Advertisement

'கலெக்டரை ஏன் வம்பில் கோர்த்து விடுறீங்க?'

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான, அனைத்து கட்சிகள் ஆலோசனை கூட்டம், திருச்சியில் நடந்தது. கலெக்டர் சிவராஜு தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், தி.மு.க., சார்பில் பங்கேற்ற, ஒன்றிய செயலர் கருப்பையா என்பவர், 'கலெக்டர் சார்... நீங்க சொல்லுங்க... உண்மையில் தேர்தல் நடக்குமா?' என்று கேட்டார்.

அனைத்து கட்சி நிர்வாகிகளும் சிரித்து விட்டனர். கலெக்டரும், வழக்கமான புன்னகையுடன், கேள்வி கேட்டவரை பார்த்து கொண்டிருந்தார்; பதில் சொல்லவில்லை. இ.கம்யூ., நிர்வாகி ஒருவர், 'அவரை ஏன், ஆளுங்கட்சிக்கு எதிரா, வம்புல கோர்த்து விடுறீங்க...' எனச் சிரித்தபடி கேட்க, மீண்டும் அனைவரும் சிரித்தனர்.

கலெக்டர், எதற்கும் அசைந்து கொடுக்காமல், மிக அமைதியாய், அடுத்த கருத்தைச் சொல்ல ஆரம்பித்தார்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement