Advertisement

உண்மைகளை மறைக்கக் கூடாது!

Share

உண்மைகளை மறைக்கக் கூடாது!பா.விஜய், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இப்பகுதியில், 'கடந்த காலத் தவறுகள்' என்ற தலைப்பில், வாசகர் ஒருவர், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு, நீண்ட காலம் இந்தியாவை ஆட்சி புரிந்த காங்கிரசே காரணம் என, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி கூறியதை, சுட்டிக்காட்டியுள்ளார். இதை, முழுமையாக ஏற்பதற்கில்லை!கன்ஷிராமின் தோளில் ஏறி, அரியணையைப் பிடித்தவர் தான், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர், மாயாவதி. அவரது ஆட்சிக்காலத்தில், தன் கட்சிச் சின்னமான யானையை, மாநிலம் முழுதும் சிலை வடித்ததைத் தவிர, வேறெதுவும் உருப்படியாகச் செய்யவில்லை. அதனால் தான், ஆட்சி இழந்தார். எதிர்க்கட்சிகளோடு கூட்டணி அமைத்தும் கூட, மக்களிடம் எடுபடாமல், தோல்வியை தழுவினார்.'காங்கிரசின், கடந்த கால தவறுகளை மறக்கக் கூடாது' என்போர், அக்கட்சியின் சாதனைகளையும் மறைக்கக் கூடாது என்பதையும், புரிந்துக் கொள்ள வேண்டும்.காங்கிரஸ், ஒரு தேசியக் கட்சி. இந்நாட்டின் விடுதலைக்காக உருவாகி, எண்ணற்றோரின் உயிர்களை தியாகம் செய்த கட்சி. பலர், தங்கள் சொத்துக்களை இழந்தார்கள்; குடும்பத்தை பிரிந்து, கொடும் சிறையில் வேதனைப்பட்டனர்.நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு, காங்கிரஸ் தான் காரணம் என்பதை, புறக்கணிக்கவே முடியாது. வெள்ளையர் சென்ற பின், இந்த தேசத்தை ஒருங்கிணைந்து, வடிவமைத்து, முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றது, நேருவும், வல்லப்பாய் படேலும், இன்ன பிற காங்., தலைவர்களும் என்பதை மறந்துவிடாதீர்!சுதந்திரம் கிடைத்த உடன், இந்த தேசத்தில் பாலாறும், தேனாறும் ஓடவில்லை. பசியும், பட்டினியும் ஒரு பக்கம்; உணவு உற்பத்தியை, உடனடியாக பெருக்க வேண்டிய நிர்பந்தம் மறுபக்கம். அரசியல், நிர்வாக சிக்கல்கள், இன்னொரு புறம் என, இக்கட்டான சூழலில் சிக்கியிருந்த இந்தியாவை, கடும் போராட்டங்களை சந்தித்து, மீட்டெடுத்தது, காங்கிரஸ்!அணைகள் கட்டப்பட்டன; ஆறுகள் வெட்டப்பட்டன; சாலைகள் போடப்பட்டன; சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டன; தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டன... இவை அனைத்தும், காங்கிரசின் சாதனை அல்லவா!நேருவின், 'பஞ்ச சீலம்' கொள்கையால் தானே, உலக நாடுகளிடையே, இந்தியாவிற்கு ஒரு உன்னத இடம் கிடைத்தது. அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும், இன்று, கொரோனா நோய்க்கான, 'ஹைட்ராக்சிகுளோரோக்வின்' மாத்திரைக்காக, நம்மிடம் கையேந்தி நிற்பதற்கு காரணம், காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் இந்திரா தானே!'எதிர்காலம், இனி, கணினியின் கையில் தான் உள்ளது' என, தொலைநோக்கு சிந்தனையுடன் திட்டமிட்டு, அதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர், ராஜிவ் அல்லவா!ரயில்வே, பி.எஸ்.என்.எல்., என, பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியது, காங்கிரஸ்; அதை, விற்பனை செய்து வருகிறது, பா.ஜ., அரசு.இந்தியாவின் வரலாறு தெரியாமல், காங்கிரசின் தியாகங்களை புரிந்துக் கொள்ளாமல், கண்டதற்கும், அக்கட்சியை குறை கூறுவதை, நிறுத்திக் கொள்வது நல்லது.


சர்வரோகநிவாரணி அல்ல!


பி.என்.கபாலி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசு ஊழியர்களின் மெத்தன போக்குடன் ஒப்பிட்டு, தனியார் துறைகளின் சிறப்பை, இப்பகுதியில், வாசகர் ஒருவர் எழுதியிருந்தார்.கடந்த, 20 ஆண்டுகளில், நம்நாடு அடைந்த முன்னேற்றத்தில், தனியார் துறைகளின் பங்கு தான், மிக அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. அதிலும், நம் ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கமும், சுயலாபத்திற்காக ஏற்படுத்தும், பல தடைகளையும் மீறி, தனியார் துறை தங்களையும் வளர்த்து, நாட்டின் வளர்ச்சிக்கும் துணை புரிந்துள்ளன. எல்லாம் சரி... ஆனால், 'தனியார் மயம்' என்பது சர்வரோக நிவாரணி அல்ல. அனைத்தையும், தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால், சிறப்பான சேவை கிடைத்துவிடும் என, சொல்ல முடியாது. விமான போக்குவரத்து, மொபைல் போன் சேவை ஆகியவற்றை, தனியார் வசம் ஒப்படைத்ததால், நாம் கண்ட பலன் என்ன? பி.எஸ்.என்.எல்., மற்றும் 'ஏர் இந்தியா' இவ்விரண்டு அரசு துறைகளும், அழிந்தே போயின.
சரி, அத்துறைக்குள் நுழைந்த, தனியார் நிறுவனங்களாவது வளர்ந்தனவா என்றால் இல்லை. தங்களுக்குள், ஆரோக்கியமற்ற போட்டியிட்டு, அவையும் அழிவுப் பாதையில் தான் பயணிக்கின்றன. அவற்றால் ஊழலும், மோசடிகளும், நாம் கண்ட பலன்.இருபது ஆண்டுகளுக்கு முன், தகவல் தொடர்பில் ஏற்பட்ட புரட்சிகர வளர்ச்சியை அறுவடை செய்ய, நமக்கு ஏராளமான பொறியாளர்கள் தேவைப்பட்டனர். அவர்களை உருவாக்க, நிறைய பொறியியல் கல்லுாரிகளும் தேவைப்பட்டன.நம் ஆட்சியாளர்கள், என்ன செய்தனர்... 'பொறியியல் கல்வியை, தனியார் மாயமாக்குகிறோம்' என்று, அக்கல்லுாரிகளை, அரசியல்வாதிகள், தங்களுக்குள் பங்கு போட்டு கொண்டனர். இன்று இருக்கும், அத்தனை பொறியியல் கல்லுாரிகளும், அரசியல்வாதிகளின் கையில் தான் இருக்கின்றன.
ஒன்றிலாவது, தரமான கல்வி அளிக்கப் படுகிறதா என்றால், 'இல்லை' என்பதே பதில். பெரும் நிலப்பரப்பை உடைய அரசுக் கல்லுாரிகளையே மேம்படுத்தி, பொறியியல் துறைகளை ஆரம்பித்திருக்கலாம். ஏன் செய்யவில்லை? அப்படி செய்தால், தாங்கள் சம்பாதிக்க முடியாதே என்பதற்காகவே, ஆட்சியாளர்கள், கல்வியை தனியார்மயமாக்கினர். மதுரையில், டி.வி.எஸ்., நிறுவனம் நடத்திய, தனியார் பேருந்து சேவை பற்றி, வாசகர் கூறியிருந்தார். இன்றைய நிலையில், பேருந்து சேவையை, தனியார் வசம் ஒப்படைப்பது என, முடிவு செய்தால், அது அந்த நிறுவனத்திற்கு போகுமா அல்லது ஆட்சியாளரின் பினாமி கைக்கு போகுமா?நிற்க. ஏற்கனவே, தனியார் வசம் உள்ள, ஆம்னி பேருந்து சேவையில், என்ன வாழ்கிறது? அவர்கள் அடிக்கும் கட்டணக் கொள்ளை, நாம் அறியாததா? சென்னையில் இயங்கும், ஆட்டோ சேவை, தனியார் வசம் தானே உள்ளது. சாதாரண, 'மீட்டர்' பொருத்தி, ஆட்டோ ஓட்ட வைக்க, அரசுக்கு திராணியில்லை.தனியார் துறை, பொதுத் துறை இரண்டுமே வேண்டும். எது, எங்கு, எந்த அளவிற்கு என்பது தான் முக்கியம். எதுவாயினும், அதை நடத்துவோர், யோக்கியனாக இருக்க வேண்டும்; வாய்ப்பு இருக்கிறதா?இது என்னங்க நியாயம்?என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின், 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், யாருக்குப் போய் சேர வேண்டும் என, உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுதாரர்களான, அவரின் அண்ணன் மகள் மற்றும் மகன் ஆகியோருக்கு, சொத்தில் உரிமை உண்டு என, நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர். சட்டத்தின் பார்வையில், இந்த தீர்ப்பு சரியானதாக இருக்கலாம்; ஆனால் தர்மத்தின் பார்வையில், சரியானதா?ஜெயலலிதா, நடித்து சம்பாதித்த சொத்துக்கள், அவை அல்ல; அரசியலில் இறங்கிய பின், குவிந்தவை என்பது, அனைவருக்கும் தெரியும். அரசியலில் ஈடுபடுவோருக்கு, நேர்மையான வழியில், கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கிடையாது. எனவே அது, மக்களின் சொத்துக்களாகத் தான் பார்க்கப்படும்.
தேர்தல் பிரசாரத்தில், ஜெயலலிதாவே, 'மக்களால், நான்; மக்களுக்காக, நான்' என, உறுதிமொழி வழங்கியிருக்கிறார். எனவே, அவர் சேர்த்த சொத்துக்களில், தமிழக மக்களுக்கும் உரிமை இருக்கிறது எனக் கூறலாம்.ஜெயலலிதா மீது ஊழல் வழக்குகள் இருந்ததும், நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டதும், அனைவரும் அறிந்த உண்மை.ஜெ., இன்று உயிரோடு இருந்தால், சசிகலாவுடன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரச் சிறையில் அடைக்கப்பட்டு, சிறைப்பறவையாக வாழ்ந்திருப்பார்.ஜெயலலிதாவின் பாவப்பட்ட சொத்துக்களை அனுபவிக்கும் உரிமை உள்ளவர்கள், அவர் அனுபவிக்க வேண்டிய, சிறைத் தண்டனையை ஏற்க தயாராக இருக்க வேண்டும் அல்லவா?
சொத்தில் பங்கு உண்டு; பாவத்தில் பங்கு இல்லையா? கடன் மோசடி செய்தால், சொத்தை பறிமுதல் செய்யலாம்; ஊழல் செய்து, குவித்த சொத்தை பறிமுதல் செய்யக் கூடாதா?


இரண்டு வரிபடித்தால் போதும்!


ஆ.தா.ஈஸ்வரமூர்த்தி, ஆற்காடு, ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசு, நிதி நெருக்கடியை சமாளிக்க, செலவினங்களை குறைத்து கொள்ள போவதாக கூறியுள்ளது. இது குறித்து, வாசகர் ஒருவர், 'ஒன்பது ஆண்டுகள் பொற்கால ஆட்சி நடத்திய, முன்னாள் முதல்வர், காமராஜரிடம், இன்றைய அரசியல்வாதிகள், பாடம் படிக்கணும்' என, கடிதம் எழுதியிருந்தார்.அன்று, காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில், ஜாதி பெயரோடு, அமைச்சர்கள் இருந்தனர். இன்று, ஜாதிக்கு ஒருவர் அமைச்சராக இருந்தாலும், தன் பெயரோடு, ஊர், தொழில் மற்றும் படித்த பட்டப் பெயரைச் சேர்த்துக் கொள்கின்றனரே தவிர, ஜாதி பெயரை சேர்த்துக் கொள்ளவில்லை. அரசு இலவச திட்டத்திற்கு, பிள்ளையார் சுழி போட்டவரே, காமராஜர் தான். ஏழை பிள்ளைகளுக்கு, மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார். அதை, எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டமாக விரிவுப்படுத்தினார். அன்று, பள்ளிகூடத்தில், ஒரு வேளை போட்ட உணவு, இன்று, மூன்று வேளையும், பொது மக்களுக்கு, 'அம்மா' உணவகத்தில் கொடுக்கின்றனர்.முதியோர், விதவை பெண்களுக்கு, மாதம்தோறும், 20 ரூபாய் வழங்கும் திட்டத்தை, காமராஜர் தான் ஏற்படுத்தினார். இது இப்போது, 200, 500 என வளர்ந்து, 1,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. அந்த காலத்தில், சிறிய அளவில் வளர்ந்த இலவச திட்டங்கள், இப்போது மிக்சி, கிரைண்டர், டிவி, மடிக்கணிணி, சைக்கிள் என, பெரிய அளவில் வளர்ந்து விட்டது.இது, அன்றாட வாழ்க்கைக்கு பயன்படும் பொருட்களை, வாங்க முடியாத நிலையிலுள்ள மக்களுக்கு, தேவையான திட்டங்கள் தான்.திராவிட கட்சிகள், ஆட்சிக்கு வந்த பின் தான் தொழிற்நுட்ப கல்லுாரிகள், மருத்துவ கல்லுாரிகள் எல்லாம் ஏற்பட்டன. இன்று, கல்வியில் முன்மாதிரி மாநிலமாக, தமிழகம் உள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகம், பல துறைகளில் முன்னேறி உள்ளது.தேனை எடுப்பவர், அதன் தரத்தை ருசி பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அதனால், ஒட்டு மொத்தமாக, திராவிடக் கட்சிகளை குறை சொல்லக் கூடாது.இப்போதுள்ள ஆட்சியாளர்கள், காமராஜரின், ஒன்பது ஆண்டு கால ஆட்சியை, பாடமாக படிக்க தேவையில்லை. அதை விட, 2,000 ஆண்டுகளுக்கு முன், திருவள்ளுவர் கூறிய, 'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு' என்ற, இரு வரிகளை படித்து, புரிந்துகொண்டால் போதும். சட்டசபையில், ஆண்டு தோறும், கடனில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம். அதிக வருவாயை, கஜானாவில் சேர்க்கலாம்.


இப்படியேபோகட்டும்!

என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா நோய் தொற்று பரவல், சென்னை உள்ளிட்ட பல இடங்களில், இன்னும் கட்டுக்குள் வராததால், ஊரடங்கில், பெரிய அளவில் தளர்வு தேவையில்லை.எக்காரணத்தினாலும், பஸ், ரயில், விமான போக்குவரத்துக்கு, அனுமதி அளிக்கக் கூடாது. பயணங்கள் வழியாகத் தான், கொரோனா வந்தது; பரவியது!கோவில்களைத் திறந்து, தினமும், 200 பக்தர்கள் மட்டும், சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும். திருவிழா, பிரதோஷம், பவுர்ணமி பூஜை போன்றவற்றிற்கு, தொடர்ந்து தடை நீடிக்கலாம்.திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு, தற்போதுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தவே வேண்டாம்.ஆடம்பர திருமணம் நடக்காமல் இருப்பதால், உணவு வீணாகவில்லை. திருமண செலவு குறைந்ததால், பெண் வீட்டார் மகிழ்ச்சியாக உள்ளனர். நமக்கும், அங்கு சென்று வரும் அலைச்சலும்,
பணமும் மிச்சம்.ஊரடங்கு அமலில் இருப்பதால், குடும்பச் செலவு கணிசமாக குறைந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை வந்தால், தியேட்டர், மால், ஷாப்பிங், ஓட்டல் என, சுற்றி, பணத்தை விரயமாக்காமல், வீட்டிலேயே, பிடித்ததை சமைத்து சாப்பிடுகிறோம்.மாதம் ஒருநாள், ஏதாவது காரணம் கூறி, மருத்துவமனைக்கு சென்று, 'தண்டம்' அழுவதும் குறைந்துள்ளது. நடுத்தர வர்க்கத்தினருக்கு, சேமிப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.ஆக... இந்த ஊரடங்கால், நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட, சில மாற்றங்கள் அப்படியே தொடர வேண்டும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Kannan T S - chennai,இந்தியா

    ஓ காடுமேன் யோகியானாய் வாழ வழி சொல். அயோக்கியன் என்கிறாய் . ஆம் ஆம் நீ தான் யோக்கியமாய் வாழ வழி சொல் வறுமை i இருந்தும் எளிமை என்று வாழ்கிறான் .சுவை சாப்பாடு இல்லாத சுத்த சைவம் என சுருங்கிட இருப்பது எதனை சங்கடம். பெண்ணை தெய்வம் என்கிறான்.l ஊர் சற்றும் நமக்கு கட்டுப்பாடா . நாம் சுக வாழ்வு வாழ்வது எப்படி சொல்லாமல் சொல். கோதமன் நாயகனே. குடி கொடுக்குmaa சுகம் சொல் குட்மேன் . இப்படி சொல்லலாம் . இந்து மதத்தை விட்டு நீ போனாலும் inthu மதத்தின் மீதே உன் நாட்டம் இருக்கும். ஏனென்றால் மத கட்டுப்பாடு இல்லாமல் வளர்ந்த வான் நீ. கோபுரம் பார்த்தாலே போதும் . அசிங்க மெல்லாம் மனதை விட்டு போகும். உன் கடமை மட்டுமே நீ செய்ய வேண்டும். உன்னை உணர உன் குடும்பத்திற்கு உன் மக்களுக்கு உன் உடன் சகோதர்களுக்கு வீடு கல்வி வாழ்க்கை தரம் மேம்பட மேம்பட விட்டு வசதி வாரியத்தை நம்பாதே. அரசாங்கம் கொடுக்கும் சில்லறை மானியம் சீர்திருத்தம் செய்யாது. உன்னை இயலாதவன் என்றே சொல்ல பயன்படுத்தும். உன்னை உயர்த்த உன் முயற்சி தேவை. அவர்கள் அவர்களுக்குள்ளே ஆயிரம் கட்டுப்பாடுகள். வறுமை வறுத்தெடுத்தாலும் இயற்கை இயைந்த ஓர் வாழ்வு. நீ காட்மேன் . பெயருக்கு ஏற்ற அவரவர் சமுதாயத்திற்கு பனி செய்து இந்திய நாட்டை வளப்படுத்துவோம்.

  • Kannan T S - chennai,இந்தியா

    O godman Yogyanaay vaazha vazha sol . ayogyan engiraay . aam aam ni thaan yogyamaay vazha vazhi sol Varumai irunthum elimai enru vaazhgiraaan . Suvai saappadu illaatha suththa saivam ena surungdu nammai maamisamvirumbi unna thduppathu pol theriyum . eppadi vaazhgiraan Pennai theyvam engiraan , . theyvam enraal manaivi mattuma matra pengal vidavaiyar aatharavatror yaar kaapaatruvathu. Avar kudumpathai azhithavathu naam suga vaazhvu vaazhvath eppadi. Sollaamal sol godman naayakane. Adimaiyaay irunthu arumaiyay kwattar kudithu araivtta paathaiyil thallaadi thaiyal naddai pottu maiya pulliyil surundu kidaakum sugam solla vaa vaa godman thalaiva Arai nirvaanam mugam udal maarfing sethu pennin urimai enru pinjugalin vaazhvai suraiyaaduthalil sugmam enna solla vaa vaa Onru theinthu kol. Unakku munnaale duraigal kottum suttm pottu irattiyum inthukkal maaravillai Sulthaangal suraiyadi kathi munaiyil mirattiyum inthu matham elimaiyaay ippadithn irunthathu. Irukkirathu. Unnaaal unnaaal …… konjam yosithu paar Jathiyai vaithu thalaivargal vaazhgiraargale thavira jaathi makkal kudisai maatru vaariyam nambithaan irukkiraargal.

  • Darmavan - Chennai,இந்தியா

    ஊழலின் ஆரம்பம் ஊற்றுக்கண் கட்டுமரம். ஜெயா இல்லை.எந்த நடவடிக்கையும் கட்டுமரத்தின் மீது முதலில் எடுக்க வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement