dinamalar telegram
Advertisement

பள்ளிதான் கோவில் மாணவர்கள்தான் என் தெய்வம்

Share


சில நாட்களுக்கு முன்பாக நமது தினமலர் இதழில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.
சென்னை செங்குன்றம் நிருபர் திரு.ஜமால் மொகைதீன் அந்த செய்தியை கொடுத்திருந்தார்,செய்தி இதுதான்.

Border Collie
Border Collie
Border Collie

சென்னை செங்குன்றம் அருகே விளாங்காடு பாக்கம் ஊராட்சி, தர்காஸ் பகுதியில் புழல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.
இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவியர் பள்ளிகளில் மரங்கள் நடுவதிலும் பராமரிப்பிலும் சிறந்து விளங்குகின்றனர்,சுத்தத்திற்கும் சுகாதாரத்திற்கும் முதலிடம் கொடுக்கின்றனர்,பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பது இல்லை,பொரிகடலை சுண்டைக்கடலை போன்றவைகளைத்தான் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்கின்றனர்,கொட்டாங்குச்சி போன்ற வீணான பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட நேர்த்தியான பொம்மைகளை கண்காட்சியாக வைத்துள்ளனர்,படிப்பில் கெட்டிக்காரர்களாக விளங்குகின்றனர் இதெற்கெல்லாம் காரணம் இங்கு படிக்கும் பிள்ளைகளை தனது பி்ள்ளையாக நினைக்கும் பள்ளி தலைமையாசிரியை கோமளீஸ்வரிதான் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த செய்தியை ஆன்லைன் பதிப்பில் படித்த குவைத் வாசகர் சுந்தரம்,
பள்ளி தலைமை ஆசிரியை, கோமளீஸ்வரி மிகுந்த பாராட்டுக்கு உரியவர். வரும் செப்டம்பர் ஐந்து அன்று இவருக்காக தினமலர் முருகராஜ் சிறப்புக்கட்டுரை வெளியிடலாம் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த மின்னஞ்சலை எனக்கு பார்வர்ட் செய்த செய்தி பிரிவின் ஆலோசகர் திரு.இளங்கோ, வாசகரின் நம்பிக்கையை செயலுக்கு கொண்டுவாருங்கள் என்று கூறி உற்சாகப்படுத்தினார்.
மிகுந்த தேடுதலுக்கு பிறகு கோமளீஸ்வரியிடம் பேசமுடிந்தது.
நான் எதுவுமே செய்யவில்லை என் கடமையைத்தானே செய்தேன் கப்பலோட்டிய தமிழரும்,பாட்டுக்கொரு புலவரும்,தேசிய ராணுவம் அமைத்த தீரரும் இன்னும் எண்ணற்ற பலரும் செய்த சேவைக்கு முன்னால் நான் எல்லாம் துாசி

என்னைப் பொறுத்தவரை எனக்கு நான் வேலை பார்க்கும் பள்ளிக்கூடம்தான் கோயில் இங்கு படிக்கும் பிள்ளைகள்தான் தெய்வம்.நல்லது கெட்டதை கடைசி வரை படித்து அதை கெட்டியாக பிடித்துக் கொள்ளும் குழந்தைகள் மனதை சரி செய்துவிட்டால் போதும் வருங்கால சமூகத்தையே சரி செய்வதற்கு சமமானதாகும் அது.

இயற்கையை வாசி, இயற்கையையே சுவாசி என்று சொன்ன நம்மாழ்வாரை அன்றாடம் வணங்கி வாழ்க்கையை துவங்குபவள் நான் ஆகவே தான் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை குழந்தைகளுக்கு வலியுறுத்துகிறேன்.

எனது பள்ளி குழந்தைகள் பிளாஸ்டிக்கை உபயோகிக்கதாதற்கும்,மரங்கள் வளர்ப்பில் பிரியமாக இருப்பதற்கும் இதுதான் காரணம்.

நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் ஒட்டிய வயிறுடன் கறுத்து சிறுத்துப் போன உடம்புதான் நான் பார்த்த பல விவசாயியின் உடம்பாக இருந்தது.பலர் காலை வேளை சாப்பாட்டைக்கூட துறந்து கொளுத்தும் வெயிலில் உணவை விளைவிப்பது நமக்காகத்தான் என்பதை யார் உணர்ந்தார்களோ இல்லையோ நான் உணர்ந்திருக்கிறேன் அதனால் உணவை வீணாக்குவதை நானும் சரி என் பள்ளிப் பிள்ளைகளும் சரி ஒரு போதும் செய்யமாட்டோம்.

காலை பிரார்த்தனையில் கருணை தெய்வமாம் மதர் தெரசா,எளிமையின் சின்னமாம் ஐயா அப்துல்கலாம்,நம்மாழ்வார்,வேதத்ரி மகிரிஷி போன்றவர்களைப் பற்றி சொல்லிவி்ட்டுதான் பள்ளியை ஆரம்பிப்போம்.

வர்தா புயலால் நாங்கள் நட்டிருந்த மரங்கள் எல்லாம் விழுந்துவிட்டது ஒரு சில நாள்தான் கவலைப்பட்டோம் பிறகு முன்னிலும் வேகமாக மரங்கள் நட்டு வளர்க்க ஆரம்பித்துவிட்டோம் ஆக நடந்தை எண்ணி கவலைப்படுவதை விட இனி நடப்பதை எண்ணுவதுதான் விவேகம்.

நானும் சரி என் சக ஆசிரியைகளான ஜெயா,உமா மகேஸ்வரி,வேண்டாமணி ஆகியோர் பள்ளிப்பிள்ளைகளுக்கு பராம்பரியமான கடலைப்பருப்பு,பொட்டுக்கடலையால் செய்த சிற்றுண்டிகளையம் பழங்களையும் நாங்களே கொடு்க்கிறோம் இதற்காக நாங்கள் எங்கள் காசைத்தான் செலவு செய்கிறோம் ஆனால் சந்தோஷமாக செலவு செய்கிறோம் இதை செலவு என்று எண்ணாமல் நல்லதொரு சமூகத்திற்கு நம்மாலான சேவையாக எண்ணி செய்கிறோம் கணக்கு பார்ப்பது இல்லை.

கல்வி,ஒழுக்கம் மற்றும் சுகாதாரத்தி்ல் சிறந்து விளங்கும் எங்கள் பள்ளி பிள்ளைகளை பார்த்துவிட்டு அக்கம் பக்கம் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்த்துள்ளனர்.எழுபது பேர் படித்த பள்ளியில் இப்போது 150 பேர் படிக்கின்றனர்.

எங்கள் துறை அதிகாரிகள் எங்களது செயல்களைப் பாராட்டி எங்கள் பள்ளிக்கு நல்ல கட்டிடம் வழங்கி எங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்துவருகி்ன்றனர் இதே போல இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பலரும் எங்களுக்கு நல்ல ஆதரவு வழங்கிவருகி்ன்றனர்.

சென்னையில் எங்கும் உள்ள தண்ணீர் பிரச்னை எங்கள் பள்ளியிலும் உள்ளது , தண்ணீரை சேகரித்து வைக்க ஒரு தண்ணீர் தொட்டி கட்டவேண்டிய உள்ளது அதற்கான உதவியை தேடிக் கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி முடித்த கோமளீஸ்வரியை ஆசிரியர் தினமான இன்று மனதார வாழ்த்துவோம்.அவருடன் பேசுவதற்கான எண்:9677170371.

-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (11)

 • Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா

  ஆசிரியைக்கும், அவரது சிறப்பு வெளிப்பாடாக காரணமான வாசகர்களுக்கும் நன்றிகள் பல ..............

 • karutthu - nainital,இந்தியா

  காலை பிரார்த்தனையில் கருணை தெய்வமாம் மதர் தெரசா,எளிமையின் சின்னமாம் ஐயா அப்துல்கலாம்,நம்மாழ்வார்,வேதத்ரி மகிரிஷி போன்றவர்களைப் பற்றி சொல்லிவி்ட்டுதான் பள்ளியை ஆரம்பிப்போம் அப்படியே நம்முடன் வாழ்ந்த காஞ்சி மகா ஸ்வாமிகளைப்பற்றியும் (நூறாண்டு வரை வாழ்ந்த துறவி )தெரிந்துகொண்டு அதையும் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள் உங்களுக்கும் புண்ணியம் குழந்தைங்களுக்கும் புண்ணியம் உண்டாகும் .

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

  இப்படிப்பட்ட நல்லோருக்கெல்லாம் நல்லாசிரியர் விருது கொடுக்கமாட்டார்களே....

 • Suppan - Mumbai,இந்தியா

  உங்கள் உதவி ஆசிரியருக்கு தமிழ் சொல்லிக் கொடுங்கள். கோமளீஸ்வரியை கோமாளீஸ்வரி என்று சில இடங்களில் பதிவிட்டுள்ளார். அநர்த்தமாகிவிட்டதே

 • K.n. Dhasarathan - chennai,இந்தியா

  அந்த பள்ளிக்கு தேவையான நீர் தொட்டி, குழாய்கள், டேப்புகள் மற்றும் கைகழுவுமிடம் போன்றவற்றிற்காக தினமலர் ஒரு நிதிக்குழு ஏற்பாடு செய்தால் என்னைப்போல பலரும் முன்வந்து நன்கொடை தந்து நல்ல, நிறைவான பணி செய்ய தயார்.

 • Velinaattu Matharasi - Phoenix,யூ.எஸ்.ஏ

  இவ்வளவு நல்ல ஆசிரியையை தேசிய அளவில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய பரிந்துரைக்கலாமே. தினமலர் மூலம் நாம் முன்மொழிய வாய்ப்பு இருக்கிறதா?

 • venkatan - Puducherry,இந்தியா

  Duty,devotion and dedication. Most of the government servants are reluctant to do even their duties first. It is very nice time to see such a very few like Mrs. Komaleswari and her fellow staff doing exemplery work being the third "dedication". Her teams work is equal to the will of God. "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்"

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமைதான் நமது செல்வம் என்ற பட்டுக்கோட்டையார் பாடலுக்கு சொந்தக்காரரோ இவர்.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  கல்லும் உடையாமல் சிலையும் சிதறாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நாள் இரு நாள் அல்ல பத்தாண்டுகளுக்கும் மேலாக பார்த்து பார்த்து எங்களை செதுக்கிய சிற்பி அல்லவா நீங்கள்

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  என் இளம் வயதில் நான் கண்ட நடமாடும் தெய்வங்கள் என் ஆசிரியர்கள்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement