Advertisement

'மறுபடியும் எம்.எல்.ஏ., ஆக முடியும்ல!'

மனித நேய ஜனநாயக கட்சி, மாநில பொதுச்செயலரும், நாகை, எம்.எல்.ஏ.,வுமான, தமீமுன் அன்சாரி, ஈரோடு வந்தார். அப்போது, நிருபர்களிடம் அவர், 'தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். தேர்தல் தேதி அறிவித்ததும், யாருடன் கூட்டணி என, கட்சி கூடி முடிவு செய்யும். ஜெயலலிதா, கருணாநிதி மறைவால் வெற்றிடம் ஏற்படவில்லை. தி.மு.க., தலைவர் ஸ்டாலின்,

அ.தி.மு.க.,வில் முதல்வர் இ.பி.எஸ்., வெற்றிடத்தை நிரப்பியுள்ளனர். தமிழகத்தில், திராவிட கட்சிகள் தான் ஆட்சி அமைக்கும். 'கோடம்பாக்கத்தில் உள்ள சிலர், கனவு காண்கின்றனர். ஈரோட்டில், ஜனநாயக ரீதியிலான ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு, எஸ்.பி., அனுமதி வழங்குவதில்லை. அவரை பணி மாற்றம் செய்ய, காவல் துறை தலைவரிடம் புகார் செய்வோம்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'திராவிட கட்சிகளை நம்பி, நீங்கள் அரசியலுக்கு வந்ததால் தான், அவுங்கள நம்பி, கூட்டணியில் சேர்ந்தால், மறுபடியும், எம்.எல்.ஏ., ஆக முடியும்ல' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் அதை ஆமோதித்து தலையசைத்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement