Advertisement

இது உங்கள் இடம்

ஆர்.ஆர்.ராஜகோபாலசாமி, காவல் துறை கண்காணிப்பாளர் (பணி நிறைவு) திண்டுக்கலிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், இப்பகுதியில், கல்பலதா மோகன் என்பவர், 'கொரோனா' நோய் தொற்று பரவாமல் தடுக்க, 17 முறைகளை பின்பற்ற அறிவுறுத்தியிருந்தார். அதை, மக்கள் பின்பற்ற வேண்டும்.கொரோனா தொற்று நோய் குறித்து, நம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மிக அவசியம்.

நம்மில் பலர், 'எனக்கு வராது; அடுத்தவருக்கு தான் வரும்' என்ற எண்ணத்தில், அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்ற தவறுகின்றனர்.இந்நோய் தொற்றால், ஸ்பெயின் இளவரசி மரணமடைந்துள்ளார். இங்கிலாந்து இளவரசர், கனடா பிரதமரின் மனைவி ஆகியோருக்கு, நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புமிக்க அவர்களுக்கே, இந்த நிலை!அலட்சியத்தோடு நடந்து கொண்டால், நம் நிலை என்னவாகும் என்பதை, அனைவரும் யோசிக்க வேண்டும்.காவல் துறை கண்டிப்பான நடவடிக்கை எடுத்து, ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த நேரத்தில் மனித நேயம், மனித உரிமை எதுவும் பார்க்காமல், காவலர்கள் லத்தியை சுழற்றினால் தான், மக்களை காப்பாற்ற முடியும். மனிதர்கள் இருந்தால் தானே, மனித உரிமை? இப்போது நோயை வளர விட்டால், பின் அழுது புலம்ப நேரிடும்.அரசு, ஊரடங்கை அவ்வப்போது தளர்த்துவதால், மக்களுக்கு, நோய் பரவல் குறித்த பயம் ஏற்படவில்லை.விதி மீறுவோரை, தோப்புக்கரணம் போடச் சொல்வது, பாட்டு பாடுவது, கும்பிட்டு கெஞ்சுவது போன்ற வேலைகளில் காவலர்கள் ஈடுபடுவதால், ஊரடங்கு நடவடிக்கையை, மக்கள் பலர், விளையாட்டாக எடுத்துக் கொள்கின்றனர்.

சட்டத்தை மீறி, அவசியமின்றி வெளியே சுற்றுவோரை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, 21 நாட்கள் கழித்து தான், திரும்ப கொடுக்க வேண்டும்.அரசின் கட்டுப்பாடுகள், மக்களின் நன்மைக்கே என, அனைவருக்கும் புரியச் செய்து, ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இந்த நேரத்தில், அத்துமீறுவோரிடம் கெஞ்சுவது, பாடுவது, அறிவுரை கூறுவது, நிச்சயம் பலன் தராது; லத்தி மட்டுமே, தீர்வு!

பேச்சைகுறைங்கமக்களே!எஸ்.ஜனமேஜயன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடுத்தர வர்க்க மக்களுக்கு, பக்கத்து வீட்டு நபரின் பெயர் கூட தெரியாது. அவர்களுக்கு, பேசிப் பழகும் கலை தெரியாது. ஆனால், எளிய மனிதர்கள் அப்படி இல்லை. புதியவர்களிடம், 'ஈகோ' பார்க்காமல், அவர்களாகவே உரையாடலை துவங்கி, நட்பு பாராட்டுவர்.'இந்த ஆண்டு, வெயில் அதிகம்ல... படம் எப்படி இருக்குங்க?' என, ஏதாவது கேள்வியோடு, அன்புக்கரம் நீட்டுவர்.ஊரடங்கு உத்தரவால், வெளியே ஊர் சுற்ற முடியாத, நடுத்தர மக்கள், தனிமையில் இருக்கின்றனர். அதனால், யாருடனாவது பேச விரும்புகின்றனர்.

ஆனால், எந்த இடத்தில், நட்பு பாராட்டுவது என, அவர்களுக்கு தெரியவில்லை.காலையில், நாளிதழ் வாங்க, கடைக்குச் சென்றிருந்தேன். எனக்கு முன் நின்றிருந்த ஒருவர், 10 ரூபாய்க்கு பொருள் வாங்கிய பின், கடைக்காரரிடம் பேசலானார்...'அப்புறம், வியாபாரம் பரவாயில்லையா... சினிமாக்காரங்களுக்கு, பெரிய நஷ்டம்ல... 'ஒலிம்பிக்' நடக்காது போலயே' என, அடுத்தடுத்து கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். கடைக்காரரும், ஒரு மரியாதைக்காக, அவருக்கு ஓரிரு வார்த்தையில் பதில் அளித்தார்.கொரோனா காரணமாக, இடைவெளி விட்டு நின்றிருந்த வாடிக்கையாளர்கள், தாமதமாகும் என நினைத்து, வேறு கடைக்கு செல்லத் துவங்கினர்.பத்து ரூபாய் பொருள் வாங்கி, 10 வாடிக்கையாளர்களை துரத்தியடித்தார், அந்த நபர்; கடைக்காரர், தர்மசங்கடத்துடன் நெளிந்தார்.ஐயா, புண்ணியவான்களே... கொரோனா அபாயம் காரணமாக, நீண்ட நேரம், கடை வீதியில் நிற்க கூடாது. எனவே, அனாவசிய பேச்சைத் தவிர்த்து, தேவையானதை வாங்கிய உடன் நகர்வது தான், இன்றைய சூழலில் நல்ல பண்பாகும்.

பாராட்டவேண்டியோரைபுறந்தள்ளலாமா?த.தினேஷ், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகெங்கும் பரவி, உயிர்பலி வாங்கிக் கொண்டிருக்கும், 'கொரோனா' வைரசிடம் இருந்து, நம்மை தற்காத்துக் கொள்ள, வீட்டில் தனித்திருப்பது தான் ஒரே வழி. இதை உறுதி செய்யவே, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இக்கட்டான இந்த காலத்தில் டாக்டர், செவிலியர், சுகாதார ஊழியர்களின் பணி மகத்தானது. தங்கள் உயிரை பணயம் வைத்து, சேவை களத்தில் அவர்கள் குதித்துள்ளனர்.கொரோனா வைரசிற்கு எதிரான போர்க்களத்தில், உலகளவில், ஏராளமான டாக்டர், செவிலியர்கள், தங்கள் உயிரை பறிகொடுத்துள்ளனர்.

இந்த வைரஸ், ஒரு மனிதனிடமிருந்து, இன்னொரு மனிதனுக்கு எளிதில் பரவக் கூடியது. இதை பொருட்படுத்தாமல், அவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.அவர்களின் உன்னத பணியால், இந்தியாவில், 100க்கும் மேற்பட்டோர், கொரோனா பாதிப்பில் இருந்து, உயிருடன் மீண்டுள்ளனர்.இப்படி மகத்தான பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர், செவிலியர், சுகாதாரப் பணியாளர்களுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதி மக்கள், ஒத்துழைப்பு நல்குவது அவசியமானது.பணிக்கு சென்று திரும்பும் டாக்டர், செவிலியர்களை, சில குடியிருப்புகளில் அனுமதிக்க மறுக்கின்றனர். 'வெளியே போகக் கூடாது' என்றும், சிலர் கூறுகின்றனர்.வாடகை வீடுகளில் வசிப்பவர்கள், இந்நெருக்கடியை அதிகமாக சந்திக்கின்றனர்.அவர்கள் மூலம், கொரோனா பாதிப்பு பரவி விடும் எனக் கருதி, சிலர் இப்படி செய்கின்றனர்; இது, மிகவும் துயரமான விஷயம்.அவர்கள், அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் தான், நோயாளிகளை கையாளுகின்றனர்.

கிருமி நாசினியால், தங்களை துாய்மை செய்த பின் தான், வீடு திரும்புகின்றனர்.கொரோனாவை எதிர்த்து, நமக்காக பணியாற்றி வருவோரை அரவணைக்காமல், குடியிருப்புவாசிகள் புறந்தள்ளுவது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவர்களின் ஒப்பற்ற சேவையை பாராட்டி, பிரதமர், மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, சில நாட்களுக்கு முன், நாம் அனைவரும் கைத்தட்டி, நன்றி தெரிவித்தோமே... அதை, நாம் மறந்து விடலாமா?

Advertisement
 

வாசகர் கருத்து (12)

 • Sampath Kumar - chennai,இந்தியா

  பாதுகாப்பு பனி மற்றும் மருத்துவ பனி செய்ப்பவர்கள் தான் முதலில் பரிசோதிக்க படவேண்டும்

 • mayirpudingi - chennai,இந்தியா

  அப்போ எல்லாரும் பட்டினியால் செத்தால் பரவா இல்லையா ? . கொஞ்சமும் யோசிக்கிறதில்லை. இந்தியாவில் தினக்கூலிகள் அதிகம்.

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

   கொரோனாவை விட கொடியவர்களா காவலர்கள் என்பதை மக்கள் சிந்திப்பார்கள் என்று காவலர்கள் நினைப்பார்களா ? மனித பண்பு ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது .. எப்படி கட்டுப்படுத்துவது என்று கூட அறியாத உள்துறை அமைச்சகம் .. வெட்க கேடு என்று தான் சொல்லவேண்டும் ..வெளியில் வருவோரை தீர்க்க விசாரிக்காமல் கால்நடைகளைப்போல நடத்த நினைப்பது மனிதமாண்புக்கு அப்பாற்பட்டது சிந்தித்து செயல்படுபவர்களே மனிதர்கள் .. கால்நடைகளுக்கு விதிவிலக்கு

 • Muruga Vel - Mumbai,இந்தியா

  பொதுவா பக்கத்துக்கு வீட்டுக்காரனை மோட்டார் சைக்கிள் பின்னால உக்கார வெச்சு கூட்டிக்கிட்டு போறது இப்போ வழக்கம் … போலிஸ் கிட்ட அடிவாங்கறது பின்னாடி உக்கார்ந்திருக்கிறவன் தான் ….

 • chander - qatar,கத்தார்

  போலீஸ் காரர்களுக்கு கொரோனா வராதா என்ன அவர்கள் மூலமாக தான் பரவ வாய்ப்ப்பு உள்ளது ஒரு வேளை கையில் தடி இருப்பதனால் பயப்படும் என்று நினைத்துக்கொண்டார்களோ என்னவோ

 • chander - qatar,கத்தார்

  po

 • Nathan - Hyderabad,இந்தியா

  மூக்கு கவசம், தலைக்கவசம் இல்லாம போனா இப்படி தடிமரியாதை கிடைக்கும்னு தெரியாதா. தெரிந்து ஏரியா தாண்டி வந்தாரா?

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  இவர் சொல்வதை முழுவதும் ஒத்துக்கொள்கிறேன். உதைத்தால்தான் பயப்படுவார்கள்.

 • venkat Iyer - nagai,இந்தியா

  திண்டுக்கல் ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கூறிய விஷயங்களை நான் வரவேற்கின்றேன்.நான் ஊரடங்கை மதித்து வீட்டில் உள்ளேயே இருக்கின்றேன். எனக்கு மாத்திரைகள் நல்ல டவுனில் மட்டும் கிடைக்க கூடிய நிலையில் ,கிராமத்தில் ஓய்வில் இருக்கும் நிலையில் எனக்கு மருந்து கொஞ்சம் நாட்கள்தான் வரும் நிலையில் நான் வயது முதிர்ந்த நிலையில் உள்ளூர் மருந்தகம் வரவழைத்து தர மறுக்கின்றனர்.எனது நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட போது தாசில்தார் அனுமதி வாங்கி செல்ல வேண்டுமாம்.நான் எப்படி செல்வேன்.?.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   ஜல்தி அனுப்புவார்..

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   இந்தியாவில் இவரைப்போல பல ஆயிரம் மக்கள்.. இவருக்கு வெறும் மருந்து தான். பலருக்கு மருத்துவ சிகிச்சை தொடர்ச்சியாக நடந்தேற வேண்டும். வாரமிருமுறை டயாலிசிஸ் பண்ணலைன்னா சாகும் பரிதாப உயிர்கள். முடியலே..

  • வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்

   ரொம்ப பொலம்பினா ரத்த கொதிப்பு வந்து ஆஸ்பத்திரிக்கு போக நேரிடும் . அடக்கி வாசிக்கவும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement