dinamalar telegram
Advertisement

என் கதைகள் எனக்கே மறந்து போய்விட்டது.

Share

கிரைம் கதை மன்னன் என்றழைக்கப்படும் ராஜேஷ்குமார் எழுத வந்து ஐம்பது ஆண்டுகளானதை அடுத்து அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

Border Collie
Border Collie
ராஜேஷ்குமார் தனது வாசகர் ஒருவரை மேடையில் பேச அழைத்தார் அஸ்வின் என்ற அந்த உடல் ஊனமுற்ற வாசகர் மேடையில் ஏறி பேசி முடித்தபோது இரண்டு விஷயங்கள் தெளிவானது

எழுத்தாளனுக்கு இப்படிப்பட்ட வாசககர்களைவிட புதையலோ பொக்கிஷமோ பெரிதல்ல என்பது ஒன்று, இரண்டவாது வாசிப்பதை அவமானம் போல கருதும் இந்த தலைமுறையினர் வெட்கி தலைகுனியும்வகயைில் அஸ்வினின் வாசிப்பு பழக்கம் இருந்தது.

பலர் வாழ்த்தி பேசினாலும் நக்கீரன் கோபால் பேசியது ராஜேஷ்குமாரின் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.

கோவையில் ஒருவர் தனது மகள் திருமணத்திற்கு சில நாள் இருக்கும் போது இறந்துவிட்டார் சோகத்தோடு அவரது வீட்டில் கூடியவர்களில் ராஜேஷ்குமாரும் ஒருவர் அங்கு பேசிக்கொண்டு இருக்கும் போதுதான் அடுத்த சோகம் தெரியவந்தது நடக்கவிருந்த திருமணம் நடக்காத சூழ்நிலை உருவாகிக்கொண்டு இருந்தது.

குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடக்காவிட்டால் பெண்ணை அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று சொல்லி பிறகு அவருக்கு திருமணம் நடப்பதே சிரமமாகிவிடும் என்பதை உணர்ந்த நக்கீரன் கோபால் விஷயத்தை ராஜேஷ்குமாரிடம் கொண்டு செல்ல அவர் பேசியவர்களிடம் பேசி குறிப்பிட்ட தேதியில் திருமணத்தை நடத்திவைத்தார் மணப்பெண் குடும்பமே அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர். கத்தி,துப்பாக்கி,ரத்தம் என்ற வன்மையான விஷயங்கள் எல்லாம் இவரது கதையில் மட்டும்தான் உண்மையின் மிக மென்மையான மனம் கொண்டவர் என்பது அப்போதுதான் தெரிந்தது என்றார்.

பிறகு ராஜேஷ்குமார் பேசவந்தார்.

1500 நாவல்கள் 500 சிறுகதைகள் என்று நிறைய எழுதிவிட்டேன் நான் தொடர்ந்து எழுத எனது வாசகர்கள்தான் காரணம் என் எழுத்து பலரது வாழ்க்கையை புரட்டி போட்டது என்பதை அறியும் போது மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இருக்கிறது.

இப்போதும் பேப்பரும் பேனாவும் கொண்டுதான் எழுதுகிறேன் எனது கதையில் இன்றைய விஞ்ஞானமும் சமூக நீதியும் நிச்சயம் இருக்கும் அதனால்தான் நான்கு தலைமுறைகளாக எனது கதையை படித்துவருகி்ன்றனர்.

பாக்கெட் நாவல் அசோகனுடனான நட்பு முப்பது வருடங்களுக்கு மேலாக நீடிக்கிறது இடையில் சில மாதங்கள் புத்தகம் வருவதில் பிரச்னை ஏற்பட்ட போது கூடுதலாக பணம் தருகிறோம் எங்களுக்கு எழுதுங்கள் என்று கேட்டு நிறைய பதிப்பகத்தார் என்னிடம் வந்தனர் ஒரு மனிதன் சிரமப்படும்போதுதான் துணை நிற்கவேண்டும் என்று சொல்லி அப்போதுதான் அவருக்காக கூடுதலாக உழைத்தேன்.

என்னுடைய நாவல்கள் பல என்னிடமே இல்லை அந்தக் கதைகள் பற்றிய ஞாபகமும் இல்லை யாராவது வந்து நான் மறந்து போன கதையை சொல்லும் போது சுவராசியமாக கேட்டுக் கொள்கிறேன் மிச்சம் இருக்கும் நாவல்கள் கதைகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் என் பிள்ளைகள் ஈடுபட்டுள்ளனர்.

இத்தனை வருடங்களாக இவ்வளவு எழுதியும் பெரிதாக விருது எதுவும் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எதுவும் எனக்கு கிடையாது என் வாசகர்கள்தான் எனக்கு கிடைத்த பெரிய விருது என் வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் அவர்கள் கொடுத்த பணத்தில் வாங்கியது அவர்கள் மனதில் வாழ்ந்தால் அதுவே எனக்கு போதும் என்று கூறி அவையில் உள்ள அனைவரையும் நெகிழவைத்தார்.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (11)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  உண்மையில் அகதா கிறிஸ்டிஏ Allfred ஹிட்ச்காக் போன்றோரையெல்லாம் பரிச்சயமில்லாத தமிழக வாசகர்களுக்கு crime novelkal எப்படி இருக்கவேண்டும் என்று தன கதைகளின் மூலம் உணர்த்தியவர் பிற்காலத்தில் மேல்நாட்டு ஆசிரியர்களின் துப்பறியும் புதினங்களை படிக்கும்போது பெரிய பிரமிப்பு வரவில்லை .மனித நேயம் கொண்ட ராஜேஷ்குமார் அவர்களின் அதி தீவிர வாசகன் என்னும் முறையில் ஆண்டவன் அவருக்கு எல்லா நலன்களையும் இன்னும் வழங்கணும் என்று வேண்டுகிறேன் .லட்சக்கணக்கான வாசகர்களின் மனதில் முடிசூடா மன்னனானாய் இருப்பவர் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது அவர் தமிழகத்தில் பிறந்துள்ளார் என்னும் ஒரேகாரணத்தினால்தானோ என்னவோ .

 • prem TRUTH - Madurai ,இந்தியா

  வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோரெல்லாம் - வானுறையும் தெய்வத் துலவைக்கப் படும்...

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இதைத்தான் யதார்த்தமாக அதே வேளையில் தன் வயது முதிர்ச்சியின் காரணமாக அமைதியாக அறிவு பூர்வமாக பேசுவது என்பது. வாழ்த்துக்கள் ராஜேஷ் குமார் இன்னும் பல பெரிய கதைகள் எழுதிக்கொண்டிருக்க ஆண்டவன் உங்களுக்கு நல்லாசி வழங்குவானாக.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  பதின்ம வயதுகளில் இவரின் பல நாவல்களை படித்துளேன் அடுத்தது என்ன என ஆர்வத்தை தூண்டும் எழுத்தாளர் ராஜேஸ்குமாரின் தொடரும் சாதனைகளுக்கு பாராட்டுக்கள்

 • Pillai Rm - nagapattinam,இந்தியா

  இப்போ இவுரு மலர் ல எழுதுறதுதான் கொஞ்சம் உருப்படியா கீது

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  மிக் மிக அருமை ஐயா. உள்ளது உள்ளபடி மிக அழகாக வெளிப்படுத்திய தினமலருக்கு நன்றி, முத்தாய்ப்பாக இத்தனை கதைகள் எழுதிய இவருக்கு எந்த ஒரு அங்கீகாரமும் இல்லாமல் போனது எவ்வளவு பெரிய வேதை, இது தமிழகத்துக்கு தலை குனிவு, வந்தே மாதரம்

 • Idithangi - SIngapore,சிங்கப்பூர்

  சிறப்பான மக்கள் எழுத்தாளர். 70 -80 களில் இளைஞர்களிடையே மிக பிரபலம். நானும் அவர் வாசகர்களில் ஒருவன். அய்யா அவர்கள் நீண்ட ஆயளோடு வாழ்ந்து வாசகர்களை தொடர்ந்து மகிழ்விக்குமாறு இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறோம். தமிழக அரசும் மத்திய அரசும் இவரை சிறப்பான முறையில் கவுரவிக்க வேண்டும்.

 • Karunan - udumalpet,இந்தியா

  துப்பும் இல்லை அறிவும் இல்லை ,,,உருப்படி இருந்தென்ன பிரயோசனம் ..கார்புரேட்டர் ரேடியேட்டர் மாத்தி எழுதின ஆசாமி ..நுனிப்புல் மேய்ந்த அறிவு வச்சிட்டு எழுதவந்து தோற்றுப்போன எழுத்தாளர்

 • Rajesh - Chennai,இந்தியா

  இந்தியாவின் பெரிய சாபக்கேடு, மனிதன் உயிரோடிருக்கும்போது இந்த சமூகம் அங்கீகரிக்கவே அங்கீகரிக்காது..... இவர் ஒரு அரிய பொக்கிஷம் போற்றப்படவேண்டியவர்..

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  தர்க்காலத்தில் ஒவ்வொரு தமிழ் சினிமாவும் ரிலீஸ் ஆகும் முன்பு"இது என் கதை காப்பி அடிக்கபட்டது" என்று கோர்ட் படி ஏறும் கதாசிரியர்கள் பின்பு பணத்தால் கேஸை வாபஸ் வாங்கியவர்கள்தான் அதிகம்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement