Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
தாழ்வான இடம்

ஜோர்டான் - இஸ்ரேல் இடையே சாக்கடல் உள்ளது. இது கடல் அல்ல. உப்பு நீர் ஏரி. இங்கு மீன், நண்டு உட்பட உயிரினங்கள் வாழ இயலாது. இதனால் 'சாக்கடல்' என அழைக்கப்படுகிறது. இதன் உப்புத்தன்மை 34.2 சதவீதம். இது மற்ற கடல்களைவிட 10 மடங்கு அதிகம். இந்நீரின் அடர்த்தி மனித எடையை விட அதிகம். இதனால் மிதக்க முடிகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து, 1,412 அடி தாழ்வாக அமைந்துள்ளது. 67 கி.மீ. நீளமும், 18 கி.மீ. அகலமும் கொண்டது. இங்கு வெப்பநிலை அதிகம். மழைப்பொழிவும் குறைவு.
தகவல் சுரங்கம்
குறைந்த மக்கள் அடர்த்தி

உலகின் பெரிய தீவு பகுதி கிரீன்லாந்து. அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் கடல்களின் நடுவே உள்ளது. இது டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு தன்னாட்சி நாடுகளில் ஒன்று. கிரீன்லாந்து என்றால் உலகின் பசுமையான தேசம் என நினைக்க வேண்டாம். இதன் பரப்பளவில் மூன்று பங்கு பனிக்கட்டிகளால் ஆனது. இது அண்டார்டிகாவுக்கு அடுத்து பனிக்கட்டிகள் அதிகமுள்ள பகுதி. கிரீன்லாந்தில் வெப்பநிலை மைனசில் தான் இருக்கும். இதன் மக்கள் தொகை 56,500. இதுதான் உலகின் மக்கள் தொகை அடர்த்தி குறைந்த நாடு என அழைக்கப்படுகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement