Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
கல்லீரல் கவனம்

உலகில் வயதானவர்கள் அதிகளவில் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். சீனாவின் புடான் பல்கலை 1990 - 2017ம் ஆண்டு வரை 195 நாடுகளில் ஆய்வு நடத்தியது. இதில் 30 வயதுக்கு உட்பட்டவர்களில் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 1990ல் 17,381 ஆக இருந்தது. இது 2017ல் 14,661 ஆக குறைந்தது. அதே நேரத்தில் 1990ல் 30 -59 வயதுக்குட்பட்டோர் 2,16,561 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர் 2,41,189 பேர் பாதிக்கப்பட்டனர். இது 2017ல் 3,59,770 மற்றும் 5,78,344 ஆக குறைந்தது.

தகவல் சுரங்கம்
தேசிய ரயில் மியூசியம்

இந்தியாவின் துவக்ககால ரயில்களுக்கும், தற்போதைய ரயில்களுக்கும் வித்தியாசம் உள்ளது. பழைய தொழில்நுட்பங்களை மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக தலைநகர் டில்லியில் 'தேசிய ரயில் மியூசியம்' அமைக்கப்பட்டுள்ளது. இது 1977ல் திறக்கப்பட்டது. இங்கு நிலக்கரி, டீசல், மின்சாரம் என பல கால கட்டத்திலும் பயன்படுத்திய ரயில் இன்ஜின்கள், மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மியூசியம் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. திங்கள் மற்றும் தேசிய விடுமுறை தினங்கள் தவிர அனைத்து நாட்களும் திறந்திருக்கும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement