Advertisement

'சீரியலால்' பாதிக்கப்பட்ட நடிகர்!

சேலம் மாவட்டம், ஆத்துார் முத்தமிழ் சங்கம் சார்பில், நகராட்சி கலையரங்கில், சமீபத்தில், பல்சுவை நிகழ்ச்சி நடந்தது. இதில், 'காமெடி' நடிகர், தாமு பங்கேற்றார்.நிகழ்ச்சி முடிந்து, நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'சினிமா படங்களுக்கு வழங்குவது போல, 'டிவி'க்களில் ஒளிபரப்பாகும், 'சீரியல்'களுக்கும், தணிக்கை சான்று வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.இளம் நிருபர் ஒருவர், 'நல்ல விஷயம் தான்... சீரியல் என்ற பெயரில், வீட்டுக்குள்ளேயே வந்து, இம்சை பண்றாங்க... நடிகரே இந்த நிலைக்கு ஆளாகி இருக்காரு பாருங்க...' எனக் கூறிச் சிரிக்க, மற்ற நிருபர்களும் சிரித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement