Advertisement

'பொடி வச்சு பேசுறாரே, ஞானதேசிகன்!'

த.மா.கா., மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகனின் பிறந்த நாளை ஒட்டி, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு, அதன் தலைவர் வாசன் நேரில் வாழ்த்து தெரிவித்தார். கோபாலபுரத்தில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் நடந்த விழாவில், கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடினர்.அப்போது, தமிழக, பா.ஜ., பொதுச் செயலர், கரு.நாகராஜன், தன் மொபைல் போனில், ஞானதேசிகனுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு நன்றி தெரிவித்த ஞானதேசிகன், 'இன்னும் உங்க கட்சியில், மாநில தலைவரை நியமிக்கவில்லையா; வர வர உங்க கட்சியும், காங்கிரஸ் போல செயல்படுதே...' என, சிரித்தபடியே கூறினார்.
இதைக் கேட்ட வழக்கறிஞர் ஒருவர், 'தமிழக காங்கிரஸ் கட்சியில், பல கோஷ்டிகள் இருப்பது போல, தமிழக பா.ஜ.,விலும், கோஷ்டிகள் இருப்பதை ஞானதேசிகன், போட்டு உடைச்சிட்டாரே...' என, 'கமென்ட்' அடிக்க, மற்ற வழக்கறிஞர்கள் தலையசைத்து அதை ஆமோதித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கிட்டத்தட்ட நாலு மாதமாகியும் மாநிலத் தலைவரைக் கூடத் தேர்வு செய்ய முடியவில்லை என்ற அழகில்தான் கட்சி இருக்கிறது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement