Advertisement

'அ.தி.மு.க.,வை மிஞ்சி எம்.ஜி.ஆரை புகழ்றாரே!'

'அ.தி.மு.க.,வை மிஞ்சி எம்.ஜி.ஆரை புகழ்றாரே!'

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா, மதுரையில் நடந்தது. இதில் பங்கேற்ற, பா.ஜ., மாநில செயலர் ஸ்ரீனிவாசன், 'எம்.ஜி.ஆர்., நடிகர் என்ற முறையிலும், அரசியல் கட்சி தலைவர் என்ற முறையிலும், எந்த இடத்திலும், எந்த கடவுளையும் நிந்தனை செய்து மக்களை காயப்படுத்தியது இல்லை. திராவிட இயக்கங்களை பிரிவினைவாத சிந்தனையிலிருந்து மீட்டு எடுத்தவர்.'எம்.ஜி.ஆர்., ஒரு போதும் தேசத்தையோ, தேசிய ஒருமைப்பாட்டையோ கேலி பேசியது இல்லை. மத்திய அரசுடனும், பக்கத்து மாநிலங்களுடனும் அரசியல் நல்லுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு, சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். தேசியத்தையும், தெய்வீகத்தையும் போற்றுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் காலடி மண்ணை, திருநீராக நினைப்பவன், பா.ஜ., தொண்டன்' என்றார்.இதை கேட்ட தொண்டர்கள், 'எம்.ஜி.ஆர்., புகழ் பாடுவதில், அ.தி.மு.க.,காரங்களை மிஞ்சிடுறாரே இவரு...' என, ஆச்சரியப்பட்டனர்!

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அதிமுக ஏதோ கடனுக்கு கூட்டம் போட்டு, படத்துக்கு மலர் தூவி முடித்து விட்டார்கள் அவரது படம் கூட ஸ்டாம்ப் சைசுக்கு போஸ்டர்களில் இருக்கும், அல்லது மாயமாகி இருக்கும் உள்ளது உள்ளபடி கூறியவர் எந்தக் கட்சியானாலும் பாராட்டப்பட வேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement