Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
நெருப்பு வளையம்

ஜப்பானில் தொடங்கி அமெரிக்காவின் கலிபோர்னியா வரை உள்ள பசிபிக் தட்டு பகுதி, புவியியலில் பசிபிக் நெருப்பு வளையம் (ரிங் ஆப் பயர்) எனப்படுகிறது. இப்பகுதியில் 452 எரிமலைகள் உள்ளன. உலகில் உள்ள எரியும் எரிமலைகளில் 75 சதவீதம் இங்குதான் உள்ளன. எனவே இது 'நெருப்பு வளையம்' என அழைக்கப்படுகிறது. உலகிலேயே அதிகளவு நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாகவும் உள்ளது. இங்கு 90 சதவீத பகுதி நிலநடுக்கம் ஏற்படுபவை. உலகின் பெரிய நிலநடுக்கங்களில், 80 சதவீதம் இங்குதான் ஏற்படுகிறது.

தகவல் சுரங்கம்
உயரமான வாழிடம்

பெரு நாட்டில் உள்ள மலைவாசஸ்தலம் 'லா ரின்கோனடா' இது உலகில் மக்கள் வாழ்விடங்களில் உயரமான பகுதி. கடல் மட்டத்தில் இருந்து 16,700 அடி உயரத்தில் உள்ளது. இப்பகுதியின் முக்கிய பொருளாதாரம் தங்க உற்பத்தி தான். இங்குள்ள தங்க சுரங்கங்கள் இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புஅளிக்கிறது. இதனால் இங்கு வாழும் மக்கள்தொகையின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2012 கணக்கின்படி, இங்கு 50 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். பெண்களுக்கு இங்குள்ள சுரங்கங்களில் வேலை பார்க்க அனுமதியில்லை.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement