dinamalar telegram
Advertisement

இதுதான் காவேரியின் கூக்குரல்

Share

தண்ணீர் பிரச்னை காரணமாக ஒட்டல்களை மூடியதும்,தெருத்தெருவாக குடங்களுடன் இரவு முழுவதும் அலைந்ததும்,அதிக விலை கொடுத்து லாரி தண்ணீர் வாங்கி அவுன்ஸ் கணக்கில் செலவழித்ததும்,அலுவலகத்திற்கே செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை பார்த்ததும்,‛அவசரத்திற்கு' கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டதும் யாருக்கும் மறந்திருக்காது காரணம் இவையெல்லாம் நடந்து பல வருடங்களாகவில்லை சில மாதங்கள்தான் ஆகிறது சரியாகச் சொல்லப்போனால் கடந்த ஜூலை மாதக்கடைசி வரை இந்த அவலம்தான் நீடித்தது.

Border Collie
Border Collie
சென்னையில் மழை பெய்து இன்றோடு 120 நாட்கள் என்றெல்லாம் ‛கவுண்டவுன்' ஒடிக்கொண்டு இருந்தது எங்கே சென்னையும் மழை மறைவுப்பிரதேசம் ஆகிவிடுமோ என்றெல்லாம் கவலை ஏற்பட்டுவிட்டது.

இனி ஒரு மழை வரட்டும் தண்ணீரை எப்படி சேகரிக்கிறோம் பாருங்கள் அப்படியே பூமிக்குள் இறக்கி, ஏரி குளங்களில் நிரப்பி தண்ணீரை தங்கமாக மதிப்போம் பாதுகாப்போம் என்றெல்லாம் அரசு சார்பில் பேசப்பட்டதும் சொல்லப்பட்டதும் உறுதியளிக்கப்பட்டதும் எல்லாம் பிரசவ கால வைராக்கியம் போலாகிவிட்டது.

இதோ மீண்டும் மேட்டூர் அணை நிரம்பி வழி்ந்து யாருக்கும் பயன்படாமல் தண்ணீர் வீணாக கடலுக்குள் போய்க்கொண்டு இருக்கிறது.துார்வாராத காரணத்தால் காய்ந்து போன ஏரி குளத்து விவசாயிகள் கண்ணீருடன் வீணாகும் தண்ணீரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலை மாறும் என்று தோன்றவில்லை ஆனால் இப்படி பருவகாலத்தில் மட்டும் ஒடும் காவேரி பின்பு காய்ந்து போவது போல அல்லாமல் முந்தைய காலத்தில் ஒடியது போல வற்றாத ஜீவநதியாக வருடம் முழுவதும் ஒடுவதற்கான சாத்தியக்கூறுகள் ‛காவேரியின் கூக்குரலில்' இருக்கிறது.

தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவிரி நதிக்கு புத்துயிரூட்டவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் 'காவேரி கூக்குரல்' என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார்.

இந்த இயக்கம் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் காவிரி வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எப்போதுமே பிரளயம் போல ஒரு பிரச்னை வந்தால்தான் அதற்கு தீர்வு காண எல்லோரும் தயராவார் அது போல தண்ணீர் பிரச்னைக்கு தீர்வுகாண விவசாயிகள் தொழில்நுட்பத்தினர் இயற்கை ஆர்வலர்கள் சமூகநலம் விரும்பிகள் ஒருங்கிணைந்து இயக்கத்தை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டில் உள்ள பெரும்பாலான நதிகளைப் போலவே காவேரியும் காடுகளில் இருந்துதான் பிறக்கிறது.பழங்கால சரித்திரத்தில் காவேரி ஒடும்பகுதி காடுகளாலும் மரங்களாலும் நிறைந்து இருந்துள்ளது.மரங்களில் வசிக்கும் விலங்குகள் பறவைகளின் கழிவுகள் மற்றும் தாவரக்கழிவுகள் மூலமாக மண்ணிற்கு ஊட்டச்சத்தும் உயிர்மச்சத்தும் தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருந்தது,மண் ஈரப்பதத்தை உறிஞ்சி வற்றாமல் நதி ஒடுவதற்கு உயிர்மப்பொருளே வழிவகுத்தது.

மக்கள் தொகை அதிகரி்த்து மரப்போர்வை குறைந்ததும் மண்ணிற்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவி்ல்லை மண் தண்ணீரை உறிஞ்ச முடியாமல் மண்ணரிப்பு ஏற்பட்டது நதியும் வறண்டுவிட்டது எப்போதும் தண்ணீர் இருந்த நதியில் எப்போதாவது தண்ணீர் ஓடுகிறது

காவேரி ஆற்றுப்படுகையில் இருந்த மரப்போர்வை எனப்படும் மரங்கள் 87 சதவீதம் குறைந்தது விட்டது இதன் விளைவு காவிரியில் பல மாதங்கள் தண்ணீர் ஒடுவதே இல்லை.

தமிழகத்தில் 17 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டன, நிலத்தடி நீர் மட்டம் ஆபத்தான வீழ்ச்சியை சந்தித்தது, விவசாயிகளின் வேதனையும் தாங்கமுடியாத அளவிற்கு வெளிப்பட்டது,தற்கொலை என்ற துயரங்களில் கூட போய் முடிந்தது.

காவேரி வற்றுவதற்கும் விவசாயிகள் மற்றும் விவசாயத்திற்கு நெருக்கடி சூழ்வதற்கும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதற்கும் மூல முக்கிய காரணம் அழிந்துவரும் மரங்களும் அதனால் மறைந்துவரும் மண்வளமும்தான்.

அப்போது போல இப்போதும் மழை குறைவின்றி பெய்கிறது ஆனால் அந்த மழை நீரை பிடித்துவைத்துக் கொள்ளும் சக்திதான் மண்ணிற்கு இல்லை மண்ணிற்கு அந்த சக்தியை தருவது மரங்கள்தான் ஆகவே காவிரி படுகையில் வேளாண்காடுகளில் மரங்கள் வளர்ப்பதுதான் இதற்கான ஒரே தீர்வு.

இந்த எளிய தீர்வான மரப்போர்வையை ஏற்படுத்துவதுடன் நதியின் சூழலியலை மேம்படுத்தி விவசாயியின் பொருளாதாரத்தையும் உயர்த்தும் வகையில் திட்டமிடப்பட்டதே வேளாண்காடு வளர்ப்பு.இதைத்தான் காவேரி கூக்குரல் ஊர் ஊராக போய்ச் சொல்கிறது.

விவசாய நிலங்களில் மரங்கள் வளர்த்தால் எங்கள் பிழைப்பு என்னாவது, ஏற்கனவே பசி பஞ்சம் கடனில் இருக்கும் நாங்கள் மரம் வளர்க்கிறோம் என்று சொல்லி எங்கள் தலையில் நாங்களே மண் அள்ளிப்போட்டுக் கொள்ளச் சொல்கிறீர்களா?என்று கேட்கும் விவசாயிகளுக்கு விளக்கம் சொல்லவே காவிரி கூக்குரல் இயக்கம் தமிழகம் முழுவதும் இப்போது தீவிரமாக பயணித்துவருகிறது.

இந்த இயக்கம் என்பது யாரோ யாருக்கோ நடத்துவது அல்ல நமக்காக நாமே நடத்துவதுதான் ஆகவே விஷயத்தை விளங்கிக் கொண்டால் நீங்களே விளக்கம் கொடுக்கலாம் குறைந்த பட்சம் ஒரு மரம் நடுங்கள் மரம்நட இடம் இல்லாவிட்டால் மரம் நட இடம் வைத்திருக்கும் விவசாயிக்கு மரம் நட வாய்ப்பு வழங்குங்கள் அது போதும் .

குன்றிவரும் மண்வளத்தை மீட்க, மண்ணிற்கு மீண்டும் ஊட்டச்சத்துகளையும்,உயிர்மச்சத்துகளையும் கொடுக்கும் மரங்களை வளர்த்தால் போதும் மண் செழிக்கும் மழை நீரை உறிஞ்சும் காவேரி பிழைப்பாள் நாமும் பிழைப்போம்.

கடந்த, 100 ஆண்டுகளில், ஒரு சில ஆண்டுகளை தவிர, நல்ல மழை பெய்துள்ளது. மழை நீர் பூமியில் இறங்காமல் ஒடுவதுதான் பிரச்னை. வெள்ளம் வந்த பகுதியிலேயே சில மாதங்களில் வறட்சி ஏற்படும் விநோதமும் நடக்கிறது.நமக்கு பிரச்னையும் தெரியும்; தீர்வும் தெரியும். யாராவது செய்யட்டும் என, இருந்து விடுகிறோம். இனியும் அப்படி இருக்காமல் காவிரி வடிநில பகுதியில், மூன்றில் ஒரு பங்கு மரங்கள் வளர்க்க வேண்டும்.

ஒரே விளைநிலத்தில் வழக்கமான பயிர்களுடன் பழமரங்களையும் வெட்டுமரங்களையும் வளர்க்கலாம் இதனால் நீண்ட கால நிரந்தர பயன் அனைவருக்குமே ஏற்படும். உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் ஒரு மரம் நடுங்கள் இல்லாவிட்டால் மரம் நடும் விவசாயிக்கு ஒரு மரக்கன்று வாங்கிகொடுங்கள் அது போதும் நிச்சயம் காவேரி பொங்கிப் பிரவாமெடுத்து தங்குவாள்.

பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்று காவேரியி்ன் கூக்குரலை அலட்சியப்படுத்தாதீர்கள் அலட்சியம் காட்டினால் கடைசியில் காவேரியிடம் இருந்து கூக்குரல் வராது, அழுகுரலும் அவலக்குரலும்தான் மிஞ்சும், ஆகவே காவேரியின் கூக்குரலை காது கொடுத்து கேளுங்கள் செயல்படுங்கள் நாட்டை செழிப்புள்ளதாக மாற்ற மண்ணிற்கு மரம்கொடுங்கள்.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ

    என்ன மாயம் ? கருத்து எழுதினாலும்... எப்படியோ மாயமாகிடுறாங்க. இதுக்கு பேசாம கருத்து சொல்லும் பகுதியை நீக்கி விடலாமே ? ஒரு வேளை போலி சாமியார் ரொம்ப நல்லவர்னு எழுதினா வெச்சிக்குவாங்களோ ?

  • Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ

    எழுதியனைத்தும் சரியானது தான்...ஆனால் நீர் நிலைகளில் ஆக்ரமிப்பு செய்வதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள் ? மண் திருடுவதை எப்போது நிறுத்த போகிறீர்கள் ? மத்தவங்க நிலத்தில் மரம் நடுவது இருக்கட்டும்..முதல்ல இருக்கற நிலத்தேயெல்லாம் concrete போட்டு எதுக்கு முடறீங்க ? மழை நீர் சேகரிப்பு அதிகரிக்க என்ன செய்கிறீர்கள் ? இருக்கற கொஞ்ச நஞ்ச காடுகளையும் மிருகங்களையும் அழித்து ஒழிப்பதை யார் தடுப்பார்கள் ? கூக்குரலிடுபவர்கள் தலைவன் ஆக்கிரமித்துள்ள 400 acre நிலத்தை எப்போது காடாக மாற்றப்போகிறார்கள் ? சாமியாருக்கு எதுக்கு 400 acre , 10X10 ரூம் லே இருந்து கூக்குரலிட்டால் மக்கள் கேக்கமாட்டார்களா ? 8 வழி சாலை போட காட்டை அழிக்காமல் முடியாதா ? தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மாசுபடாமலிருக்க என்ன நடவடிக்கை ? சென்னை போன்ற நகரங்களில் தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்வது எப்போது நிற்கும் ? குடி நீர் சுகாதாரமானதாக எப்போது பாட்டில் துணையில்லாமல் கிடைக்கும் ? கர்நாடகாவில் ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கின் படி, கூக்குரல் இயக்கத்துக்கு 10 ,000 கோடி கேட்டு பயணம் சென்றுள்ளனர், இவ்வளவு பணத்துக்கு என்ன கணக்கு ? கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் திட்டமா ?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement