dinamalar telegram
Advertisement

வெளிப்படையா இருந்தா நல்லது!

Share

விவசாயிகள் குறைதீர் கூட்டம், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் (பொறுப்பு) கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், அனைத்து துறை அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயி ஒருவர், 'வேளாண் விற்பனை மையத்தில் குண்டுநெல் விதை கேட்கும் போது, அங்குள்ள அதிகாரிகள், ஊழியர்கள், 'இதோ வந்துடும், அதோ வந்துடும்' என, மாதக்கணக்கில், எங்களை அலைய விடுகின்றனர். குண்டுநெல் கொடுக்காமல், 'வேறு ரக நெல்விதை வாங்கிக் கொள்ளுங்கள்' என, அலட்சியமாக பதில் கூறுகின்றனர்' என்றார்.

வேளாண் உதவி இயக்குனர் எபிநேசர், 'நடப்பாண்டில் குண்டுநெல் விதை வராது; நீங்கள், தனியார் கடைக்கு போய் வாங்கிக் கொள்ளுங்கள்' என்றார். 'ஒரு மனுவாக எழுதி, கலெக்டரிடம் கொடுக்கட்டுமா?' என, விவசாயி கேட்டார். உதவி இயக்குனர், 'நீங்கள் தைரியமாக, கலெக்டரிடம் சொல்லுங்கள்; இது தான், உண்மையான நிலைமை' என்றார். விவசாயிகள் இருவர், 'அரசு அதிகாரிகள், இது போல வெளிப்படையா இருந்தா, பிரச்னைங்க பாதியும் தீர்ந்துரும்...' என்றபடி நடையைக் கட்டினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement