Advertisement

'உண்மையை ஒப்புக் கொள்கிறாரே அரசர்!'

Share

நெல்லை மாவட்டம், நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக, திருச்சி, காங்., - எம்.பி.,
திருநாவுக்கரசர், துாத்துக்குடி விமான நிலையம் வந்தார்.அவர் அளித்த பேட்டியில், 'பா.ஜ., தலைமையிலான, மத்திய அரசுக்கு பயந்து, பணிந்து, அடிமையாக, அ.தி.மு.க., அரசு ஆள்கிறது. தமிழக மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யாத, அ.தி.மு.க.,விற்கு எதிராக, நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் ஓட்டளிப்பர்.'கடந்த, 1977ல் இருந்து, 12 முறை நான்தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். ஒவ்வொருமுறையும், தேர்தல் வாயிலாக, ஜனநாயகம்கேலி கூத்தாக்கப்பட்டுள்ளது. இப்போது, பணக்காரர்கள் மட்டும் தான் தேர்தலில் போட்டியிடமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'தேர்தலில் பணக்காரர்கள்மட்டும் தான் போட்டியிட முடியும் என்பதன் மூலம், தானும் பணக்காரரர் தான் என்பதை ஒப்புக்கொள்கிறாரே அரசர்' என, 'கமென்ட்' அடிக்க,மற்றவர்கள் சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement