Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
இறப்புக்கு என்ன காரணம்

உலகில் 'கொரோனா' வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கையில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இத்தாலியில் 'கொரோனா' வைரசால் உயிரிழந்தவர்களில் 99.2 சதவீதம் பேருக்கு, ஏற்கனவே மற்ற நோய் பாதிப்புகள் இருந்தன என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 355 பேரில், 48.5 சதவீதம் பேருக்கு மூன்றுக்கு மேற்பட்ட மற்ற நோய் பாதிப்புகள் இருந்துள்ளன. 25.6 சதவீதம் பேருக்கு இரண்டு நோய்களும், 25.1 சதவீதம் பேருக்கு ஒரு நோய் பாதிப்பும் இருந்தன. மூன்று பேர் (0.8 சதவீதம்) மட்டுமே எவ்வித மற்ற நோய் பாதிப்பும் இல்லாதவர்கள்.

தகவல் சுரங்கம்
எந்த துறை அதிகம்

ராஜ்யபாவில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 245. இதில் எம்.எல்.ஏ.,க்கள் மூலம் 233 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தவிர பல்வேறு துறைகளில் சாதித்தவர்களில் இருந்து 12 பேர், ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். தற்போதைய நியமன எம்.பி.,க்கள் 12 பேரில், அதிகபட்சமாக கலைத்துறையில் இருந்து நான்கு, சமூக சேவை மற்றும் பொருளாதார துறையில் இருந்து தலா இரண்டு, பத்திரிகை, இலக்கியம், விளையாட்டு மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் இருந்து தலா ஒருவர் என 12 பேர் உள்ளனர். இவர்களின் பணிக்காலம் ஆறாண்டு.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement