Advertisement

போய்ட்டு வாங்க பிள்ளையாரே...

nsimg2362429nsimg சென்னையில் விநாயகர் கரைப்பு நிகழ்ச்சி மிகக்கோலகலமாக நடந்தது.பட்டினப்பாக்கம் கடற்கரையில் போலீசார் விரிவான ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
nsmimg716625nsmimgவிநாயகர் சதுர்த்தி முடிந்து ஒரு வாரமாக விநாயகரை பாதுகாத்து வந்த பக்தர்கள் இன்று ‛விஜர்சனம்' என்னும் விநாயகர் கரைப்பு நிகழ்ச்சிக்காக தாங்கள் வைத்திருந்த பிள்ளையாரை எடுத்துச் சென்று கடலில் கரைத்தனர்.
nsmimg716626nsmimgவிநாயகரை கொண்டு சென்ற வாகனங்களின் எண்ணிக்கையால் பட்டினப்பாக்கம் கடற்கரையே ஸ்தம்பித்தது.பட்டினப்பாக்கத்தில் கிரேன்கள் மூலமாக பெரிய விநாயகர்கள் வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்டு நேராக கடற்கரையில் கொண்டு போய் வைக்கப்பட்டனர். அங்கு இருந்த தினமலர் பனியன் அணிந்திருந்த தொண்டர்கள் விநாயகரை கடலுக்குள் எடுத்துச் சென்று கரைத்தனர்.ஆர்வம் காரணமாக பொதுமக்கள் கடலுக்குள் வந்துவிடாமல் போலீசார் அரணாக இருந்து பாதுகாத்தனர்.

nsmimg716627nsmimgவிநாயகர் சிலைகள் விதவிதமாக கடற்கரைக்கு எடுத்து வரப்பட்டன.ஒரு விநாயகர் நிஜமான புல்லட் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் வந்தார் வந்தவர் தான் ஒரு ஹெல்மெட்டும் தனது மூஞ்சூறு வாகனத்திற்கு ஒரு ெஹல்மெட்டும் அணிவித்து வந்து பலருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
nsmimg716628nsmimgராணுவ உடையணிந்து விநாயகர்,வெங்கடாஜலபதி போல காட்சி தந்த விநாயகர்,சக்தி விநாயகர்,நர்த்தன விநாயகர் என்று விதம் விதமான விநாயகர் பொம்மைகள் வாகனங்களில் கொண்டுவரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
nsmimg716629nsmimgஇந்தக் காட்சியை நிறைய பேர் கடற்கரையில் திரண்டு நின்று பார்த்தனர் கூடவே சென்று வருக விநாயகரே என்று வழியனுப்பியும் வைத்தனர்.
nsmimg716631nsmimg
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement