dinamalar telegram
Advertisement

அவசரப்படாதீங்க!

Share

அவசரப்படாதீங்க!சென்னை திருவொற்றியூரில், களப்பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, சமீபத்தில் நடைபெற்றது. இதில், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பங்கேற்றார். அதன்பின், செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது, 'ரேஷன் கடைகள் மூலம், மக்களுக்கு முக கவசம் வழங்கும் திட்டம் இன்னும் துவக்கப்படவில்லை. எப்போது துவங்கும்?' என, கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அமைச்சர், 'முக கவசம் விலை மற்றும் தரம் குறித்து, மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது. விரைவில் வழங்கப்படும்' என, பதிலளித்தார்.இதைக் கேட்ட, இளம் நிருபர் ஒருவர், 'நாள்தோறும், தொற்றுநோய் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது... இதுவரை, ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும், எவ்வளவு பேருக்கு பாதிப்பு வந்தால், முக கவசம் கொடுப்பாங்க...' என, கோபப்பட்டார்.அருகிலிருந்தவர், 'அவசரப்படாதீங்க... தமிழகத்துல எல்லாருக்கும் கொரோனா வந்த பின், முக கவசம் கொடுப்பாங்க...' என, கிண்டல் செய்யவும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்

இதுக்கும் தமிழக அரசு தான் காரணம்!விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த, 71 வயது, டாக்டர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.முன்னதாக அவர், 'எனக்கு, முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. நான், விரைவில் இறந்துவிடுவேன்' என, 'ஆடியோ' வெளியிட்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து, சிகிச்சை குழுவின் மூத்த டாக்டர் நடராஜன் கூறுகையில், 'அவர், கூடுதல் வசதி வேண்டும் என்பதற்காக, தனியார் மருத்துவமனைக்கு சென்று, நான்கு நாட்கள் கழித்து, அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு, வைரஸ் தடுப்பு மருந்தான, 'ரெம்டெசிவிர், டோசிலிசுமாப்' போன்ற விலையுயர்ந்த மருந்துகள் கொடுத்தோம். சிகிச்சைக்கு, அவர் ஒத்துழைப்பு வழங்கவே இல்லை. சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். நீரிழிவு நோய், முதுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அவரை இழக்க நேரிட்டது' என்றார்.அங்கிருந்த நிருபர் ஒருவர், 'அது கிடக்கட்டும், அந்த டாக்டர் இறந்தது குறித்து, ஸ்டாலின், 'தமிழக அரசு சரியில்லை'ன்னு, அறிக்கை வெளியிட்டாரா, இல்லையா...' எனக் கேட்டதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

'ஹிந்து எனும் கடலில்வீசப்படும் கல்!'திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள, காமாட்சிபுரி ஆதினம், சிவலிங்கேஸ்வர சுவாமிகள், நிருபர்களை சந்தித்தார்அப்போது, அவர் கூறுகையில், 'கருப்பர் கூட்டம் என்ற கும்பல், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியது. சுந்தரவள்ளி என்ற பெண், திருஞானசம்பந்தர் அருளிய, தேவாரத்தை கேவலப்படுத்தி உள்ளார். சமீபகாலமாக, இதுபோன்று ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதை கண்டித்து, ஆக., 9ல், தமிழகம் முழுதும், வேல் பூஜை நடைபெற உள்ளது. இதற்காக, 1,000 வேல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியுடன், வீடுகளின் முன், வேல் பூஜை நடைபெறும். அனைத்து ஆதினங்கள், மடாதிபதிகள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது' என்றார்.நிருபர் ஒருவர், 'பிள்ளையார் சிலையை உடைக்க ஆரம்பித்த பின், பிள்ளையார் சதுார்த்தி பிரபலமானது... கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தியதால், வேல் பூஜை நடக்கத் துவங்கியுள்ளது. நாத்திக கும்பல், ஹிந்து எனும் கடலில், கல் எறிகிறது; பதிலுக்கு, சுனாமியாய் ஆத்திகம் ஆர்ப்பரிக்கிறது...' என்றார். அருகிலிருந்தவர், அவரது கருத்தை ஆமோதித்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (3)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    முக கவசம் விலை மற்றும் தரம் குறித்து, மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது. விரைவில் வழங்கப்படும்'

  • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

    நாத்திக கும்பல் என்று நாத்திகத்தை அசிங்க படுத்தாதீங்க , அவர்கள் இந்து எதிர்ப்பாளர்கள், நாத்திகம் என்றால் எந்த கடவுளும் இல்லை என்று கூறுவதுதான் , இவர்கள் எல்லாம் நோன்பு காஞ்சி குடித்து , கிறிஸ்துமஸ் கேக்க வெட்டி விட்டு இந்துக்கள் பற்றி இகழ்வதற்கு பெயர் நாத்திகமா , யோசிக்கவே தெரியாதா , அசிங்கமா இல்லை ?

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    யாராவது ஆழ்வார்கள், வைணவப் பெரியவர்களின் வழிபடு பாடல்களை விமர்சித்து பிரபலப் படுத்துவார்கள் எல்லா மதங்களின் நூல்களையும் ஆய்ந்து படித்து, இப்படி விமர்சித்துப் பார்க்கட்டுமே, நடப்பதையும் தெரிந்துகொள்வோம்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement