Advertisement

'அரசியல்வாதிகள் துாண்டி விட்டாங்களே!'

தஞ்சாவூர், குருங்குளம் சர்க்கரை ஆலை பேரவைக் கூட்டம், தமிழக சர்க்கரை துறை கமிஷனர், ரீட்டா ஹரீஷ் தாக்கர் தலைமையில் நடந்தது. தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டம் துவங்கியதும், சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்புக்கான நிலுவைத் தொகை, 30 கோடி ரூபாய் வழங்காததை கண்டித்து, கரும்பு விவசாயிகள் கூட்டத்தில் இருந்து, வெளிநடப்பு செய்தனர். பின், கூட்ட அரங்கின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரும்பு விவசாயிகள், 'சர்க்கரை ஆலைக்கு அரவைக்காக, 2015 - 16 மற்றும் 2016 - 17ல் அனுப்பப்பட்ட கரும்புக்கு, 30 கோடி ரூபாய் வரை, நிலுவைத் தொகையை ஆலை வைத்துள்ளது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், இதுவரை நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை' என்றனர்.

ஆலை நிர்வாக ஊழியர் ஒருவர், 'தைப் பொங்கல் விரைவில் வரவுள்ளதால், அரசியல்வாதிகள் துாண்டிவிட்டு, விவசாயிகளை வெளிநடப்பு, ஆர்ப்பாட்டம் நடத்த வச்சிட்டாங்களே...' எனக் கூற, அதை கேட்ட விவசாயிகள் சிலர், 'எங்களை துாண்டி விட யாரும் முயலவில்லை' என்றபடி கடுப்பாகி நகர்ந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • adithyan - chennai,இந்தியா

    இதை முடிக்க விவசாயிகள் மாற்று பயிருக்கு போவதே. கரும்பில்லையானால் தொழில் முடங்கும். உற்பத்திவரி அடிவாங்கும். அப்புறம் தான் அரசு விழித்துக்கொள்ளும்.மக்களுக்கு பிரச்னைகள் வைத்துக்கொண்டிருந்தால் தான் ஓட்டுகள் வாங்க முடியும்.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    முன் ஆண்டுகளில் சப்ளை செய்த பணத்தையே கொடுக்காமல் வயிற்றிலடித்தால் விவசாயிகள் பொறுத்துக்கொள்வார்களா? இதில் தூண்டிவிட வேறு ஆளோ கட்சியோ வேறு வேண்டுமா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement