dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம்

Share

வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில், 'டாஸ்மாக்' மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன.இதனால், மதுவுக்கு அடிமையானவர்கள், கவலைப்படுகின்றனர்; பெண்கள், மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர்.போதைக்கு அடிமையானோர், மது கிடைக்காததால் துாக்கமின்மை, கால், கை நடுக்கம், இதயத்துடிப்பு அதிகரிப்பு, அதிக வியர்வை, மனக்குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.மது கிடைக்காத ஏக்கத்தில், கேரளாவில் சிலர், தற்கொலை செய்த சம்பவங்களும் நடந்துள்ளன.நம் மாநிலத்தில், கள்ளச்சாராயம் தலை துாக்கத் துவங்கி விட்டது. டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து, மது பாட்டில்கள் திருட்டு சம்பவங்களும், ஆங்காங்கே நடக்கின்றன. குடி வெறி, பாடாய்படுத்துகிறது.கடை அடைக்கப்பட்ட, கடைசி நாளில் மட்டும், 210 கோடி ரூபாய்க்கு, மது பாட்டில்கள் விற்பனையாகி உள்ளன. பதுக்கலும், தாராளமாக அரங்கேறியது. தற்போது, கள்ளச் சந்தையில் விற்பனை நடக்கிறது.வசதியானோர், தேவைக்கு ஏற்ப, மது பாட்டில்கள் வாங்கி, வீட்டில் வைத்துள்ளனர். அவர்கள், மதுவுடன் தினமும், கொரோனா ஊரடங்கை கொண்டாடுகின்றனர்.கூலித் தொழிலாளிகள், போதைக்காக, வேறு வழிகளை நாடத் துவங்குவர். அது, அவர்களின் உயிரை பறிக்கலாம்.ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய போலீசார், கள்ளச்சாராயம், கள்ளச்சந்தையில் விற்பனை போன்றவற்றை தடுக்கும் பணியில் இறங்குவது, தற்போது சாத்தியமில்லை.மதுவுக்கு அடிமையானோர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அதிலிருந்து விடுதலையடைய வேண்டும். மது இல்லாத தமிழகம் மலர வேண்டும் என்பது தான், அனைவரின் விருப்பம். அது, தற்போது சாத்தியமா என்பது தான் கேள்வி

இனி நாம் என்ன செய்ய வேண்டும்?க.சுந்தர கணபதி அய்யர், கல்குறிச்சி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஊரடங்கு முடியும்போது, முடியட்டும். அதற்கு அடுத்து, நாம் என்ன செய்ய வேண்டும் என, திட்டமிடுவோம்.'மாதத் தவணை தள்ளிப் போடணும், வட்டி வசூலிக்கக் கூடாது, கல்விக் கட்டணங்களை தவிர்க்க வேண்டும், மானியங்கள் நிதியை முன்கூட்டியே விடுவிக்கணும்' என, அரசுக்கு ஆலோசனைகளை அள்ளி வழங்கியது போதும்.நாம் அனைவரும், இனி என்ன செய்யப் போகிறோம்...ஊரடங்கை கடைப்பிடிப்பதில், நமக்கெல்லாம் எத்தகைய பொறுப்புணர்வு இருக்கிறதோ... அதே போல, நாட்டின் இழப்பை ஈடுகட்டவும், மீட்டெடுக்கவும், நம் எல்லாருக்கும் பொறுப்பு இருக்கிறது.நீராதாரத்தை பாதுகாத்தல், விவசாயப் பொருட்களின் உற்பத்தி, வேலை வாய்ப்பு, சுகாதாரத்துறை போன்றவற்றில், அனைவருடைய முனைப்பும் தீவிரமடைய வேண்டும்.அரசு தான், அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற மெத்தனப் போக்கை கைவிட்டு, பொதுமக்கள் சமூகப் பொறுப்புணர்வோடு, அவரவர் துறையில், ஒத்துழைப்பை நல்கினால், பொருளாதார பாதிப்பில் இருந்து, விரைவில் மீளலாம்.இனி, எதற்கெடுத்தாலும் கூட்டம் சேர்த்து, தெருவில் இறங்கி போராட்டம் நடத்தக் கூடாது. நம் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பேணி காக்க வேண்டும்.கடையோ, ஏ.டி.எம்., மையமோ எங்கேயும், வரிசையை கடைப்பிடிக்க வேண்டும். நம் வீட்டை போல, வீதிகளின் சுகாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.நாட்டை மீட்க, அனைவரும் ஒத்துழைப்போம். இந்தியா, வெல்லும்!

வதந்திக்குமுடிவுகட்டுங்கள்!வி.ஸ்ரீதரன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா வைரசிற்கு மிகச் சிறந்த தடுப்பு மருந்து, சமூக விலகலும், தனிமைப்படுத்திக் கொள்ளலும் ஆகும்.இந்நிலையில், 'வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் வருகிற அனைத்து தகவல்களையும், அதன் உண்மைத் தன்மை தெரியாமல், மற்றவர்களுக்கு, 'பார்வேர்ட்' செய்வது, நோயை விட கொடுமை. சில நாட்களாக, ஏராளமான செய்திகள், 'வீடியோ'க்கள், சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில், பெரும்பாலானவை உண்மை அல்ல!பிணக் குவியல், சாலையில் சிங்கம் போன்றவை, திரைப்படங்களில் உள்ள காட்சிகள். அவற்றை, கொரோனா பாதிப்பு காரணமாக, வெளிநாட்டில், தற்போது நடந்தது போல, வதந்தி பரப்பி வருகின்றனர்.மக்கள் அனைவருக்கும், சமூக பொறுப்பு உண்டு. அதை உணர்ந்து, நம் மொபைல் போனுக்கு வரும் தகவல்களை எல்லாம், பிறருக்கு பார்வேர்ட் செய்து, வதந்தியை பரப்பாதீர்.இவ்விஷயத்தில், உங்கள் முட்டாள்தனத்தை, மற்றவருக்கு வெளிச்சமிட்டு காட்டாதீர். இந்த இக்கட்டான நேரத்தில், நல்ல புத்தகங்கள் தொடர்பான செய்தி, அரசின் அறிவிப்பு, ஓவியம் என, நல்ல விஷயங்களை பகிரலாம்.கொரோனா எனும் கொடிய நோயை விரட்ட, அனைவரும் ஒன்றிணைவோம்; அரசுக்கு, ஒத்துழைப்போம்!lllஇறைச்சிகடையைமூடுங்கள்!குபே.பூபேஷ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா நோய் பரவலை தடுக்க, அத்தியாவசிய கடைகள் தவிர, மற்ற அனைத்து துறைகளும் மூடப்பட்டது, வரவேற்கத்தக்கது.ஆனால், மீன் மற்றும் இறைச்சியை, அத்தியாவசிய பட்டியலில் சேர்த்தது, தவறு என, தெரிகிறது.ஏனெனில், மளிகை, காய்கறி கடைகளில் கூட, 90 சதவீதம் பேர், சமூக விலகலை கடைப்பிடிக்கின்றனர். ஆனால் மீன், இறைச்சி விற்கும் இடங்களில், 10 சதவீதம் பேர் கூட, சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை.இன்னும் சில நாட்கள், அசைவ பிரியர்களால், மீன், இறைச்சி உண்ணாமல் இருக்க முடியாதா?சபரிமலை, பழநி உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு, மாலை அணிந்தபோது, 48 நாட்கள் விரதம் இருப்போர் தானே, நாம்!மீன், இறைச்சிக்கு தடை விதித்தால், மீனவர்கள், கோழிக்கறி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவர் என்பது உண்மை தான். இந்த ஊரடங்கு நாட்களில், பல துறைகளை சார்ந்தோர் பாதிக்கப்பட்டுள்ளனரே...அதனால், ஊரடங்கு நிறைவு பெற, இன்னும், ஒன்பது நாட்களே உள்ளன. எனவே, அனைத்து மாவட்டங்களிலும், 14ம் தேதி வரை, மீன், இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • J. Gopalakrishnan - Chennai-80,இந்தியா

    மின்சார வாரியம் செய்யுமா? கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காக்க தமிழக அரசு இருபத்தியொரு நாள் லாக் டவுன் அறிவித்துள்ளார்கள். இன்னும் ஒரு வாரத்தில் அந்த காலகட்டம் முடியப்போகிறது. மறுபடியும் லாக் டவுன் அல்லது உரடங்க உத்தரவுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். எது எப்படி இருந்தாலும், ஒரு சராசரி மக்களின் கவலை மின்சார பயன்பாட்டு கட்டணம் அந்த கால கெடுவிற்குள் கட்ட வேண்டுமா? அதே போல் ரீடிங் எடுக்க வருபவர்கள் குறிப்பிட்ட தேதியில் வருவார்களா? அப்படி வரவில்லை என்றால் பல வீடுகளில் ஐநூறு யூனிட்டுக்கு மேல் சென்றால் சுமார் எழுநூத்தி பதினாறு ரூபாய் அதிகமாக கட்டவேண்டுமே என்ற கவலை. அதாவது ஐநூறு யூனிட்க்கு ரூபாய் ஆயிரத்து நூற்று முப்பது. அதுவே 510 யூனிட்டுக்கு ஆயிரத்து எண்ணுர்த்தி நாற்பத்தி ஆறு ரூபாய் கட்ட வேண்டியுள்ளது. லாக் டவுன் முடிந்தாலும் முடிந்தாலும் சராசரி நிலைக்கு வர குறைந்தது ஒரு வார காலமாகலாம். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு மின்சார வாரியம் சென்ற மாத கணக்கெடுப்பின் போது எவ்வளவு யூனிட்டுக்கு கட்டினார்களோ அதையே இந்த இரண்டு மாத காலத்திற்கான மின்சார பயண்பாட்டுக் கட்டணமாக கட்டினால் போதும். பிற்காலத்தில் அதிகமாக கட்டியிருந்தால் சரிசெய்யப்படும். அதேபோல் ரீடிங் எடுத்த தேதியிலிருந்து இருபது நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்தவேண்டும் என்ற காலக்கெடுவையும்அபராதம் இன்றி முப்பது நாட்களகளுக்குள் செலுத்தாலும் என்று கட்ட வேண்டிய காலக்கெடுவை மேலும் பத்து நாட்கள் அதிகரித்து உத்திரவு பிறப்பித்தால் நன்றாக இருக்கும். இது சம்பந்தமாக மின்சார வாரியம் மிக விரைவாக ஒரு முடிவெடுத்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மின்சார வாரியம் உடனடியாக செய்மா?

  • veeramani - karaikudi,இந்தியா

    சென்னை வாசகர் கூறியது போல இறைச்சி, மீன், கோழி , கருவாடு விற்பனையை ஏப்ரல் மதம் முழுவதும் தடை செய்தால் அங்கு கூட்டம் சேருவதை நிச்சயமாக தவிர்க்கலாம். அத்தியாவசிய மளிகை , பால் , தண்ணீர் போன்றவற்றிற்கு மட்டும் விற்பனை செய்ய அனுமதிக்கலாமே. சிலர் பாதிக்கப்படலாம். சினேவிலிருந்து நாம் பாடம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement