LOGIN
dinamalar telegram
Advertisement

கொரோனா கவலையின்றி ‛சுதந்திரமாக' வாழலாம் வாருங்கள்

Share
இப்போது வெளியான இரண்டு சந்தோஷமான விஷயங்களை முதலில் பார்த்துவிடுவோம் நம்நாட்டில் கொரோனாவிற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோவாக்சின் மருந்து பரிசோதனை அடிப்படையில் நல்ல பலன் தந்துள்ளது.ரஷ்யா உள்ளீட்ட நாடுகளின் கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு வந்த வேகத்தில் எதிர்ப்பும் கிளம்பியது ஆனால் நமது கோவாக்சினுக்கு படிப்படியாக ஆதரவு அதிகரித்துதான் வருகிறது அது இன்றைய செய்தியில் இன்னும் உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதித்தவர்களை ஆம்புலன்சில் அழைத்துப் போவதில் இருந்து சிகிச்சை கொடுப்பது வரை சஸ்பென்ஸ் திரில்லருக்கு இணையாக காண்பித்து,அந்த குடும்பத்தை, அந்த வீட்டை, அந்த காம்பவுண்டை, அந்த தெருவையே திகிலுக்கு உள்ளாக்கிய நிலமை போய்
இன்றைக்கு என்ன காய்ச்சலா என்று கேட்பது போல என்ன கொரோனாவா ஒண்ணும் பயப்பட வேண்டாம் இந்தாங்க 2ஆயிரத்து 500 ரூபாய் மெடிக்கல் கிட் இதில் இருப்பதை பதினாலு நாள் சாப்பிட்டா போதும் எல்லாம் சரியாகப்போகும் என்று தமிழக அரசு கொரோனாவை மிகச் சாதாரணமாக்கி ரணமாகிக் கிடக்கும் தமிழக மண்ணிற்கும் மக்களுக்கும் உள்ளபடியே பால் வார்த்திருக்கிறார்கள்.

எல்லாம் சரி ஆனால் அன்றாடம் சிலர் இறந்து போவதாகவும் தகவல் வருகிறதே என சந்தேகம் சாமிக்கண்ணு பாணியில் சிலர் கேள்விகேட்கக்கூடும் அவர்கள் எல்லாம் ஏற்கனவே பல்வேறு இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த எண்ணிக்கையும் சரிந்துவருகிறது என்ற மருத்துவ அறிக்கையையும் பார்க்கவேண்டும்.

இப்போது நிறைய பேர் இணையத்தை பயன்படுத்துவதால் இணை நோயைவிட கொடுமையான ‛இணைய' நோய்க்கு உள்ளாகியிருக்கின்றனர்

அது என்ன இணைய நோய்?

பட்டனைத் தட்டினால் கோடி தகவல்கள் இணயைத்தில் கொட்டிக் கிடக்குது

உணவோ,உடையோ,நகையோ,நட்போ,பாடல்களோ திரைப்படங்களோ,தாராளமாக இணையத்தில் கிடைக்கிறது

இதை குறிப்பிட்ட தேவைக்காக தேடுவதாலும் பார்ப்பதாலும் படிப்பதாலும் பிரச்னை ஏதுமில்லை ஆனால் எங்கே பிரச்னை வருகிறது என்றால் மருத்துவ தகவல்களை தேடும்போதுதான்.

படிக்கும் என்னைப் போன்ற மருத்துவர்களையே குழப்பும் வகையிலும் சவால்விடும் வகையில் மருத்துவ குறிப்புகள் விரவிக்கிடக்கிறது.

ஆளாளுக்கு அவரவர் அனுபவங்களை மட்டுமின்றி அடுத்தவர் அனுபவங்களை அவர்கள் மூலம் தெரிந்து கொண்டதை அரைகுறையாக புரிந்து கொண்டதை எல்லாம் மேதாவித்தனமாக நினைத்து பகிர்ந்து கொள்கின்றனர் இதில் பல கொஞ்சமும் உண்மைத்தன்மையின்றி ‛சும்மா 'பார்வர்டு செய்யப்பட்ட தகவல்கள்தான் என்பதை அறியும் போது வேடிக்கையாக மட்டுமின்றி மற்றவர்களின் உயிரோடு இப்படி விளையாடுகிறார்களே என வேதனையாகவும் இருக்கிறது.

மருத்துவம் பற்றிய தகவல்களை படிக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் அதை பல முறை வடிகட்டித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

நோய் பொதுவானதாக இருந்தாலும் ஒவ்வொருவர் உடலுக்குகேற்ப நோயின் தன்மை மாறுபடும் நோயின் தன்மைக்கு ஏற்ப மருந்து மாறுபடும் அதன் வீரியத்திற்கு ஏற்ப மருந்தின் அளவு மாறுபடும் இப்படி பல விஷயங்கள் இருக்கின்றன இணையத்தில் படித்துவிட்டு நாமே போய் மருந்துக்கடையில் மருந்து வாங்கி சாப்பிடும் சமாச்சரம் அல்ல இது

என்னிடம் வந்த ஒரு பெண் நோயாளி தனக்கு வயிற்றில் கட்டி இருப்பதாகவும் அநேகமாக இது கேன்சராகத்தான் இருக்கும் ஆகவே சிடிஸ்கேன் எழுதிக் கொடுங்கள் என்று என்னை பேசவிடாமல் அவரே எல்லா முடிவுகளுடனும் வந்தார்.

தேவையில்லாத கதிர்வீச்சு மற்றும் செலவுகளுக்கு போவதற்கு முன் கொஞ்ச நேரம் முதலில் பேசுவோம் என்று பேசிய போதுதான் தெரிந்தது அவருக்கு வயிற்றில் கட்டி எதுவும் இல்லை என்பது, அவருக்கு பிரச்னை எல்லாம் மனதில்தான் இருந்தது இணையத்தை பார்த்து தன்னை நிறைய குழப்பிக்கொண்டிருந்தார் பிறகு நோய் நாடி நோய் முதல் நாடி என்ற அடிப்படையில் அவரின் பிரச்னை அறிந்து கொண்டு அடுத்த சில சந்திப்புகளில் பிரச்னையை எளிதாக தீர்க்க முடிந்தது.

இதே போல இன்னோருவர் தனக்கு முடி கொட்டுவதாகவும்,உடல் பருமனாகிக் கொண்டே போவாதாவும்,எப்போதும் சோர்வாக இருப்பதாகவும் தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்றும் தனது பிரச்னைக்கு மருந்தே இல்லை என்றும் சோகத்துடன் சொல்லியபடி வந்தார்.

என் இருபது வருட அனுபவத்தை வைத்து சொல்கிறேன் இது நடுத்தர வயதைத் தொட்ட லட்சக்கணக்கான பெண்களின் சாதாரண பிரச்னை இது உன் தனிப்பட்ட பிரச்னை அல்ல சரியான சாப்பாடு தேவையான உடற்பயிற்சி ஒய்வு எல்லாவற்றையும் விட சந்தோஷமான மனதும் சூழ்நிலையும்தான் மருந்து என்பதை சொல்லி அனுப்பிவைத்தேன் அடுத்த மாதம் பூங்கொத்துடன் வந்தவர் உடலிலும் மனதிலும் நிறைய மாற்றங்கள் ரொம்ப சந்தோஷமாக இருப்பதாக குறிப்பிட்டார்.

அன்றாடம் நான் சந்தித்த நுாறு பேர்களில் பத்து பேர் இப்படி இணையத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான் ,அதிலும் கொரோனா பற்றி அதிகம் இணையத்தில் பார்த்துவிட்டு அதை மனதில் போட்டு ரொம்பவே குழப்பிக் கொண்டுள்ளனர்.எப்போதும் அதே சிந்தனையாகவே பயந்து பயந்தே வாழ்க்கை நகர்த்துகின்றனர்.

காலையில் மனைவி கொண்டு வந்த காபியில் இருந்து மணம் வரவில்லையே கொரோனா வந்தால் ருசி பசி இருக்காது என்பார்களே இப்போது எனக்கு ருசி தெரியவில்லையே அப்படியானால் கொரோனா வந்துவிட்டது என்று கண்ணீர் விட காபி டம்ளரை பார்ப்பார்கள் அங்கே காபிக்கு பதிலாக வெறும் சுடுதண்ணீர்தான் இருக்கும் காபியை பிறகு கொடுக்கலாம் என மனைவி நினைத்திருப்பார் சுடுதண்ணீர் எப்படி மணம் தரும் ஆனால் இதற்குள் இவர் மனம் மரணம் வரை போய்வந்துவிட்டது.

நம்முடைய இருமல் எதில் சேர்த்தி?,மஞ்சள் துாளை விட மிளகு துாள் அதிகம் சேர்க்கலாமா?இரவு சாப்பிடும் தோசைக்கும் பேசாமல் ரசத்தையே தொட்டுக் கொள்ளலாமா?வலது பக்க நாசி வழியாக காற்றை வெளிவிடும்போது சிரமமாக இருக்கிறதே மூச்சு திணறல் ஆரம்பமாகிவிட்டதா?உட்கார்ந்து எழுந்தால் கால் வழிக்கிறதே? கம்ப்யூட்டரையே உற்றுப்பார்த்தால் கண் பார்வை மங்குதே? இரவு இரண்டு மணியானாலும் துாக்கம் வரமாட்டேங்குதே? என்று ஏகப்பட்ட உடல் மன ரீதியிலான பிரச்னைகளுக்கும் கொரோனாவிற்கு முடிச்சுப் போட்டுக் கொண்டு பயந்து பயந்து வாழ்ந்தது போதும்

ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் உட்கார்ந்து எழுந்தால் கால் வலிக்காது கொஞ்சம் கூட ஆடாமல் அசையாமல் மூன்று நான்கு மணி நேரம் உட்கார்ந்தே இருந்துவிட்டு எழுந்தால் எந்தக் காலாக இருந்தாலும் வலிக்கும் அதேபோல மணிக்கணக்கு என்பது போய் இப்போது மாதக்கணக்கில் கம்ப்யூட்டரையும் அதைவிட சிறிய மானிட்டரான மொபைல் போனையும் உற்றுப்பார்த்துக் கொண்டு இருந்தால் எந்தக்கண்ணாக இருந்தாலும் ‛டீம்' அடிக்கவே செய்யும்.கொஞ்சம் அறிவு பூர்வமாக யோசித்தீர்களேயானால் எல்லா பிரச்னைக்கும் காரணமும் நீங்களாகத்தான் இருப்பீர்கள் தீர்விற்கும் காரணம் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

அதே நேரத்தில் எல்லோரையும் இந்த பொதுப்பார்வையில் வைத்து பூட்டிவிடமுடியாது.

என்ன சாப்பிடலாம் எந்த மாதிரி உடற்பயிற்சி பெறலாம் எப்படி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளலாம் எதற்கு பயப்படலாம் எதற்கெல்லாம் பயப்படக்கூடாது எதைத் தவிர்க்கலாம் எதை தவிர்க்கக்கூடாது என்பது உள்ளீட்ட பல்வேறு விஷயங்களில் இந்த சில மாதங்களில் நிறையவே தெரிந்து கொண்டுவிட்டனர் ஆகவே புதிதாக எதைப்பார்த்தும் கேட்டும் படித்தும் குழம்பிக் கொள்ள வேண்டாம் நமக்கு உள்ள அடுத்த சவால் நமக்கும் நாட்டிற்கும் பலன்தரும் வகையில் நமது அடுத்த அடியை எப்படி எடுத்து வைப்பது என்பதாகத்தான் இருக்கவேண்டும்.அரசாங்கம் சொல்வதை மட்டும் கேளுங்கள் ஐசிஎம்ஆர் இணையதளத்தை மட்டும் பாருங்கள் உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைகளை மதியுங்கள் அவ்வளவுதான்.

கொரோனாவைப் பொறுத்தவரை நேர்மறையான விஷயங்களை மட்டுமே தரும் தகவல்களை படியுங்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள் இதுதான் வாழ்க்கை என்று இருப்பதை வைத்து திருப்பதியுடனும்,நம்பிக்கையுடனும் தைரியத்துடன் சுதந்திரத்துடனும் இருங்கள் காரணம் அதுதான் உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் மன நிம்மதிக்கும் அடிப்படையாகும்.

-டாக்டர் ஜெயஸ்ரீ ஷர்மா
மகப்பேறு மற்றும் பெண்நல மருத்துவர்
80560 87139

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (9)

 • Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா

  ரூபாய் 2500 க்கு மெடிக்கல் கிட கிடைப்பதாக செய்தி போட்டிருக்கிறீர்களே. எங்கு கொடுக்கிறார்கள். விபரம் தெரிவிக்கவும். அரசு செய்தியில் எங்கேயும் நான் பார்க்கவில்லையே? டாக்டர் ஜெயஸ்ரீ யிடமிருந்து மேலு விபரம் தேவை. நன்றி

 • Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. - Vilathikulam Pudur,இந்தியா

  சஸ்பென்ஸ் திரில்லர் போல இருந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாய் ரணமாகிக் கிடக்கும் தமிழக மண்ணிற்கும் மக்களுக்கும் உள்ளபடியே இதமாய் மருந்து கொடுத்து மன பயத்தை நீக்க உங்களை போன்ற தமிழில் அற்புதமாக கட்டுரை எழுதும் மருத்துவர்களால் மட்டும் தான் முடியும். பாமரனும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய அழகு தமிழில் கருத்துச் செறிவுடன் இயல்பாய் மருத்துவ சகோதரி எழுதி இருப்பது பாராட்டுக்குரியது. நம்முடைய இருமல் எதில் சேர்த்தி?,மஞ்சள் துாளை விட மிளகு துாள் அதிகம் சேர்க்கலாமா?இரவு சாப்பிடும் தோசைக்கும் பேசாமல் ரசத்தையே தொட்டுக் கொள்ளலாமா?வலது பக்க நாசி வழியாக காற்றை வெளிவிடும்போது சிரமமாக இருக்கிறதே மூச்சு திணறல் ஆரம்பமாகிவிட்டதா? உட்கார்ந்து எழுந்தால் கால் வழிக்கிறதே? கம்ப்யூட்டரையே உற்றுப்பார்த்தால் கண் பார்வை மங்குதே? இரவு இரண்டு மணியானாலும் துாக்கம் வரமாட்டேங்குதே? என்று ஏகப்பட்ட உடல் மன ரீதியிலான பிரச்னைகளுக்கும் கொரோனாவிற்கு முடிச்சுப் போட்டுக் கொண்டு பயந்து பயந்து வாழ்ந்தது போதும் .இந்த கருத்துக்கள் யதார்த்தத்தினை பிரதிபலிக்கின்றன. மனிதர்களின் மனம் எதையும் சாதிக்க வல்லது. மனதை தைரியமாக வைத்துக்கொள்ள நேர்மறை சிந்தனையுடன் எழுதி இருப்பது நிறைய மக்களுக்கு உதவியாய் இருக்கும். இதுதான் வாழ்க்கை என்று இருப்பதை வைத்து திருப்தியுடனும்,நம்பிக்கையுடனும் தைரியத்துடன் சுதந்திரத்துடனும் இருங்கள் காரணம் அதுதான் உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் மன நிம்மதிக்கும் அடிப்படையாகும். மறுக்க முடியாத தங்க வார்த்தைகள். அருமை. ஒரு மருத்துவராய் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள். துவண்டு இருக்கும் சமுதாயம் துடிப்புடன் மீண்டு எழ சகோதரியின் பங்கு அளப்பரியது .

 • Srinivas - Madurai,இந்தியா

  Excellent.... சூப்பர் Doctor....

 • Rajkumar - Pudukkottai,இந்தியா

  Excellent message Dr. You are very active and contributing significantly to awareness about COVID-19. Your explanation always appropriate and convincing

 • raghu - coimbatore,இந்தியா

  Superb. This is what we really need now. Thank you Doctor

 • raghu - coimbatore,இந்தியா

  Excellent. This is what we really need for this hour. Thank you so much Doctor

 • raghu - coimbatore,இந்தியா

  Super...This is what we really need for this hour. Very well explained. Thank you Doctor

 • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

  நன்றி மேம்

 • Hari Krishna - ,

  சூப்பர் மேடம் மிக்க நன்றி நன்றி

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement