Advertisement

இது உங்களுக்கு தேவையா?

'பதவியிலும், அதிகாரத்திலும் இருக்கிறோம் என்பதற்காக, வாய்க்கு வந்தபடி எதை வேண்டுமானாலும் பேசலாமா...' என, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவை பற்றி கொதிப்புடன் கூறுகின்றனர், அந்த மாநில எதிர்க்கட்சி பிரமுகர்கள்.
கொரோனா வைரஸ் பீதியால் நாடே முடங்கி கிடக்கிறது. தெலுங்கானாவில், ஊரடங்கு உத்தரவை மீறி, பொதுமக்கள் சிலர் வீதிகளில் நடமாடினர். கடும் கோபம் அடைந்த சந்திரசேகர ராவ், 'இனிமேல், வீதிகளில் வெட்டியாக சுற்றித் திரிவோரை கண்டதும் சுடுவதற்கு உத்தரவு பிறப்பித்தால் தான் சரிப்படும்' என்றார். அவரது இந்த எச்சரிக்கை, தெலுங்கானா மக்களிடமும், எதிர்க்கட்சியினரிடமும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. 'மக்களால் தேர்வு செய்யப்பட்டு, முதல்வர் பதவியில் அமர்ந்தவர், சர்வாதிகாரி போல பேசுவது முறையா...' என, கொந்தளித்தனர்.இந்த நெருக்கடியான நேரத்தில், எதிர்க்கட்சியினர் இந்த விஷயத்தை வைத்து, தனக்கு எதிராக தவறாக பிரசாரம் செய்தால், அடுத்த தேர்தலில், ஒரு ஓட்டு கூட கிடைக்காது என நினைத்த சந்திரசேகர ராவ், திடீரென சுதாரித்தார். 'மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக, முன் எச்சரிக்கை செய்யும் நோக்கத்துடன் நான் கூறியதை, எதிர்க்கட்சியினர் தவறாக பிரசாரம் செய்கின்றனர்; அதை யாரும் நம்ப வேண்டாம்' என, கெஞ்சாத குறையாக கூறியுள்ளார்.எதிர்க்கட்சியினரோ, 'அவசரப்பட்டு வாயை கொடுத்து வாங்கி கட்டுகிறார் சந்திரசேகர ராவ்; இது தேவையா' என, கிண்டலடிக்கின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement