dinamalar telegram
Advertisement

கறுப்பு ஆடுகள்!

Share

தமிழகத்தின் பல்வேறு மட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களில், 'குரூப் - 4' தேர்வு முறைகேடு என்பதுடன், அடுத்ததாக, 'குரூப் - 2' தேர்வு முறைகேடு குறித்த விஷயமும், கசியத் தொடங்கியிருக்கிறது.

பொதுவாக அரசுப் பணிகளுக்கு ஆள் சேர்க்கும் விவகாரம், அதிக கவனத்தை ஈர்க்கும் விஷயமாக காலம் காலமாக இருந்த போதும், இப்போது அதன் வேகம் குறைகிறது.காரணம் பொதுவாக வேலைபார்க்க துவங்கும் காலம், 20 வயது முதல் தொடங்கும் என்பதும், சமயங்களில் அரசின் கடைத்தட்டு பணிகளில் வேலைசேர அதிலும் ஒன்றிரண்டு வயது குறைவாக இருக்கலாம் என்ற பழைய கணக்கு, இன்றில்லை.அதனாலும், தனியார் மற்றும் சுய சார்புத் தொழில்களில் வருமானம் பார்க்க முடிவதாலும், அரசு பணிகளில் பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை. அதிலும் சுயசார்பு என்ற வேலை என்பது முதலீட்டாளர், தொழில் முனைவோர் என்ற இரு அம்சங்களை உள்ளடக்கிய கவுரவம் மற்றும் வருவாய்த் தேடல் அதிகமாவதால், அதில் முனைப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, வேலைவாய்ப்பு தகவல் குறித்த மதிப்பீடுகள், ஐந்தாண்டுகளுக்கு முந்தைய நிலையில் இல்லை.

அதே சமயம், அரசு வேலைக்கு தொடர்ந்து முயற்சி செய்து, 35 வயதைத் தாண்டியவர்கள் தேர்வாகியிருப்பது, பணி பாதுகாப்பு, நிரந்தர மாத வருவாய் மற்றும் பென்ஷன் சலுகை ஆகியவற்றை எதிர்பார்த்தே!அதே சமயம், இத்தனை கோடி பேருக்கு வேலை கிடைத்தது என அரசியல்வாதிகள் கூறுவதில், அடிப்படை உண்மை இருப்பது சந்தேகமே.இப்போது, எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது.

'தகவல் புதையல்கள்' காதைப் பிளக்கின்றன. குறிப்பாக, அரசு தேர்வு அமைப்பு தொடர்பாக வெளிவரும் தகவல்கள், அதிர்ச்சியூட்டுகின்றன. அரசு அலுவலர், அரசு உயர் அதிகாரி மற்றும் தலைமைப் பொறுப்பு அதிகாரிகள், தொடர்ந்து, 25 ஆண்டு காலம், பல்வேறு பதவிகள், பொறுப்புகளை அலங்கரிக்கும் போது, கோப்புகளை நகர்த்தும் உத்தி, அவர்களுக்குக் கைவந்த கலையாகி விடுகிறது.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் எனில், காலம் காலமாக சிறப்பு பெயர் பெற்ற பலர் உள்ளனர். ஜி.பார்த்தசாரதி, விட்டல், பூரணலிங்கம் என, பல பெயர்களைச் சொல்லலாம். ஆனால், 'குரூப் - 4' தேர்வு முறைகேடுகளில், தேர்வாணைய அதிகாரிகள் கைது என்பது, வங்கி ஊழல் புகார்களில் சிக்கும் பெரிய அதிகாரிகளை நினைவுபடுத்துகிறது.அதிலும், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தேர்வு மையங்களை இவர்கள் தங்கள் நிலைக்களனாக்கி, லஞ்ச பேரத்தில் நெருங்கி நின்றவர்களை, ஒருங்கிணைத்துள்ளனர். அதைவிட, அந்த விடைத்தாளில் எளிதில் அழியும் மையை அறிமுகப்படுத்தி, அதற்குப் பின் அவைகளை முறையான விடையுடன் சரியாக எழுதி, மோசடி செய்த, 99 பேர் சிக்கிய விவகாரம், அரசுத் தேர்வு இனி எட்டாக்கனி என்பதை முடிவு செய்திருக்கிறது. இதில் சிக்கியவர்கள், பெரும்புள்ளிகள் ஆனாலும், 'கறுப்பு ஆடுகளை தண்டிப்பது அரசின் செயல்' என தமிழக அரசு சார்பில் கருத்து தெரிவித்திருப்பது, முதல் கட்ட அதிரடியாகும்.

அதே சமயம், இக்குழப்பத்தால், தேர்வு ரத்தாகி மறு தேர்வு நடக்குமா என்ற குழப்பம் வராமல், அரசு தெளிவாக்கியுள்ளது, ஆயிரக்கணக்கானவர்களுக்கு, மன உளைச்சல் ஏற்படாமல் தடுக்கும்.

ஆனால், அதே சாயலில், 'குரூப் - 2 தேர்வு முறைகேடு' வெளியாகி இருப்பது, கவலை தரும் விஷயம். இதன் மூலம், இத்தேர்வில் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்ற ஒவ்வொருவரும், பணம் பண்ணும் யுக்தியைக் கையாள்வர் என்பது நிச்சயம். இதை, தொழில் தர்மமாகவே அவர்கள் கருதுவர்.இதே சமயத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர்நியமன முறையில், சரியான அணுகுமுறை இல்லை என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவும், டி.என்.பி.எஸ்.சி., தன் கவுரவத்தைக் கட்டிக் காக்கத் தவறியதோ என்று கருத வழி காட்டுகிறது.

இதில், அரசியல்வாதிகள் தொடர்பு இருப்பதாக வெட்டவெளிச்சமாகி விட்டால், மக்கள் ஒட்டுமொத்தமாய், டி.என்.பி.எஸ்.சி.,யை ஒதுக்கிவிடுவர். தியாக சீலர்களாக இருந்த அரசியல்வாதிகளை மக்கள் மறந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளதும், மறுக்க முடியாத உண்மை. ஒன்றை மட்டும் ஆணித் தரமாகப் பதிவிடலாம்... காவல் துறை உட்பட, அரசின் பல துறைகளையும், ஊழலை வைத்தே அடையாளம் காணும் நிலை ஏற்பட்டால், தமிழகம் தனித் தன்மையுடன் விளங்குகிறது என்பதற்கான சான்றே இல்லாமல் போய்விடும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    அரசு ஊழியர் ஆசிரியர்கள் சான்றிதழ்களை சரி பார்த்தால் 60 சதவீதத்தினர் சிறைக்குப் போக வேண்டியதுதான். TNPSC இயக்குனர் மற்றும் உறுப்பினர் வீட்டில் சோதனையிட்டால் பல உண்மைகள் வரும்

  • Sridhar - Chennai,இந்தியா

    ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் தேர்தலை கட்சிகள் சந்தித்தால், அரசியல் தலைவர்கள் லஞ்சத்தை ஒழிப்போம் என்று பிரமானம் செய்தால் மட்டுமே மக்களுக்கு நல்ல ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement