Advertisement

ராகுல் பாயும் புலியானது ஏன்?


ராகுல் பாயும் புலியானது ஏன்?

'அதிகாரம் இல்லாமல், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தால் தான், மக்களுக்கு வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம், நம் அரசியல்வாதிகளுக்கு வரும் போலிருக்கிறது' என, காங்கிரஸ் எம்.பி., ராகுலைப் பற்றி முணுமுணுக்கின்றனர், அமேதி தொகுதி மக்கள். ராகுல், உத்தர பிரதேச மாநிலம் அமேதி லோக்சபா தொகுதியில், மூன்று முறை வெற்றி பெற்றவர். ஆனால், கடந்த தேர்தலில், அமேதி மக்கள், இவரை தோற்கடித்தனர். நல்லவேளையாக, கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டதால், அங்கு அவர் வெற்றி பெற்றறார். காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தபோதெல்லாம், ராகுல், லோக்சபாவுக்கு வருவதும் தெரியாது; போவதும் தெரியாது. பெரும்பாலும் அமைதியாகத் தான் இருப்பார். விவாதங்களிலும் பெரிய அளவில் பங்கேற்க மாட்டார். கடந்த, 2004 - 2019 ஆண்டுகளில் அவர், அமேதி எம்.பி.,யாக இருந்தபோதும், ஒட்டு மொத்தமாக, மூன்று கேள்விகள் மட்டுமே கேட்டிருந்தார். ஆனால், கடந்த, 10 மாதங்களில் மட்டும், வயநாடு எம்.பி., என்ற முறையில், ராகுல், 32 கேள்விகளை கேட்டு, அதற்கு, ஆளும் தரப்பிடமிருந்து பதிலும் பெற்றுள்ளார். இதைக் கேள்விப்பட்ட அமேதி மக்கள், 'நம் தொகுதியின் எம்.பி.,யாக இருந்தவரை, லோக்சபாவில் ராகுல் வாய் திறக்கவே இல்லை. கடந்த தேர்தலில் நாம் தோற்கடித்து விட்டதால், அவருக்கு பயம் வந்து விட்டது. அதனால் தான், லோக்சபாவில் பாயும் புலியாக சீறுகிறார்' என, எரிச்சலுடன் கூறுகின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement