Advertisement

அணு அணுவாய் அத்திவரதரை தரிசியுங்கள்...

Share

இன்னுமா அத்திவரதரை பார்க்கவில்லை என்பதுதுான் எதிர்ப்படுபவர்களிடம் இப்போது கேட்கப்படும் கேள்விஅதுவும் திருப்பதி திருமலை பெருமாள் போல நின்ற திருக்கோலத்தில் பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் அத்திவரதரின் அழகே தனி.நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் குளத்தைவிட்டு விட்டு வெளியே வரும் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் அத்திவரதரை, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக தரிசித்தது இல்லை இனி நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு தரிசிப்பேனா தெரியவில்லை ஆகவே இப்போது அத்திவரதரை தரிசித்து அவரருளை பெற்றுவிட வேண்டும் என்ற பக்தர்களின் எண்ணம்தான் நாற்பது லட்சத்தை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.முப்பத்தொரு நாட்கள் சயன கோலத்திலும் 17 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி தருவதாக ஏற்பாடு.அத்திவரதரை பார்க்க இவ்வளவு பக்தர்கள் திரண்டு வருவார்கள் என்பது யாருமே எதிர்பாரத ஒன்று.ஆகவே இன்று வரை பக்தர்களை ஒழுங்குபடுத்தி அவர்கள் திருப்தியாக அத்திவரதரை தரிசிக்க வேண்டிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொண்டுதான் இருக்கிறது.பார்க்கிங்கில் சிரமம் உண்டு,நிறைய துாரம் நடக்கவேண்டும்,பொது தரிசனத்தில் வருவதற்கான வரிசையை தேடிப்பிடித்தல் என்பது போன்ற பிரச்னைகளை தாண்டி பொறுமையும் சகிப்புதன்மையுடனும் வரும் பக்தர்களை ‛என்னை சரணடை நான் உனக்கு மோட்சம் தருவேன்' என்ற கரங்களில் எழுதிய வார்த்தைகளோடு அத்திவரதர் வரவேற்று அருள்பாலித்தபடி நிற்கிறார்.த்திவரதரை தரிசிக்கும் வரை எனக்கும் நிறைய சிரமம் இருந்தது ஆனால் அவரது அழகை அருள்காட்சி தரும் முகத்தை பார்த்தபிறகு பட்ட சிரமம் எல்லாம் சூரியனைக்கண்ட பனித்துளி போல மறைந்ததுடன் இதற்காக இன்னும் கூட சிரமப்படலாம் என்ற எண்ணமே ஏற்பட்டது

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • JSS - Nassau,பெர்முடா

  சமூக வலை தளங்கள் தேவையில்லாமல் கூட்டத்தை கூட்டிவிட்டது 1979இல் தரிசித்து இருக்கிறேன் .அப்போது கூட்டமேயில்லை தள்ளு முள்ளு இல்லை, யாரும் இறக்கவில்லை, மயங்கி விழவில்லை அரை மணியில் தரிசனம் முடிந்தது, இப்போது சோசியல் மீடியாவின் அராஜகத்தினால் இப்படி ஒரு ஒழுங்கீனம். அந்த ஒழுங்கீனத்தை கட்டு படுத்த திறமையில்லா அதிகாரிகள் , இந்து அற நிலையத்துறை.பாவம் மக்கள் எல்லா அதிகாரிகளையும் கட்டி வைத்து உதைக்க வேண்டும்

 • Anandhan - puducherry,இந்தியா

  அணு அணுவாய் அத்திவரதரை தரிசியுங்கள்????? இது யாருக்கு ? வி வி ஐ பி க்கு மட்டும் தான். எங்களை போன்ற பொதுமக்கள் எப்படி அவரை அணு அணுவாய்? வாய்ப்பே இல்லை. அரை வினாடிக்கும் குறைவான நேரமே தரப்படுகிறது மேலும் பலர் பார்க்க வேண்டுமே ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் பொதுமக்கள், VIP , டோனர் பாஸ் ஆன்லைன் பாஸ் என பல நுழைவு வாயில் உள்ளது. எனக்கு என்னசந்தேகம் என்றால் VIP பாஸ் எப்படி தரம் பிரிக்கப்படுகிறது? பணம் உள்ளவர்கள் VIP என்றால் அவர்கள் ஏற்கனவே பகவான் அருள் பெற்றதால்தானே அவர்கள் பணக்காரராக இருக்கிறார்கள்? பணம் வைத்து உள்ளவர்கள் மட்டும் VIP என்றால் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏழைகளுக்கும் இயலாதோருக்கும் சேவை செய்யும் நல்ல உள்ளங்கள் எப்படி பார்க்கப்படுகிறது? அரசியல் தலைவர்களை தவிர்த்து அனைவரையும் சமமாக பவிக்கவேண்டும் கடவுள் யாரையும் பொதுமக்கள், VIP VVIP ஏழை பணக்காரன் என்ன பாகுபாடு காட்டுவதில்லை ஆனால் கோவிலில் உள்ளவர்கள் பணம் தந்தால் ஒரு உபசாரம் பணம் தராவிட்டால் ஒரு உபசாரம் மருத்துவமனைக்கு மட்டுமே உள்ள விதி இது ஆனால் கடவுள் சன்னதிக்கு பொருந்தாது. ஏழையாய் பிறந்தது எங்கள் தவறு இல்லை. இனியாவது திருந்துவார்களா?

 • Raju - jersi,யூ.எஸ்.ஏ

  தினமலர் புண்யத்தால் தினமும் இங்குஇருந்தே சேவிக்கிறோம் . நன்றி dinamalar. வாழ்க

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  சிரமமே இல்லாது நாங்கல்லாம் தினம் அத்திவாரதரை சேவிச்சுண்டுருக்கோம் எப்படிண்ணே தினம் பலர் முக நூல் /தினமலர் நியூஸ் பேப்பர்லே என்று நெறைய பேர் அவரின் போட்டோவை போட்டுண்டுருக்காளே என் போல கிழவாளுக்கு எவ்ளோபெரிய பேரு கோடீநமஸ்காரங்கள் செய்துருப்பேன் எனக்கெல்லாம் அவ்ளோதான் முடியும் அதிகம் நடக்கவேமுடியாது வீட்டுக்குள்ள நடந்துண்டு காலம் போறது ஆசையும் படலே ஏவாளும் தொல்லையே தராமல் நிம்மதியாக போகவேண்டும் அதுக்கும் பெருமாளே துணையா இருக்கவேண்டும் என்று கெஞ்சுகிறான்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement