dinamalar telegram
Advertisement

பொதுத்தேர்வை ரத்து செய்யாதீர்!

Share

நா.ஆமினத்து ஜாக்ரினா, கீழக்கரை-, ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தாகுமா என்ற கேள்வி, பெற்றோர், ஆசிரியர் மனதில் எழுந்துள்ளது.'கொரோனா' வைரஸ் பரவல் காரணமாக, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யச் சொல்வது, ஏற்புடையது அல்ல.தமிழகத்தைப் பொறுத்தவரை, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் சீராக நடைபெற்று வருகின்றன. இந்த பொதுத்தேர்வுகள், மாணவர்களின் கற்றல் திறனை, எடை போடுவதற்காகவே நடத்தப்படுகின்றன.நடப்பு கல்வியாண்டில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால், பிளஸ் 2 வகுப்புக்கு முழுமையாகவும்; பிளஸ் 1 வகுப்புக்கு, இன்னும், ஒரு தேர்வு மட்டுமே எஞ்சிஉள்ளது.மேலும், 10ம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு தள்ளிப்போகும் சூழ்நிலையில், அதை ரத்து செய்ய எதிர்பார்ப்பது, மாணவர்களின் கற்றல் அடைவை தீர்மானிப்பதில், பின்னடைவை ஏற்படுத்திவிடும்.மேலும், ஒன்பதாம் வகுப்பு போல், 10ம் வகுப்பு மாணவர்களை, 'ஆல் பாஸ்' செய்தால், அவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்வதில், சிக்கல் உண்டாகும்.எனவே மாணவர்களின் நலன் கருதி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யாமல், மே மாதம் நடத்தி முடிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர், கல்வியாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஆட்சியாளர்கள்முயற்சிக்காதகாரியம்!

டி.வி.ஜெய்குமார், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சுனாமி, வெள்ளம், 'கொரோனா' வைரஸ் பரவல் போன்ற அபாயகரமான காலங்களில், சென்னை போன்ற பெரு நகரங்களில் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் படும் பாடு, சொல்லி மாளாது.தமிழகத்தின், மொத்த மக்கள் தொகை, ஏழு கோடி; இதில், சென்னையில் மட்டும், 2.5 கோடி பேர் உள்ளனர்.கடந்த, 1980ல், முதல்வராக இருந்த, எம்.ஜி.ஆர்., சட்டசபையில் பேசும் போது, 'சென்னையில், மக்கள் தொகை பெருகி வருகிறது; இது, எதிர்காலத்தில் மிகுந்த சிரமம் கொடுக்கும். எனவே, நிர்வாக வசதிக்காக, தலைநகரை, தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும், திருச்சிக்கு மாற்றி விடலாம்.'இதனால், மக்களின் போக்குவரத்து சிரமம் குறையும். கால விரயமும், பண விரயமும் தடுக்கப்படும். எனவே தலைநகரை, திருச்சிக்கு மாற்றுவது பற்றி பரிசீலிப்போம்' என, தொலைநோக்கு பார்வையில் பேசினார்.எதிர்க்கட்சி தலைவராக இருந்த கருணாநிதி, நிருபர்களின் சந்திப்பில், 'தமிழகத்தில், 'துக்ளக்' பாணியில் ஆட்சி நடக்கிறது' என, கிண்டல் செய்தார். அந்த தொலைநோக்குத் திட்டத்தை கைவிடும் வரை, தி.மு.க.,வினர் பல இடையூறுகளை ஏற்படுத்தினர்.தானும் நல்லது செய்யாமல், செய்பவரையும் தடுக்கும், 'நல்ல' மனம் படைத்த கருணாநிதியால், அந்த சிறப்பான திட்டம், செயல்படுத்த முடியவில்லை.அத்திட்டம் நிறைவேறி இருந்தால், சென்னையில், இவ்வளவு மக்கள் தொகை சேர்ந்திருக்காது.சென்னை மாநகரம், உண்மையிலேயே, பொதுமக்களுக்கு, மாநரகமாக இருந்து வருகிறது.தற்போது, கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்றவுடன், பிழைப்பு தேடி சென்னைக்கு வந்தோர், ஒரே நேரத்தில், சொந்த ஊருக்கு செல்ல முயன்றதால், ஏற்பட்ட பிரச்னைகளை பார்த்தோம்.இதே போல, தீபாவளி, பொங்கல் நேரங்களில், சென்னை கோயம்பேடில், கூட்டம் அலைமோதுகிறது. அப்போதெல்லாம், காவல் துறையினர், அரசு அதிகாரிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்; மக்களும், அவஸ்தைப்படுகின்றனர்.சென்னையில், மக்கள் தொகை நெரிசல் அதிகரிக்க யார் காரணம்? நிச்சயமாக, கருணாநிதியும், ஜெயலலிதாவும் தான்.அவர்கள், எம்.ஜி.ஆர்., அறிவித்த, தலைநகரம் மாற்றம் திட்டத்தை செயல்படுத்தியிருந்தால், சென்னை தப்பித்திருக்கும்; திருச்சி சுற்றுவட்டாரம், பெரும் வளர்ச்சி அடைந்திருக்கும்.இதற்கெல்லாம் ஒரே தீர்வு, எம்.ஜி.ஆர்., அறிவித்த திட்டத்தை செயல்படுத்துவது தான். இது ஒன்றும் முடியாத காரியமல்ல; ஆட்சியாளர்கள் முயற்சிக்காத காரியம்... அவ்வளவு தான்

lமது விற்பனை எதற்கு?
எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இப்பகுதியில், பிரபுராஜ் என்பவர், 'எடப்பாடி கவனத்திற்கு' என்ற தலைப்பில், மதுவை மறக்க முடியாமல், தற்கொலைக்கு முயற்சிப்போரின் நலன் கருதி, 'எலைட்' மதுபானக் கடைகளை திறக்க வேண்டும் என, கடிதம் எழுதியிருந்தார்.இவரைப் போலவே, கேரளா முதல்வர், பினராயி விஜயனும், 'குடி'காரர்களின் உயிரை காப்பாற்ற, ஆலோசனை செய்து முடிவுக்கு வந்து விட்டார்.'குடி நாட்டையும், வீட்டையும் கெடுக்கும்; உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்' என்பது, அனைவரும் அறிந்த உண்மை.'குடி'காரர்களால், அவரின் குடும்பத்திற்கோ, நாட்டிற்கோ எவ்விதத்திலும் பயனில்லை. அவர்களால், அந்த குடும்பத்தின் நிம்மதி தான் கெட்டுப் போகும்.எனவே, அவர்களை காப்பாற்ற முயற்சிப்பதை கைவிட்டு, சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்தி, மக்களை எப்படி காப்பாற்றுவது என்பதை மட்டுமே, அரசு யோசிக்க வேண்டும்.மது நாட்டிற்கு, வீட்டிற்கு கேடு... அப்புறம் எதற்கு, மது விற்பனை?

கறை படிந்த கரங்கள்!

எஸ்.ஏ.சீனிவாச சர்மா, ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இப்பகுதியில், வாசகர் ஒருவர், 'கருணாநிதி மட்டும் தான் குற்றவாளியா?' என்ற தலைப்பில், கடிதம் எழுதியிருந்தார்.அவர், முன்னாள் முதல்வர், கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டார். அதோடு சேர்ந்து, ஊழல் பட்டியலையும் சேர்த்திருக்கலாம்.கருணாநிதிக்கு முன், தமிழக முதல்வராக, அண்ணாதுரை, சிறிது காலமே ஆட்சி செய்தார். அதற்கு முன், முதல்வராக இருந்த, காமராஜரோடு, கருணாநிதியை ஒப்பிட்டால் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.தி.மு.க., என்ற கட்சியை, குடும்ப அரசியல் கட்சியாக மாற்றிய பெருமை, கருணாநிதியை சாரும். ஊழல் துவங்கியது, அவரின் ஆட்சியில் தானே... இதை, மறுக்க முடியுமா?கறை படிந்த கைகளுக்கு சொந்தக்காரர் கருணாநிதி. அவரின், மோசமான சாதனைகளையும், மறக்க முடியாது.lll

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • M VASAN - Sivakasi,இந்தியா

    Er.M.Vasan,B.E.,M.B.A., 1/198/C/7, Guru Colony, Opp. New Housing Board, Sivakasi-626124          Mob: 9940075962 _____________________________________________________________ Vanakkam Dinamalar Ithu Ungal Edam 7 -4-20 lil oru vasagar pathaam class pouthu thearvai nirutha veeandam endrum , athai thavira vearu vzhiyea illai antha manavarkalin thiran arithal pattri endurm kurai pattu kondar. Nan tharum keal kanda yosanayai intha varudam mattum illai ella varudamum ella vaguppukkum seyal paduthinal, entha nulaivuth thearvum thevai ellai. paper chase pondra thavarukalum nadakkathu: Yosanai: Ondur muthalo allthu Aram class muthalo, oru manavanin anaithu thearvu mudivukalum athantha pallikalil erukkum. Palli maari erunthalum antha mathippenkalai munthaya pallikalilrunthum peralam. Antha mathipenkalin ottu motha sarasariye antha manavaani grade mattrum subjectkalin mathippenkaliyum peralam. Athan adippadayilea +1 admission tharalam. Ethe polavea kalloori varai ethanai seyalpaduthalam. Ore oru thearvayum, ore oru entrance test mdivai mattum parrthu adutha nilaok kalvi thodaravo, velai vaippo valanginall pala kutrangalyum thadukkalam. mealum oru manithanin thiramyayum sariyaaga kanankkittathu polavum erkkum. Nandriydan,M.Vasan.Sivakasi. 

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement