Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
அதிக உப்பு 'தப்பு'

உப்பில்லாத உணவு சுவையாக இருக்காது. ஆனால் உப்பு அளவோடு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. உப்பின் வேதியியல் பெயர் சோடியம் குளோரைடு. இந்நிலையில் அதிகளவில் உப்பு உணவில் சேர்த்துக்கொள்வது ரத்த அழுத்தம் உயர்வுக்கு மட்டும் காரணமல்ல. இது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கிறது என ஜெர்மனியின் பான் மருத்துவமனை பல்கலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு நாளைக்கு ஒருவர் ஐந்து கிராம் உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

தகவல் சுரங்கம்
எது பெரிய தொகுதி

இந்தியாவில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் நாட்டில் பெரிய தொகுதி மல்காஜ்கிரி. இதன் மொத்த வாக்காளர்கள்
எண்ணிக்கை 2014 கணக்கின் படி 31,83,325. இது தெலுங்கானாவில் உள்ள 17 லோக்சபா தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதியில் செகந்திராபாத் கன்டோன்மென்ட், மெட்சல், குகத்பள்ளி, எல்.பி.நகர்., உள்பட ஏழு சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன. 2019 லோக்சபா தேர்தலில் இத்தொகுதியில் இருந்து எம்.பி., யாக வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement