dinamalar telegram
Advertisement

'உண்மையை சொல்லிடுவீங்களோ..?'

Share

'உண்மையை சொல்லிடுவீங்களோ..?'

நகைக்கடை உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம், போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில், திருச்சியில் நடந்தது. அப்போது அவர், 'நகைக்கடை தொடர்பான, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, ஏற்கனவே கூறியிருக்கிறோம். லலிதா ஜுவல்லரி கொள்ளை விஷயத்தில், தினமும் நிருபர்கள் போன் செய்து, 'அப்டேட் ஏதும் இருக்கிறதா சார்...' என கேட்கின்றனர். 'ஒன்றும் இல்லை பிரதர்' என, பதில் சொன்னேன். ஆனால், அவர்களோ, லலிதா ஜுவல்லரி குறித்து, ஏதாவது ஒரு, 'அப்டேட்' செய்து எழுதுகின்றனர். ஆனால், அதுகூட படிக்க சுவாரசியமாக தான் இருக்கிறது' என, மறைமுகமாக நிருபர்களை கலாய்த்தார்.மூத்த நிருபர் ஒருவர், 'இல்லேன்னாலும், நீங்க உண்மை சொல்லிட்டுத்தான், அடுத்த வேலையை பார்ப்பீங்க...' என, அவர்கள் விஷயத்தை வெளியில் சொல்ல மாட்டார்கள் என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்ட, மற்ற நிருபர்கள் சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    உண்மையா ? அதை எப்பவோ அமுக்கி ஆயிற்றே மெல்ல மெல்ல, ‘லலிதா ஜூவல்லரி அதிபரே சுவற்றை இடித்து, நகைகளை ‘தானம்’ செய்தார், அப்படி ஒரு வேண்டுதலாம் அவருக்கு’ என்று கேஸை முடித்துவிடுவார்கள்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement