Advertisement

ஒரு கல்லில் ரெண்டு மாங்காய்

வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பகுதியில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்., இலக்குவன் தலைமையில் போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.பைக்கில் சுற்றித்திரிந்த இரு வாலிபர்களை பிடித்து, விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கு வந்த, மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள், 'அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது. யாராவது, ரத்த தானம் செய்ய முன்வந்தால், அனுப்பி வையுங்கள்' என்றனர்.உடனே, பிடிபட்ட, இரு வாலிபர்களிடம், 'ரத்த தானம் செய்ய விருப்பம் உள்ளதா' என, இன்ஸ்., இலக்குவன் கேட்டார். அவர்களும், ரத்த தானம் செய்ய முன்வந்தனர்.

பின், தனக்கு வழங்கப்பட்ட தர்பூசணி, வெஜிடபுள் பிரியாணி போன்றவற்றை, இருவருக்கும் இன்ஸ்., வழங்கினார்.தொடர்ந்து, அவர்களுக்கான தண்டனையை ரத்து செய்து, அவர்களை, ரத்த தானம் செய்ய அனுப்பி வைத்தார். இதை பார்த்த நிருபர் ஒருவர், 'அடங்காத பிள்ளைகளை, இது போன்ற சேவைகளை செய்ய சொல்லி, ஒரு கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கலாம்' என்றார். அருகிலிந்த சக நிருபர், அதை ஆமோதித்தார்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கெட்டிக்கார இன்ஸ்பெக்டர் தறிகெட்டு ஓடும் காட்டாற்றை அடக்கி மதகுகள் வழி பாயவிடும் தந்திரம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement