Advertisement

இது தான் நாகரிகமா?

'நாங்களே தோல்வி மேல் தோல்வி அடைந்து, துவண்டு போயுள்ளோம். எங்களை வைத்து காமெடி செய்வது நியாயமா' என, புலம்புகின்றனர் காங்கிரஸ் பிரமுகர்கள்.

லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால், காங்கிரஸ் கட்சி கலகலத்துள்ளது. தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல், 'அரசியலில் தொடரலாமா, வேண்டாமா' என, தீவிரமாக ஆலோசித்து வரும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. இது போதாதென, மத்திய பிரதேசத்தில், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசும், சமீபத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த நிலையில் தான், ராகுலின் உதவியாளராக பதவி வகித்து, ஓய்வு பெற்ற பங்கஜ் சங்கர் என்பவர், லவ் யூ பப்பு என்ற பெயரில், ஹிந்தியில் ஒரு சினிமா தயாரித்து வருகிறார். 'பப்பு' என்பது, ராகுலை கிண்டலடிப்பதற்காக எதிர்க்கட்சியினர் சூட்டியுள்ள பட்டப் பெயர். இந்த பெயரில், ராகுலின் முன்னாள் உதவியாளர் படம் தயாரிப்பது, காங்கிரஸ் கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது
. 'பங்கஜ் சங்கருக்கு பெரும் நிதி கொடுத்து, ராகுலை கிண்டலடிக்கும் விதமாக படம் எடுக்கும்படி, பா.ஜ., வினர் அறிவுறுத்தியுள்ளனர். ராகுலின் நற்பெயரை கெடுப்பதே இந்த படத்தின் நோக்கம்' என, கதறுகின்றனர் காங்., பிரமுகர்கள். பங்கஜ் சங்கரோ, 'இது முழுக்க முழுக்க கற்பனை கதை. யாரையும் கேலி செய்வதற்காக எடுத்த படமல்ல' என்கிறார். காங்., பிரமுகர்களோ, 'ராகுல் பெரும் சோகத்தில் இருக்கிறார். இந்த நேரத்தில், அவரை கிண்டலடித்து படம் எடுப்பது, நாகரிகமான அரசியல் தானா' என, விரக்தியுடன் கூறுகின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • karutthu - nainital,இந்தியா

    அப்போ ராகுலை பப்பு என்று சொல்லாமல் அப்பு என்று சொல்லுங்கள் . பிரச்னை தீர்ந்துவிடும் ஒரு கட்சித்தலைவரை கிண்டல் செய்யலாமா ? மக்களே சிந்தியுங்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement