dinamalar telegram
Advertisement

தமிழக பட்ஜெட்... அமலாக்கம் எளிதா?

Share

தமிழகத்தின், 2020-2021வது ஆண்டு பட்ஜெட், பல்வேறு திசைகளில் பயணித்ததைதுணை முதல்வர் பன்னீர்ச் செல்வம், அதை நீண்ட நேரம் வாசித்ததிலிருந்து புரிந்து கொள்ளலாம்.மூன்று ஆண்டு ஆட்சியை, முதல்வர் பழனிசாமி முடித்திருக்கிறார். அரசியலில் அறிமுகம் இல்லாத தலைவர் என்ற கருத்தை, அவர் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் மாற்றி இருக்கின்றன.முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இரட்டைத் தலைமை என்பதைவிட, பல்வேறு மாவட்டங்களில், அ.தி.மு.க., அமைப்பு தொடர்ந்து செயல்படும் வகையில் கட்சிப் பாதை செல்வதைக் காண முடிகிறது.'பா.ஜ.,வுடன் இணைந்த கட்சி' என, எதிர்க்கட்சியான, தி.மு.க., வர்ணித்தாலும், மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய முறையான ஒதுக்கீடுகளைப் பெற, இந்த இணக்கம், வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.அடுத்த ஆண்டு மே மாதத்தில், சட்டசபைத் தேர்தலை சந்திக்கப் போகும் ஆளும் கட்சி, நடப்பு பட்ஜெட்டை சமர்ப்பித்த விதம், சில பிரச்னைகளுக்கு இப்போது விடை காண முடியாத நிலையை தோற்றுவிக்கிறது. பொதுவாக பட்ஜெட் என்பது, சில எதிர்பார்ப்புகளுடன், வளர்ச்சியை அதிகரிக்க உதவும் ஒரு சாதனம் ஆகும். ஆகவே, இன்னமும் ஏதாவது கவர்ச்சி அறிவிப்புகள் அறிவித்து, அதை நிறைவேற்ற நிதி திரட்டும் வேலையை, அரசு இந்த பட்ஜெட்டில் காட்டவில்லை என்பது ஒரு அம்சமாகும்.தமிழகத்தில் மொத்த வரி வருவாய், 1.33 லட்சம் கோடி. இதில் மத்திய அரசின் பங்கு, 64 ஆயிரத்து 259 கோடி ரூபாய். அதைவிட அரசு ஊழியர் சம்பளம், பென்ஷன் ஆகியவை, 96 ஆயிரம் கோடி. பல்வேறு மானியங்கள் மற்றும் இதர சில சலுகைகள், 94 ஆயிரம் கோடி.இம்மாதிரி சில செலவினங்கள் நம் மாநிலம் வளர்ந்த மாநிலம் என்பதன் அடையாளமாக கருதப்பட்டாலும், இதற்குப் பின் என்ன புதிதாக வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவழிக்க முடியும்!மற்றொரு முக்கிய அம்சமாக, கல்வித்துறைக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் என்பது, ஒரு பெரிய செலவினம். தமிழகம் இத்துறையில் முன்னணியில் இருப்பதுடன், ஏற்கனவே, இலவச பாடப் புத்தகங்கள், மிதிவண்டி, மடிக்கணினி என்று பல சலுகைகள் தரப்பட்டிருக்கின்றன. அதே சமயம், கல்வித்துறை சீராக, அரசு பள்ளிகள், அதன் நிர்வாகம், உட்கட்மைப்பு என்று பலவகை செலவினங்களை, இந்த பட்ஜெட் சுட்டிக் காட்டுகிறது. இவை வரவேற்கத்தக்கது. ஏனெனில் கல்வி கற்பிக்கும் முறை சீராகும் போது, குறைந்த கட்டணத்தில் எளிதாக, பிளஸ் 2 வரை, கிராமப்புறங்கள் வரை கல்வி போய் சேரும்.அதேசமயம், ஆரம்பப் பள்ளிகளில், 50 சதவீத தலைமையாசிரியர்களை நேரடியாக தேர்வு செய்யும் முறையை பரிசீலிக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் யோசனை கூறியிருக்கிறது.இன்றைய நிலையில், இதை கேரளா உட்பட சில மாநிலங்கள் ஆதரிக்கவில்லை. இப்பதவியில் ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள் அல்லது பணியாளர்கள், தங்கள் வாய்ப்புகளை வளர்த்துக் கொள்ளும் போது, முன்னுரிமை தரப்படுகிறது. ஆனால், இன்றுள்ள புதிய பாடத்திட்டத்தில், நேரடியாக அதிகம் தகுதி பெற்ற பலர் அரசு வேலை கருதி புதிதாக வந்தால், அரசு பள்ளிகளில் படிக்கும், 20 லட்சம் மாணவ, மாணவியர் தகுதியானது, புதிய பாடத்திட்டப்படி அதிகரிக்கும், அதற்கு வழி வருமா?மற்றொரு அம்சமாக காவிரி - குண்டாறு இணைப்புத்திட்டத்திற்கு 700 கோடி ரூபாய் ஒதுக்கிய போதும், நீர் ஆதார வளத்திற்கு ஒதுக்கப்பட்டது. 6,900 கோடி ரூபாய் என்பது எப்படி வளத்தை அதிகரிக்கும் என்று இன்று மதிப்பிட முடியாது.நெடுஞ்சாலைத் துறைக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய், எரிசக்தித் துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் என்று குறிப்பிட்ட பட்ஜெட், நிதிப்பற்றாக் குறையை, 59 ஆயிரத்து, 346 கோடி என்று காட்ட கருவியாக அமைந்திருக்கிறது.நிதிப்பற்றாக்குறை மொத்த வளர்ச்சியில் மிகக் குறைந்த சதவீதம் என்பது, 'கண்கட்டு வித்தை' என்றே கூறலாம். ஏனெனில், தமிழகம் அதிக வளர்ச்சியைத் தரும் மாநிலம் என்பதால், மற்ற வரிவருவாய் இனங்கள் அதிகரிக்கும் என்ற மதிப்பீடு, இப்போதைய அணுகுமுறைக்கு பொருந்துமா என்பதை மதிப்பிட முடியாது.இந்தியப் பொருளாதாரம், 'வளர்ச்சி குறைந்த பாதையில்' பயணிப்பதற்கு காரணம், பணத்தைப் பெருக்கும் தொழில்கள், மீண்டும் முதலீடு செய்து, வேலைவாய்ப்பை அதிகரிக்காத நிலையில், தமிழகத்தில் அடுத்த ஓராண்டில் அதிக வளர்ச்சி எப்படி வரும்? அதன் பாதை என்ன என்பதை பட்ஜெட் அறிகுறிகள் அதிகம் காட்டவில்லை.மாறாக உலக முதலீட்டாளர்களை கவரும் மாநிலமாக தமிழகம் அடுத்த இரு ஆண்டுகளில் மாறும் பட்சத்தில் ஓரளவு பாதை சிறிது மாறலாம். அதற்கும் நாம் இன்னமும் காத்திருக்க வேண்டும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement