Advertisement

ஊருக்கு மட்டும் உபதேசமா?

'முதல்வராக இருப்பவர், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டாமா; இப்படியா நடந்து கொள்வது' என, கர்நாடக முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பாவை பற்றி எரிச்சலுடன் பேசுகின்றனர், அந்த மாநில மக்கள்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவும் இதற்கு விதிவிலக்கல்ல.'பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை மூட வேண்டும். ஊழியர்கள், வீட்டிலிருந்தே வேலை பார்க்க வேண்டும். 'ஷாப்பிங் மால், தியேட்டர், பெரிய வர்த்தக நிறுவனங்களை மூட வேண்டும். பொது இடங்களில் மக்கள் கூடக் கூடாது' என, அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்தார் எடியூரப்பா. அடுத்த சில நாட்களிலேயே பெலகாவியில் நடந்த, பா.ஜ., பிரமுகர் ஒருவரது இல்லத் திருமண விழாவில், படை பரிவாரங்களுடன் எடியூரப்பா பங்கேற்றார். இந்த திருமணம், மிக பிரமாண்டமாக நடந்தது. ஆயிரக்கணக்கானோருக்கு தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது. முதல்வர் பங்கேற்றதால், அரசு அதிகாரிகளும் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

இதைப் பார்த்த மக்கள், 'மக்கள் பொது இடங்களில் கூடக் கூடாது என உத்தரவிட்டார் எடியூரப்பா. ஆனால், அவர் மட்டும், ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கலாமா... ஊருக்கு உபதேசம் செய்வதே, இவர்களை போன்றவர்களுக்கு வேலையாக உள்ளது' என, புலம்புகின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    எதுவானா என்ன சார் இப்படி செஞ்சா சாவு பக்கத்தில் போவாங்க என்று தான் சொல்ல முடியும் மீறி செஞ்ச போய்ட்டு வாங்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement