    இவர்களால் தான் மழை பெய்கிறது

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    சிலிர்க்கிறது படிக்கும்போதே. மிகவும் பாக்கியம் செய்த மக்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்த மாநகராட்சி பெண் குலத்துக்கே முன்னுதாரணமான, தியாகத்தின் உருவான தாய்க்கு வாழ்த்துக்கள், பல்லாண்டு இந்த அருமையான மக்களுடன் வாழ்ந்தது நிம்மதியான ஒய்வு காலத்தை அனுபவிக்க என் மனமார்ந்த ஆசிகள் (நான் 80 ப்ளஸ். வாழ்த்தவும், ஆசியளிக்கவும் தகுதியண்டு)

  • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

    நல்ல தாய், அவரின் பாதங்களில் நேரடியாக வணங்க முடிய வில்லை என்றாலும் மானசீகமாக வணங்குகின்றேன். எந்தாயும் இவரை போலவே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement