Advertisement

நமக்கு நாமே!

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லாரை ஆகிய, மூன்று மீனவ கிராம பஞ்சாயத்தார்களும் சேர்ந்து, 'கொரோனா' பரவலைத் தடுக்க, கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளனர்.

'கிராம மக்கள் யாரும், நாகை கடைத்தெரு மற்றும் பொது இடங்களுக்கு செல்லக் கூடாது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்கள் சென்று திரும்பியோர், வீட்டில் இருந்து வெளியே வரக் கூடாது. மீறி வெளியில் நடமாடினால், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அவர்கள் தொழில் செய்யவும் தடை விதிக்கப்படும்' என, ஒலிபெருக்கி மூலம், அக்கிராமங்களில் அறிவிப்பு செய்து வருகின்றனர்.

இதைக் கேட்ட, முதியவர் ஒருவர், 'பரவாயில்லையே... இப்படி, நாமே கட்டுப்பாடா இருந்தா, எந்த நோயும் பரவாது...' என்றார். அவரின் மனைவி, 'கருத்து சொன்னது போதும், நீங்க உள்ளே வாங்க...' என, சத்தமிட்டார். அவரும், அமைதியாக, உள்ளே சென்றார்.*

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement