Advertisement

'காங்கிரசே காணாம போயிடும்!'

'காங்கிரசே காணாம போயிடும்!'


மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத், ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியா மீது, கடும் கோபத்தில் இருக்கிறார். 'மத்திய பிரதேசத்தில், என் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்வதற்கு, முக்கிய காரணமே வசுந்தரா தான்' என, புலம்புகிறார்.ம.பி., காங்கிரசின் முன்னணி தலைவராக இருந்து, சமீபத்தில், 22 எம்.எல்.ஏ.,க்களுடன், பா.ஜ., வில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியாவின் அத்தை தான் வசுந்தரா. ஜோதிராதித்யா சிந்தியாவின் தந்தையும், காங்., மூத்த தலைவருமான, மறைந்த மாதவ்ராவ் சிந்தியாவும், வசுந்தராவும் உடன் பிறந்த சகோதர சகோதரிகள். ராஜ குடும்பத்தை சேர்ந்த இவர்கள், பல ஆண்டுகளாகவே வேறு வேறு அரசியல் கட்சிகளில் செயல்பட்டு வந்தனர். இவர்களை ஒரே கட்சிக்கு கீழ் கொண்டு வர, ஏற்கனவே காங்கிரசும், பா.ஜ., மேலிடமும் கடும் முயற்சி மேற்கொண்டாலும், அதில் பலன் கிடைக்கவில்லை.இந்த நிலையில் தான், வசுந்தரா மூலம், அவரது மருமகன் ஜோதிராதித்யாவை, தங்கள் பக்கம் இழுக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது, பா.ஜ., மேலிடம்.இதையடுத்து, வசுந்தரா அடிக்கடி ஜோதிராதித்யாவை சந்தித்து பேசி, அவரை, பா.ஜ.,வுக்கு இழுத்து விட்டார். இதையறிந்த கமல்நாத், 'வசுந்தராவின் குடும்ப அரசியலால், என் பதவி பறிபோய் விட்டது. இன்னும் கொஞ்ச நாளில், காங்கிரசே காணாமல் போய் விடும் போலிருக்கிறது' என, கதறுகிறார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement