Advertisement

'அ.தி.மு.க.,விற்கு பின்னடைவு இருந்திருக்காதே!'

ஒன்றிய தலைவர், துணை தலைவர், வார்டு கவுன்சிலர்கள், ஒன்றியத்திற்குட்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற அறிமுக கூட்டம், மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் உதயகுமார், 'என்னை போன்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை விட, மக்களிடம் நேரடி தொடர்பு, உங்களுக்கு கிடைத்துள்ளது. மத்திய- - மாநில அரசு திட்டங்கள், அதன் பயன்களை மக்களிடம் கொண்டு போய் சேருங்கள்.'செய்ய முடியாதவற்றை, என்னை போன்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களிடம் கொண்டு வாருங்கள். மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால், அடுத்த முறையும், உங்களுக்கு தான் வெற்றி' என்றார்.
ஒன்றிய அலுவலர் ஒருவர், 'அமைச்சர் கூறியபடி கோரிக்கைகளை நிறைவேற்றி இருந்தால், ஊரக உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு இந்தளவுக்கு பின்னடைவு இருந்திருக்காதே' என, 'கமென்ட்' அடிக்க, மற்ற ஊழியர்கள் அதை ஆமோதித்து தலையை அசைத்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அமைச்சர்கள் தேர்தல் நேரத்தில் தலை காட்டினால் போதும். நீங்களே மக்களிடம் நேரடியாக திட்டு வசவுகளை எங்கள் சார்பாக வாங்கிக்கொள்ளுங்கள் நிறைவேற்றிய திட்டங்களுக்கு மட்டும் திறப்புவிழா மேடையில் வந்து நிற்கிறோம் இதுதான் அமைச்சரின் பேச்சின் உள்ளுறைப்பொருள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement