Advertisement

அம்பேத்கார்நகர் கக்கன் பாலம் அருகே

nsimg2428692nsimg
யாழினி சென்னை கவின் கலைக்கல்லுாரியின் மூன்றாம் ஆண்டு மாணவி சிறிய வயதில் இருந்தே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அப்பாவும் நடிகருமான ஆறுமுகவேலிடம் இருந்து கொஞ்சமும் இணையத்தின் மூலமாக நிறையவும் போட்டோகிராபி கற்றுக் கொண்டுள்ளார்.
இவர் வீட்டிற்கு அருகில் உள்ளதுதான் அம்பேத்கார்நகர்.இங்கு இருப்பவர்கள் மோசமானவர்கள் என்று எல்லோரும் சொல்வதை கேட்டு உலகில் யாரும் மோசமானவர்கள் கிடையாது பாசமானவர்களே இருக்கின்றனர் என்பதை தன்னளவி்ல் நிரூபிக்கவேண்டும் என்று எண்ணி அவர்களைப்பற்றிய புகைப்ப பதிவு ஒன்றை எடுத்துள்ளார்.
அப்படி எடுக்கப்பட்ட படங்களைக் கொண்ட கண்காட்சிதான் தற்போது சென்னை லலித்கலா அகாடமியில் நடத்திவரும் ‛அம்பேத்கார்நகர் கக்கன் பாலம் அருகில்' என்ற கண்காட்சி.
nsmimg736035nsmimgஎளிய மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் இந்த புகைப்படங்கள் மிக எதார்த்தமாக அமைந்துள்ளது.சென்னை வேளாச்சேரி பகுதியில் உள்ள அம்பேத்கார்நகர் பகுதி மக்களிடம் பல காலம் பழகி அவர்களது நம்பிக்கையை பெற்று அவர்களில் ஒருவராக மாறிய பிறகே கேமிராவை ஆன் செய்துள்ளார் என்பது படங்களின் தன்மையைப் பார்க்கும் போதே புரிகிறது.
nsmimg736036nsmimgபடங்களில் இருப்பவர்களிடம் பகட்டு இல்லை பணம் இல்லை ஆனால் சந்தோஷம் நிறைந்திருக்கிறது குழந்தைகள் உலகத்தில் அது கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது.
nsmimg736037nsmimgசில படங்கள் வழக்கமாக புகைப்படக்கண்காட்சியில் வைப்பது போன்ற அளவில் இல்லை, மிகப்பெரிதாக சுவற்றில் தொங்கவிடும் அளவிற்கு பெரிதாக உள்ளது இது வித்தியாசமாகவும் உள்ளது.வருகின்ற 12 ந்தேதி வரை நடைபெறும் இந்த புகைப்படக் கண்காட்சி பகல் 12 மணிமுதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.யாழினியை வாழ்த்துவதற்கான எண்:9176031899.

-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

    ஏழ்மை உள்ளஇடத்துலே கருணையும் இருக்கும் ரொம்பவெப்பேரிய மனுஷா இருக்கும் பகுதிகளிலேயும் பொறுக்கிகள் இருக்காங்க என்பது உண்மை குடிசைப்பகுதிலே இருக்கும் பொறுக்கிகள் ஒருவிதம் என்றால் வித் பகுதியே இருக்கும் பொறுக்கிகள் கார்களிலெவருவானுகளா இருக்கும் உண்மையான மனித நேயம் வறுமையான இடத்துலேதான் நெறைய இருக்கும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement