dinamalar telegram
Advertisement

ஈரான் போக்கும் டிரம்ப் உத்தியும்...

Share

எல்லாவற்றையும் முந்தி நிற்கும் பெரிய தகவலாக, ஈராக்கில் உள்ள இரு இடங்களில் அமைந்த அமெரிக்க ராணுவ மையங்களை, ஈரான் குறிப்பிட்ட வகையில் தாக்கிய செயல், ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் போக்கை அதிகரித்திருக்கிறது.


அமெரிக்கா, தன் நிலைப்பாட்டை திரும்பத் திரும்ப கூறும் சுபாவம் கொண்ட மிகப்பெரிய ஆளுமை கொண்ட நாடு. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஹெசபெல்லா உட்பட பல பயங்கரவாத சக்திகள் இருப்பது அச்சுறுத்தல் தரும் சக்தியாக அப்பகுதி அமையும் என்பது, அதன் நீண்ட நாள் கருத்தாகும்.ஆனால், தற்போதைய உலக அரங்கில் சீனா, ரஷ்யா, ஈரான் ஆகியவை அணி சேர்ந்து செயல்படுவதும், அமெரிக்காவை அதிகம் ஆதரிக்காத சீனாவின் பல செயல்கள், இன்று அமெரிக்கா தன் முன்னணி நிலைமையை தக்க வைக்க மேற்கொள்ளும் அதிரடிகள் துவங்கி, சில ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆகவே, இரு நாட்டு ஒப்பந்தங்கள், 'நேட்டோ' என்ற வட அட்லாண்டிக் நாடுகள் அமைப்பின் செயல்கள், பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் ஆளுமை அதிகரிப்பு ஆகியவை, அமெரிக்காவின் பார்வையில், அதன் ஆளுமையை அசைக்காத தன்மையை உடையதாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.அதாவது, உலகின் மிகப்பெரிய அணு ஆயுத வல்லமை கொண்ட, வலுவான செயல் திட்டங்களை உடைய நாடு என்பதை, இன்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்துகிறார்.


அதே சமயம் ஈரான், தன், அணு ஆயுத ஏவுகணைகளை குறைத்துக் கொண்டால், பல விஷயங்களில் நட்புறவு கொள்ள ஏதுவாக இருக்கும் என்ற பார்வையை, அமெரிக்க அரசு கொண்டிருந்தது.ஈராக் இன்று சின்னாபின்னமான பூமி. அதில் உள்ள குர்துா என்ற முஸ்லிம் பிரிவினர் இன்னமும் தொடர் போராட்டங்களை சந்திப்பவர்கள். அதேபோல, சிரியாவில் கிறிஸ்துவர் மக்கள் தொகை குறைந்து, இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மேலும், எப்போது ஐரோப்பிய நாடுகள் பயங்கரவாதத்தின் சக்திகளில் ஆட்பட்டதோ, அன்றில் இருந்து பிரிட்டன், ஜெர்மனி ஆகியவை, தங்களது அமெரிக்க நட்புறவை அதிகமாக பாராட்ட வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.


அதிலும், குவாசிம் சுலைமானி என்ற ஈரான் நாட்டு பிரிகேடியர் தலைசிறந்த துாதரக நோக்கு கொண்டவராக உலக அரங்கில் வலம் வந்தவர். ஈரான் அணு ஆயுதக் கொள்கையை இந்தியா முன்பு, 2006ல் எதிர்த்த போது கூட, இந்தியாவின் பக்கம் நட்புக்கரம் கொள்ள விரும்பியவர், இவர்.ஆனால், இன்றைய நிலையில், இன்னமும் பயங்கர சக்தி கொண்ட அணு ஆயுதங்களை கொண்ட நாடு ஈரான். சர்வ சாதாரணமாக, 500 முதல், 800 ஏன், 1,200 கி.மீ., வரை தாக்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணைகளை வைத்திருக்க, அந்நாட்டு தலைவர் அயதுல்லா கொமேனி முனைப்பாக இருப்பவர்.அவர், குவாசிம் சுலைமானியை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய செயல் கண்டு கொதிப்புடன், 'இன்னும் வாழும் மிகப்பெரிய புரட்சித் தலைவர் சுலைமானி தியாகி' என, புகழ்ந்திருக்கிறார்.


அதனால், சுலைமானியை கொன்ற செயலுக்கு அமெரிக்காவின் படைத்தளத்தை தாக்குவது என்று முடிவு செய்து, தங்களுடைய ஏவுகணை உத்திகளை காட்டியுள்ளனர். இதற்குப் பின் அடுத்ததாக போயிங் விமானத்தை தாக்கிய செயலும், 'தவறுதலாக நடந்தது' என்று சமாளிப்பாக கூறியுள்ளனர்.இன்றைய சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த பிரச்னையை மேலும் பெரிதாக்கலாம். அதனால், கச்சா எண்ணெய் விலை கட்டுக்கடங்காமல் போகலாம் என்ற யூகங்களை முறியடித்து விட்டார் அதிபர் டிரம்ப்.

காரணம், மத்திய கிழக்கு நாடுகளின் கச்சா எண்ணெயை நம்பி அமெரிக்கா இல்லை. இன்று மத்திய கிழக்கு மற்றும் ஈரான் சில இடங்களில் உள்ள சில ஆயிரம் அமெரிக்கர்கள் எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது. வலுமிக்க வர்த்தகமும், பொருளாதாரமும் ஓங்கி வரும்போது, சீனாவுடனான வர்த்தக கசப்பு மாறும் நிலைமையும் உருவானதால், இந்த மோதல் வெடிக்காததற்கு, அதிபர் டிரம்ப் உத்தி காரணம் எனலாம்.நம் ஈரான் உறவு நல்ல நிலையில் இருந்தபோதும், அமெரிக்காவின் அடுத்த பொருளாதாரத்தடை அந்த நாட்டின் மீது வரப்போகும் முன், நாம் அவர்களிடம் இருந்து பெறும் கச்சா எண்ணெய் அளவை ஓரளவு குறைத்திருக்கிறோம்.


அது மட்டும் அல்ல; மத்திய கிழக்கு நாடுகள், தங்களது எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முன்வராத சூழ்நிலையும், பெர்சிய வளைகுடா பகுதிகள் அதிக ஆபத்து இல்லாத நிலையை ஈரான் மற்றும் அமெரிக்காவின் தற்போதைய போக்கு உணர்த்துவதும், நம் பொருளாதார நிலையில் சிக்கல் வராது என்பதன் நல்ல அறிகுறிகள்.ஒருக்கால் அதிபர் டிரம்பிடம், இந்தியா தன் யோசனையாக, ஈரானுடன் ஓரளவு அனுசரித்து செல்லும்படி கூறும் பட்சத்தில், அதிக அளவு அணு ஆயுதங்களை தயாரித்து, மலைப் பகுதிகளில் ஒளித்து வைக்கும் ஈரான், இனி மற்ற உலக நாடுகள் போல சில வெளிப்படைத் தன்மைக்கு வரவேண்டி வரும் என்பது விவாதப் பொருளாகி விடும் என நம்பலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement