dinamalar telegram
Advertisement

விருப்ப மனுவை கூவி கூவி விற்க உத்தரவு!

Share

விருப்ப மனுவை கூவி கூவி விற்க உத்தரவு!

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக் கூடிய இடங்களை, கூட்டணித் தலைமையான, அ.தி.மு.க.,விடம் கேட்டுப் பெறுவதற்காக, தே.மு.தி.க.,வில் ஐந்து நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம், சென்னை கோயம்பேடில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். கட்டணத்தை உடனுக்குடன், கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்' என, 'டாண் டாண்' என்று, பிரேமலதா உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார்.நிர்வாகி ஒருவர், அருகில் நின்றிருந்தவரிடம், 'மாப்ளே... கட்சி போற கதியைப் பார்த்தியா... நெய்ச் சோறு சாப்பிட்டதா மத்தவங்க நினைக்கணும்னு, வாழையிலையில, விளக்கெண்ணெயைத் தடவி, குப்பைத் தொட்டியில போடுவாங்களே... அந்த கதியாய்ப் போச்சு இப்ப... போட்டியிட வேட்பாளரைத் தேடுறதே கஷ்டம்... இதுல, விருப்ப மனுவைக் கூவி கூவி விற்கணுமாம்... ' என, நொந்து கொண்டார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • s.rajagopalan - chennai ,இந்தியா

    பிரேமலதாவின் சாதனை இது பாவம் விஜய் காந்த் ...அவரு க்கு உடல்நலம் சீராக இல்லை ...பல்லைக்கூட கடிப்பாரா என்று சந்தேகம் ......உள்ளாட்சி தேர்தலோடு கட்சி கலைக்கப்படும் ...படணும்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement