dinamalar telegram
Advertisement

மத்திய நிதியமைச்சருக்கு சாதகமான சூழல்...

Share

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரம் நெருங்கிய போதும், வழக்கமாக பேசப்படும் அளவிற்கு, பட்ஜெட் குறித்த அதிக முன்னோட்டம் இல்லாதது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அதிக சாதகம் என்றே கூறலாம்.ஏனெனில், அதிக அளவு சென்ற பட்ஜெட்டை விமர்சித்ததும், அதில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களும், இதுவரை இருந்த சில நிதியமைச்சர் மட்டுமே சந்தித்திருக்கின்றனர்.முன்னாள் நிதியமைச்சராக அருண் ஜெட்லி இருந்த போது, அவர் விமர்சனங்களை சந்தித்த விதம், மோடி அரசின் வலுவை அதிகரிக்க உதவியது என்பதே உண்மை. இன்று மோடி அரசுக்கு, ஆதரவு, எம்.பி.,க்கள் 303 பேர் என்பதால், ஜனநாயகத்தில் அதற்கு என்று தனி பலம் உண்டு.திடீரென ராஜிவ் காலம் முதல், மத்தியில் கூட்டணி இல்லாமல் ஆட்சி செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்ட பின், எத்தனையோ அரசியல் சாதகங்கள் ஏற்பட்ட போதும், பல பாதகங்கள் ஏற்பட்டிருக்கின்றன.பல மாநிலங்கள், பல மொழிகள் என்று இருந்த போதும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்பட்ட சம்பவங்கள் குறைவு. காங்கிரஸ் ஆட்சி இருந்தால் மட்டுமே நாட்டின் ஒருமைப்பாடு இருக்கும் என்ற நேரு கால சிந்தனையும் மாறிவிட்டது.இதற்கு காரணம், வளர்ச்சி என்பது ஒருமித்த மாதிரி இல்லை. மிகப்பெரிய மாநிலங்களான, உ.பி., பீஹார் போன்ற மாநிலங்கள், என்று வறியவர் இல்லாத மாநிலமாக மாறுமோ என்ற நிலை, இந்தியா சுதந்திரம் அடைந்து, 70 ஆண்டுகள் ஆன பின் சிறிது மாறியது.இன்னமும் நாட்டில், 25 கோடி மக்கள் வறியவர்கள் என்ற செய்தி கூறப்படுகிறது. ஆனால், ஆதாரம் இல்லாத தகவல். எதற்கு எடுத்தாலும், நான்கு முதல், ஐந்து ஆவணங்களை பார்த்து மதிப்பீடு செய்ய வேண்டும்.'டிஜிட்டல்' நடைமுறைகள், அதற்கேற்ற ஆவண சேகரிப்புகள், இந்த அரசில் அதிக முன்னோட்டம் பெற்றிருக்கிறது. அத்துடன், தற்போது குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு, அதிக சர்ச்சை பெறும் அளவுக்கு பேசப்படுகிறது. அதிலும் தந்தை பெயர், மற்ற சில விபரங்களை தற்போது சேர்ப்பதை, மத்திய அரசு கைவிட்டிருப்பது நல்ல திருப்பம்.அப்படியிருக்கும் போது, ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அல்லது திடீரென ஒரு பகுதியில் நுாற்றுக்கணக்கில் குடியேறியவர்கள், அந்த ஊரில் உள்ள சில செல்வாக்கு பெற்ற கட்சித் தலைவர்களுக்கு, பணம் பெற்று ஒட்டுமொத்தமாக ஓட்டளித்து, அவரை மக்கள் பிரதிநிதியாக வலம் வர செய்யும் வழிகள் பல உள்ளன. ஆகவே, இன்று இந்த குடியுரிமை சட்டம் வந்த பின், இந்திய நாட்டில் சில திட்டங்கள், அதுவும் அமெரிக்கா போல, ஐரோப்பிய நாடுகளில் உள்ள சில நாடுகள் போல, ஏன் பிரிட்டன் போல சில நடைமுறைகள் அமலாவதின் துவக்கம் என்பதை, பல நாடுகள் உணரத் துவங்கி விட்டன.அதன் ஒரு பகுதி அடையாளமாக, அமெரிக்காவின் அதிபர் டிரம்ப், இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படையான, 'பிசினஸ்மேன்' என்ற கோணத்தில் பார்க்கிறார். சீனாவுடன் நெருக்கம் மட்டும் போதாது என்பதே இதற்கு காரணம்.குடியுரிமை சட்டம், காஷ்மீர் தனி அந்தஸ்து நீக்கியது ஆகியவை, இன்னமும் சில நாடுகளால் மனதளவில் ஏற்க முடியாதது என்பதே உண்மை. எதுவரை வலுவில்லாத தலைமை அல்லது அரசு இருக்கிறதோ, அது மற்ற நாடுகள் மனதளவில் ஆதரிக்கும் விஷயம். 1,000 ஆண்டுகள் அடிமையாக இருந்த இந்தியா என்ற வரலாற்றுப் பார்வை, இவர்கள் கருத்துக்கு சாதகமாகும்.அதனால், இப்போது மத்திய பட்ஜெட்டை விட, எளிய மக்களுக்கு அதிகம் புரியாத குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய பதிவேடு குறித்து, தினம் தினம் முன்னாள் காங்., தலைவர் ராகுல் பேசுவதுஒன்றும் புதிதல்ல. இவை, இன்று தேவை இல்லை.இதனால், நாட்டின் இறையாண்மையில் மத ரீதியாக பிளவு வரும் என்பதும் சரியல்ல. இந்த நாடு மிக மோசமான அவசர நிலையை சந்தித்து, மீண்டும் ஜனநாயகத்தை வேரூன்ற வைத்த நாடு. இன்று இக்குடியுரிமை சட்டத்தை எதிர்க்க, ஒரு குழு மத அடிப்படையில் ஆட்களை சேர்த்து, அதற்கு பணம் தந்து அக்குரலை எழுப்புவதும், அதை விட துரதிர்ஷ்டவசமாக, மாணவர்களில் ஒரு சில அமைப்பைச் சேர்ந்தவர்களை போராட்டம் நடத்த துாண்டுவதும் நடக்கிறது.போராட்டம் என்பது, இளைய தலைமுறையினர் உரிமை என்றாலும், மத்திய பட்ஜெட் எந்த வித எதிர்பார்ப்புகளுடன் இருக்க வேண்டும் என்பது குறித்த அலசல் குறைந்திருக்கிறது. அதனால், நிச்சயமாக இந்த பட்ஜெட் எவ்வித வரிச் சலுகை, வளர்ச்சிக்கான மாற்றுப் பாதையை அடையாளம் காட்டும் திட்டங்களை கொண்டிருக்கும் என்ற பல்வேறு துறை நிபுணர்கள் கருத்து, காட்சி ஊடகங்களில் அதிகம் வெளிவரவில்லை.இது, இப்பட்ஜெட் தயாரிக்கும் நிர்மலா சீதாராமனுக்கு சாதகம். ஏனெனில், பொருளாதார சிக்கல் நிறைந்த பட்ஜெட்டை, அவரது அணுகுமுறை வெளிப்படுத்தி விடும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement