Advertisement

'எப்ப உள்ளாட்சி தேர்தல் நடத்துறது!'

'எப்ப உள்ளாட்சி தேர்தல் நடத்துறது!'


நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், காங்., வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். முன்னீர்பள்ளம், தருவையில் அவர், 'ஆளுங்கட்சியினர் உள்ளாட்சி தேர்தலை கண்டு பயப்படுகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் இருந்தால் தான், மேயர், கவுன்சிலர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் என, மக்கள் குறைகளை தீர்க்க முடியும்.' நாங்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை விட, நீங்கள் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளீர்கள். தி.மு.க., விரைவில் ஆட்சி அமைக்கும். தமிழகத்திற்கு விரைவில் விடிவு காலம் பிறக்கும். தி.மு.க.., ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே, உள்ளாட்சி தேர்தல் நடக்கும்' என்றார்.இதை கேட்ட வாக்காளர்கள் சிலர், 'இவரு ஆட்சிக்கு வந்ததும், உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என, போகிற இடமெல்லாம் பேசுறாரு... எப்ப ஆட்சிக்கு வருவது, எப்ப உள்ளாட்சி தேர்தல் நடத்துறது...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் சிரித்தனர்.



தி.மு.க.,வுல ஏதும் எதிர்பார்க்கிறாரோ!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து, மதசார்பற்ற கூட்டணி சார்பில் விக்கிரவாண்டியில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது.கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன், 'வன்னியர்களை, மத்திய அமைச்சர்களாகவும், அரசு செயலர்களாகவும், அரசுப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராகவும், பல்கலைக்கழக துணைவேந்தராகவும் ஆக்கி, தி.மு.க., அழகு பார்த்தது. ஆனால், அ.தி.மு.க., வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கப்படும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்' என்றார்.தி.மு.க., பிரமுகர் ஒருவர், 'அ.தி.மு.க., கூட்டணியில வேல்முருகன் இருந்தப்ப, சீட் ஒதுக்கீடு கிடைக்கலன்னு தான், இவரு தி.மு.க.,வுக்கு ஆதரவா மாறினாரு... இங்கேயும் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு போல...' எனக் கூற, அருகில் இருந்தவர்கள், ஆமோதித்து தலையசைத்தனர்.

'சீமான் மீது கை வைக்க என்ன தயக்கம்?'

பா.ஜ., சார்பில், மஹாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, சங்கல்ப யாத்திரை, திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நடந்தது.இதை துவக்கி வைத்த, பா.ஜ., மாநில பொதுச்செயலர் வானதி, 'காங்கிரஸ் கட்சி அரசியலுக்காக, காந்தி பெயரை பயன்படுத்தியது. ஆனால், பிரதமர் மோடி துாய்மை பாரதம் துவக்கி, அவரது லட்சிய வழியில் ஆட்சி செய்கிறார். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையை ஆதரித்து, சீமான் பேசியதை கண்டிக்கிறோம். அவர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் வாயிலாக, அவரது கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி, தமிழக இளைஞர்களையும் தவறான பாதையில் அழைக்கிறார்' என்றார்.பா.ஜ., பிரமுகர் ஒருவர், 'சீமான் மீது இவ்வளவு குற்றங்கள் இருந்தும், அவரை ஏன் தமிழக அரசு இன்னும் கைது செய்யவில்லை?' என கேட்க, கட்சியினர் சிலர், 'சீமான் விஷயத்தை பொறுமையாக தான் அணுகணும்' எனக் கூறி நகர்ந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement