Advertisement

பெரியவங்க சொல்றதை கேட்டா நல்லது!

கடலுார் கலெக்டர் அன்புச்செல்வன், 'கொரோனா' பாதிப்பு குறித்து, நிருபர்களிடம் தகவல் தெரித்தார்.அப்போது, அவர் கூறுகையில், 'வரும் நாட்கள், மிகவும் சோதனையான காலக் கட்டமாகும். இந்த காலக் கட்டத்தில், பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. ஊரடங்கு உத்தரவை மீறி, இளைஞர்கள் சிலர், இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிகின்றனர். இவர்கள் மீது, கொரோனா தொற்று பரவ காரணமானோர் என, வழக்குப் பதிவு செய்யப்படும்' என்றார்.

முகக்கவசம் அணிந்த, மூத்த நிருபர் ஒருவர், 'இந்த காலத்து பசங்களுக்கு, விளையாட்டு வினையாகும் என, அவர்களுக்கு தெரியலை... அரசு எவ்வளவு சொன்னாலும், வீட்டுல இருக்கற பெற்றோர் தான், அவர்களுக்கு நிலைமைய புரிய வைக்கணும்...' என்றார்.அருகிலிருந்த சக நிருபர், 'வீட்ல இருக்கறவங்க சொன்னா, இவங்க எங்கே கேக்குறாங்க... அப்படி இருந்தா, இப்போ வெளியில சுத்தறதையும் நிறுத்தலாம்... பஸ் டே கொண்டாட்டம், இரவு நேர விபத்து, பைக் ரேஸ்ன்னு எல்லாத்தையும் கொறைக்கலாமே... நடக்க மாட்டேங்குதே...' என, வேதனை தெரிவித்தார்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    மதியம் இரண்டு மணிக்குமேல் இருசக்கர வாகனங்கள் தெருவில் செல்ல தமிழ்நாடு முழுவதும் தடை விதிக்கவேண்டும். மீறினால் ஓட்டிவந்தவரை 4 மணிநேரம் ஒரு கல்யாண சத்திரத்தில் அமரவைத்து பின் எச்சரித்து அனுப்பவேண்டும்... இளைஞர்கள் எனில் அவர்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement