Advertisement

அடுத்த ஆராய்ச்சியில் அமைச்சர் ராஜு!

Share

மதுரையில், முதல்வர் சிறப்பு குறைதீர் முகாமை, கூட்டுறவு துறை அமைச்சர், ராஜு துவக்கி வைத்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'முல்லைப்பெரியாறு அணை நீரை, அணைப்பட்டி வரை கொண்டு வந்து, அதை சுத்திகரித்து, மீண்டும் மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது.

அப்போது, ஆவியாகி பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது. எனவே அணையில் இருந்து, குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வர, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் வாயிலாக, தண்ணீர் ஆவியாவதை தடுக்க இயலும். மக்களுக்கு பற்றாக்குறையின்றி குடிநீர் கிடைக்கும்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'தெர்மோகோல் அமைச்சர், அடுத்த ஆராய்ச்சியில் இறங்கிட்டார்பா' என, 'கமென்ட்' அடிக்க, மற்ற நிருபர்கள், 'கல கல'வென சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Kalyanaraman -

    வாழும் அப்துல்கலாம் மாண்புமிகு அண்ணன் செல்லூர் ராஜு விரைவில் இஸ்ரோவில் பணியமர்த்தப்படுவார். மத்திய அரசு அறிவிப்பு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement