Advertisement

அறிவியல் ஆயிரம்

நான்கு நிலை

கொரோனா வைரஸ் பாதிப்பில் நான்கு நிலைகள் உள்ளன. முதல் கட்டம் என்பது இறக்குமதி பரவல், கொரோனா பாதித்த வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு தொற்று கண்டறியப்படுதல், இரண்டாம் கட்டம் என்பது உள்நாட்டு பரவல், இது வெளிநாடுகளில்இருந்து வந்தவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுதல். மூன்றாம் கட்டம் என்பது சமூக பரவல், உள்நாட்டில் பாதிக்கப்பட்டவர் மூலம் மற்றவர்களுக்கு பரவுதல். நான்காம் கட்டம் என்பது தொற்று நோய் பரவல், இதில் எங்கு யார் மூலமாக பரவியது என அறிய முடியாத நிலை.


தகவல் சுரங்கம்


நீண்ட நாள் சபாநயகர்

லோக்சபா சபாநாயகராக இதுவரை 17பேர் பதவி வகித்துள்ளனர். முதல் சபாநாயகர் ஜி. வி. மாவல்ஙகர். இவர் 1952 மே 15- 1956 பிப்.27 வரை பதவியில் இருந்தார். அதிக நாட்கள் சபாநாயகராக இருந்தவர் பைராம் ஜாக்கர். இவர் எட்டாவது சபாநாயகராக 1980- ஜன.22-1984 அக். 27 மற்றும் 1985 ஜன.16-1989 டிச.18 வரை என 8 ஆண்டுகள் 299 நாட்கள் பதவி வகித்தார். குறைந்த நாள் சபாநாயகர் பதவி வகித்தவர் எம்.ஏ. அய்யங்கார். இவர் இரண்டாவது சபாநாயகராக 1956 மார்ச்8, 1957 மே 10 வரை ,1 ஆண்டு ,63 நாட்கள் பதவி வகித்தார்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Murali Iyengar - Bangalore,இந்தியா

    அறிவியல் ஆயிரத்தில் சபாநாயகர் பலராம் ஜாக்கரை பெயர் தவறாக பைராம் ஜாக்கர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement